தமிழ்ப் பல்கலையில் ஜோதிடக் கல்வியா?

தி     இந்து தமிழ் நாளிதழில் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் விளம்பரம் ஒன்று பார்த்தேன். தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் திரு. திருமலை அவர்கள் கடவுள் நம்பிக்கை  உள்ளவர் என்றாலும் .தந்தை பெரியார் பற்றாளர். அவரிடம் அன்பான வேண்டுகோள்: தயவுசெய்து ஜோதிட பட்டயப் படிப்பை நீக்கி சமுதாயம் சிறக்க உதவுங்கள். ஜோதிடவியல் ஓராண்டு பட்டயப் படிப்பு அறிவிப்பு வந்துள்ளது. ஜோதிடவியல் படிப்பை ரத்து செய்ய வேண்டும். ஜோதிடம் என்பது அறிவியல் அன்று, மூடநம்பிக்கை. .அரசு, அறிவியல்பூர்வமான கருத்துகளை […]

மேலும்....

துளிச் செய்திகள்

கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் சிறைத் தண்டனை பெற்ற லாலு பிரசாத் யாதவ் நவம்பர் 13 அன்று ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்திய தண்டனைச் சட்டத்தின்படி ஓரினச் சேர்க்கை குற்றம் என்றும் அதற்கு அதிக பட்சமாக ஆயுள் தண்டனை வழங்கப்படலாம் என்றும் உச்ச நீதிமன்றம் டிசம்பர் 11 அன்று தீர்ப்பளித்துள்ளது. ஈரான் நாடு மனிதக் குரங்கினை வைத்த பஜோஹேஜ் ராக்கெட்டினை டிசம்பர் 14 அன்று விண்ணில் செலுத்தியுள்ளது. ஸ்டெம் செல்களிலிருந்து சிறுநீரகத்தை உருவாக்கி ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து பல்கலைக்கழக விஞ்ஞானிகள் […]

மேலும்....

உங்களுக்குத் தெரியுமா?

மனைவியை அடித்து, கையை உடைத்த கணவன் மீது உயர் நீதிமன்றத்தில் வழக்கு வந்தபோது விசாரணை செய்த நீதிபதி முத்துசாமி அய்யர், மனுதர்மப்படி மனைவியை அடிப்பது குற்றமல்ல என்று தீர்ப்பளித்த வரலாறு உங்களுக்குத் தெரியுமா?

மேலும்....

மருத்துவ அறிவியலின் வெற்றி துடிக்கிறது…. உலகின் முதல் செயற்கை இதயம்

பிரான்ஸ் நாட்டில் வசிக்கும் 75 வயது முதியவருக்கு உலகின் முதல் செயற்கை இதய மாற்று அறுவைச் சிகிச்சையினைச் செய்து பாரிசில் உள்ள ஜார்ஜஸ் போம்பிடௌ மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த கார்மட் என்னும் உயிரி மருந்தியல் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்ட இந்தச் செயற்கை இதயம்  டென்மார்க்கைச் சேர்ந்த அய்ரோப்பிய ஏரோநாட்டிக் டிபன்ஸ் அன்ட் ஸ்பேஸ் (EADS) நிறுவனத்தால் மேம்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. லித்தியம் _அயன் பேட்டரியால் இயங்கக்கூடிய செயற்கை இதயத்தின் பேட்டரியினை உடலின் வெளிப்பகுதியில் அணிந்து […]

மேலும்....

பஞ்சகவ்யம் கங்காஜலம்

– தந்தை பெரியார்

சிலர் கடுதாசி எழுதும்போது கடவுள் துணை என்றுதான் எழுதுவது வழக்கம். கடவுளே துணை என்று ஏன் எழுதுவதில்லை தெரியுமா? கடுதாசி போய்ச் சேருவதற்கு ஸ்டாம்பு துணை, சரியான விலாசம் துணை, தபாற்காரரின் நாணயமும் துணை என்றாலும், கடவுளும் துணையாயிருக்கட்டுமே என்பது அதன் பொருள்! ஆனால் பெரியவர்கள் முதல் பெரியவர்கள் அல்லாதவர்கள் வரையில், இப்போது கடவுளே துணை என்று கூற ஆரம்பித்திருக்கிறார்கள்.

மேலும்....