திராவிட மொழி அறிஞர் இராபர்ட் கால்டுவெல் 200ஆம் ஆண்டு பிறந்த நாள்

7.5.2014 அன்று திராவிட மொழி அறிஞர் இராபர்ட் கால்டுவெல் பாதிரியாரின் 200ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா! தமிழுக்கும் தமிழ்கூறும் நல்லுலகத்திற்கும் அளப்பரிய தொண்டு செய்தோர் தமிழ்ப் புலவர் பெருமக்களும், தமிழ் இலக்கியப் படைப்பாளிகளும் மட்டுமல்ல, அதன் மொழிக் கூறு எப்படிப்பட்ட மூத்த, முதிர்ந்த தன்மைகளைத் தன்னகத்தே கொண்ட மொழிக் குடும்பம் என்பதை வெளிநாட்டிலிருந்து கிறித்துவ மத போதகர்களாக வந்தவர்களாயினும், அவர்கள் செய்த ஒப்புயர்வற்ற பணி என்றென்றும் மறக்க இயலாத ஒரு திருப்புமுனைப் பணியாகும். ஆராய்ச்சி அறிஞர் […]

மேலும்....

அட்சய திருதியை!(?)

அட்சய திருதியையில் தங்கம் வாங்கினால் தங்கம் குவியும் என்ற ஆசையில்பெருமுயற்சியில் ஒரு கிராம் நகை வாங்கி, வெற்றிப் புன்னகையுடன் வீடு திரும்பியவள், அதிர்வடைகிறாள்கழுத்தில் இருந்தஇரண்டு பவுன் சங்கிலியைக் காணோமென்றுகூட்டத்தில் திருடியது தெரியாமல்! உங்கள் உழைப்பை மட்டுமே முழுதாக நம்பினால் போதும்! எல்லா செல்வங்களையும் அது கொண்டுவரும்! வாழ்க்கை உங்கள் கைகளில்தான் உள்ளது.. இதை உணர்ந்தாலே போதும்! தேவையற்ற வதந்திகளை நம்பாதீர்கள்! – முகநூலில் சூர்யா பார்ன் டு வின்

மேலும்....

உங்களுக்குத் தெரியுமா?

கோயில்களில் – மடங்களில் இருந்த நகைகள் எல்லாம் ஓமந்தூரார் ஆட்சியில்தான் மாற்றுப் பார்த்து விலை மதிப்பீடு செய்யப்பட்டு பதிவேடுகளில் பதியப்பட்டது என்பதும் அதற்கு முன் கொள்ளை அடித்துவந்த பார்ப்பனர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வந்தார்கள் என்பதும் உங்களுக்குத் தெரியுமா?

மேலும்....

நாத்திக அறிவியலாளர் விக்டர் ஜே. ஸ்டெஞ்சர்

–  நீட்சே

விக்டர் ஜான் ஸ்டெஞ்சர் (Victor J.Stenger) என்னும் அமெரிக்கர் ஒரு துகள் இயல்பியல் அறிவியலாளரும் (Particle Physicist), தத்துவ இயலாளரும், ஆசிரியரும், கடவுள், மத நம்பிக்கை அற்றவரும் ஆவார். துகள் இயல்பியல் அறிவியல் துறையில் ஓர் ஆராய்ச்சி அறிவியலாளராக தனது தொழில் வாழ்க்கையைத் தொடங்கிய இவர் இன்று புதிய நாத்திகம் என்ற அமைப்புடன் தொடர்பு கொண்டிருப்பது மட்டுமன்றி, புகழ் பெற்ற அறிவியல் நூல்கள் பலவற்றை எழுதியும் வருகிறார்.  இயல்பியல்,  சிறுஅளவிலான மின்காந்த ஆற்றல் இயந்திரவியல், விண்வெளி ஆய்வு, தத்துவம், மதம், நாத்திகம், போலி அறிவியல்கள் ஆகிய 12 நூல்களை இவர் எழுதி இதுவரை பதிப்பித்துள்ளார்.

மேலும்....