அரசுக்கு மதம் உண்டா?

– கவிஞர் கலி.பூங்குன்றன்

கேள்வி: மதச்சார்பற்ற அரசியல் கட்சிகளுடன்தான் கூட்டுச் சேர்வோம் என்று சில அரசியல் கட்சிகள் கூறுகின்றன. அப்படி ஒரு அரசியல் கட்சி உள்ளதா? அதன் பெயர் என்ன?

பதில்: இருக்கிறதே என் கற்பனையில்! அதன் பெயர் உன்னத இந்தியர் கட்சி! எல்லா மதங்களையும் சார்ந்த மக்களை அரவணைத்து மதிப்பளிக்கும் பண்பைத்தான் மதச்சார்பற்ற என்கிறோம். அப்படி தாங்கள் —இருப்பதாகத்தான் எல்லாக் கட்சிகளும் சொல்கின்றன. ஆனால் வோட்டு வங்கி அரசியல் இதைப் பொய்யாக்கிவிடுகிறது. பலவித நாடகங்கள் அரங்கேறுகின்றன. அதில் ஒன்றுதான் உங்கள் கவனத்தைக் கவர்ந்துள்ள அறிக்கை.

மேலும்....

எல்லாமே அந்த அம்மாதானே…!

ன் உடல் நலத்தைப் பேணவும் எனக்குப் பின் கழகத்தை நடத்திச் செல்லவும் சொத்துக்களைக் காக்கவும் நம்பிக்கையான வாரிசு மணியம்மை. (25.9.1949)

ணியம்மையார் இயக்கத் தொண்டுக்கென்றே என்னிடம் வந்த இந்த 20 ஆண்டில் எனது வீட்டு வசதிக்கான பல காரியங்களுக்கு, தேவைக்கு உதவிசெய்து வந்ததன் காரணமாக என் உடல்நிலை எப்படியோ என் தொண்டுக்குத் தடையில்லாமல் நல்ல அளவிற்கு உதவி வந்ததால், என் உடல் பாதுகாப்பு, வீட்டு நிர்வாகம் ஆகியவற்றில் எனக்குத் தொல்லை இல்லாமல் இருக்கும் வாய்ப்பை அடைந்தேன்.

– விடுதலை 15.10.1962

மேலும்....