திசைகள்?

திசைகள் நான்கென்கிறார் ஆசிரியர்சூரிய உதயம் மறைவுகிழக்கு மேற்கென்றும்சூரியனின் இடவலமெனதெற்கையும் வடக்கையும் புரிந்து கொள்கிறாள் சிறுமி திசையெட்டும் கொட்டுமுரசேபாடம் நடத்துகிறார் ஆசிரியர்வடகிழக்குப் பருவமழைதென்மேற்குப் பருவக்காற்றுதென்கிழக்கு ஆசிய நாடுகள்வடமேற்குத் திசையில் நகரும் காற்றெனதிசைகள் எட்டையும் மனதில் நிறுத்துகிறாள் கணக்கு வகுப்பில் காம்பஸ் வைத்து வட்டம் வரைகிறாள்குறுக்கும் நெடுக்கும் கோடுகள் இடுகிறாள்காகிதத்தின் மேல்பகுதியேவடக்கெனக் கற்றதைவைத்துநாற்திசைகளைக் கண்டுகொள்கிறாள் மேலும் இருகோடுகள் கிழித்துஎட்டுத் திசைகளைக் குறிக்கிறாள்சற்றே நிதானித்த சிறுமி மேலும் குறுக்கு வெட்டாக பல கோடுகள் போடுகிறாள்முடிவற்று கோடுகளை அருகருகே வரைந்தவாறிருக்கிறாள்.ஒரு வட்டத்திற்குத்தான் எத்தனை […]

மேலும்....

அய்யாவின் அடிச்சுவட்டில் … -112

அம்மாவின் கவலை சென்னைக் கடற்கரையில் 28.3.78 அன்று நடந்த கழகத் தலைவர் அன்னை மணியம்மையார் அவர்களின் இரங்கற் கூட்டத்தில் தி.மு.க.தலைவர் கலைஞர் அவர்கள் ஆற்றிய இரங்கலுரையின் தொடர்ச்சி… அன்னை மணியம்மையார் அவர்கள் பெரியாருடன் ஈரோட்டு மாளிகையில் வாழ்ந்த அந்தக் காலத்திலிருந்து அவர்கள் அருகேயிருந்து _ அவர் அன்னம் பரிமாற அதை அருந்தியவர்களில் ஒருவன் நான். இந்த மேடையிலே இருக்கிற நாவலர், பேராசிரியர் மற்றுமுள்ள நண்பர்கள் சிலராவது அந்த அளவுக்கு பெரியாருடனும் அன்னை மணியம்மையுடனும் பழகியிருக்கிறோம். ஒருவரைப் பார்த்து […]

மேலும்....

சிறீரங்கம் யானைப் பாகன் வேலை இழந்த கதை

திருச்சி மாவட்டப் பத்திரிகைகளால், அண்மை நாட்களில் அதிகம் பேசப்பட்டவர்.  இவர் யார் என்று விசாரித்த  போது  யானைப் பாகன் என்றார்கள். நாம் நேரில் சென்று சிவசிறீதரன் அவர்களிடம் பேசினோம்.  பின்புதான் தெரிந்தது, அவர் யானைக்குப் பாகன் மட்டுமல்ல; அந்த யானையின் நண்பர்! ஆண்டாள் என்ற பெயருடைய அந்த யானையுடன் 27 ஆண்டுகள் நண்பராக இருந்துள்ளார்.

மேலும்....

ஆசிரியர் பதில்கள்

கேள்வி : எல்லா மதங்களின் மீதும் சமநிலையில் நம்பிக்கை கொள்வதே உண்மையான மதச் சார்பற்ற கொள்கைக்கு அடையாளம் என்ற சோனியா காந்தியின் புதுவிளக்கம் குறித்து? _சா.கோவிந்தசாமி, பெரம்பலூர்

பதில் : நீண்டகாலமாக தவறாகச் சொல்லப்படும் விளக்கம் இது! மதச்சார்பற்ற என்ற சொல் தெளிவான சொல் ஆகும்! ‘Secular’ என்பதற்கு ஆங்கில அகராதிப்பொருள் மதத்திற்குச் சம்பந்தமில்லாத என்பதேயாகும். இப்போது சொல்லப்படும் தவறான விளக்கம் சர்.இராதாகிருஷ்ணன் போன்ற பார்ப்பனர்கள் அளித்த வியாக்யானம் ஆகும்!

மேலும்....

தசரதன் – இராமன் இராமாயணம்

– தந்தை பெரியார்

சென்ற இதழில் `கெடுவான் கேடு நினைப்பான் என்பது பற்றி தந்தை பெரியார் அவர்கள் நாத்திகப் பார்வையில் விளக்கம் அளித்திருந்தார். அதன் தொடர்ச்சியாக, ஆத்திக நோக்கில் இராமாயணத்தை உதாரணமாகக் கொண்ட பகுத்தறிவுக் கருத்து இந்த இதழில்…

ஆனால், இந்த வியாசத்தில், இப்பழமொழிக்கு (கெடுவான் கேடு நினைப்பான்) நாஸ்திக சம்பிரதாயமான கருத்தை ஆதாரமாக எடுத்துக் கொள்ளாமல்

மேலும்....