யோகன் கார்ட்டூன்
————–
மேலும்....————–
மேலும்....புதுமை இலக்கியப் பூங்கா
ஆலங்காட்டுக் காளி
– இளமைப்பித்தன்
முனிசிபல் எல்லைக்கு அப்பால், ஒரு பெரிய மைதானம். அதைச் சுற்றிலும் பனந்தோப்பு; தூரத்தில் சுடுகாடு; சிற்சில சமயங்களில் நரிகளின் ஊளைச்சத்தம் காதைத் துளைத்துவிடும். இதற்கு நடுவில்தான் ஆலங்காட்டுக் காளியின் கோவில் இருக்கிறது. கோவில் சாதாரணமானதுதான். உள்ளே ஒரு சுற்றுப்பிரகாரம்; இடிந்து பாழ்பட்ட மதில் சுவர்கள். கதவு இல்லாத நுழைவாயில். எதிரே ஒரு பலி பீடம். அந்தக் கோவிலுக்குப் பூசையும் கிடையாது; பூசாரியும் இல்லை. ஆனால் அதற்குள் ஆவாகனமாகி நிற்கும் காளியின் சக்தியைப் பற்றிய கதைகளை என்னுடைய பாட்டியின் வாயிலாகக் கேட்டிருக்கிறேன். அவளுக்குக் காளியிடம் வரம் வாங்கிய புலவர்களைப் பற்றிப் பேசுவதென்றால் ஒரு அலாதியான உற்சாகம். அது கிடக்கட்டும் பழங்கதை!
மேலும்....முன்னோடி. . . பின்னோடி….? – கி.தளபதிராஜ் ‘ தமிழ்நாடு தமிழருக்கே’ கோரிக்கையை முதலில் எழுப்பியவர் மறைமலையடிகள் தான். தனித்தமிழ்நாடு கோரிக்கையை முன் எழுப்பியவர் பெரியார் இல்லை என்கிறார் மணியரசன். வழக்கமான அவரது புரட்டுக்கு மறுப்பு. இந்தியா ஒரு நாடா? என 1930களிலேயே வினா எழுப்பியவர் பெரியார். இந்தியா ஒரு நாடு ஆனால்தானே, இந்தியா முழுமையும் பற்றிப் பேச நமக்கு உரிமை உண்டு. இந்தியா ஒரு நாடாகியிருக்கின்றதா? இந்தியா, ஜாதிகள் காட்சிசாலையாக, சாமிகள் காட்சிசாலையாக இருக்கின்றதே ஒழிய […]
மேலும்....ஊருக்குள் வந்து உறக்கத்தைக் கெடுக்கும் புலியைப் பிடிக்க திறந்த கூண்டொன்று தயாரானது! கவிச்சி இறைச்சி வேண்டுமே, அதற்கு ஆட்டுக்குட்டி ஒன்று அங்கே கொண்டு வரப்பட்டது. காருண்ய சீலர்களின் கவனமும் கவலையும் அதன்பக்கம் திரும்பியது. உயிர்வதை இது, ஒருகணமும் அனுமதிக்க மாட்டோம் என்றனர். மாற்றுத் தீனி ஒன்று வேண்டுமே, இரத்த வாடையும் இருக்க வேண்டுமே, நம் வீட்டுக் குப்பையைக் கிளறிவிடும் கோழி அகப்பட்டது. தோலுரித்துத் தொங்கவிட்டால் புலிக்கு மூக்கு வேர்க்காமலா போகும்? அது நடந்தது, அருகிலுள்ள காட்டில்! காட்டிற்குச் […]
மேலும்....பெங்களூரை அடுத்த நெலமங்களாவில் உள்ள ஜெயநகரில் வசிப்பவர் ராஜ்குமார். இவர் செருப்புத் தைக்கும் தொழில் செய்து வருகிறார். இவரது மகன் சந்தோஷ் அங்குள்ள அரசுப் பள்ளியில் மூன்றாம் வகுப்புப் படிக்கிறார். சந்தோஷ் அங்குள்ள ருத்ரேஸ்வரா கோவில் பூசாரியால் தாக்கப்பட்டுள்ளார். இது குறித்து, தனது நண்பர்களுடன் கோவிலுக்குள் தண்ணீர் குடிக்கச் சென்றபோது கோவிலில் பிரசாதம் கொடுத்துக் கொண்டிருந்த-தாகவும், அதனை வாங்கச் சென்றபோது, பூசாரி இவர்களைத் தடியால் அடித்த-தாகவும், நண்பர்கள் தப்பியோடிய நிலையில் தான் மட்டும் மாட்டிக் கொண்டதாகக் கூறியுள்ளார் […]
மேலும்....