அது அந்தக் காலம்!

மதிய உணவுக்காக அரிசி கலைந்து கொண்டிருந்தாள் மருதாயி. தொலைபேசி அலறல் கேட்டு கையிலிருந்ததை அப்படியே போட்டுவிட்டு எழுந்து வந்தாள். அதை எடுத்துக் காதில் வைத்ததும் யாருங்க பேசுறது என்றாள். நீங்க பொன்னியோட அம்மாதானே? கேட்டது ஒரு பெண் குரல். ஆமா… பள்ளிக்கூடத்துல இருந்து உங்க மகளோட கிளாஸ் டீச்சர் பேசுறேன் சொல்லுங்கம்மா. அவளுக்குச் சரியா படிப்பு வரலையா… ராவெல்லாம் புத்தகமும் கையுமாத்தானே இருக்கா என்றாள் பதட்டத்துடன். அதுக்கில்லே. உங்க மக, ஏஜ் அட்டன் பண்ணியிருக்கா… எனக்குப் புரியும்படி […]

மேலும்....

மரண தண்டனை ஒழிக்கப்படுவதே சரியான அணுகுமுறை

கேள்வி : மாநில அரசுகள் விளம்பரம் செய்ய எந்த உச்சவரம்பும் இல்லையா?– சா. கோவிந்தசாமி, பெரம்பலூர் பதில் : மாநில அரசுகளின் விளம்பரங்கள் ஒவ்வொரு (ஆதரிக்கின்ற) ஜால்ரா ஏடுகளுக்கும் 5 அல்லது 6 முழுப்பக்க விளம்பரம் தமிழக அரசில் வந்ததை வைத்துக் கேட்கிறீர்கள் போலும்! மக்கள் வரிப்பணத்தை எப்படி வேண்டுமானாலும் செலவழிக்கலாம் என்பது, விழிப்புற்ற ஜனநாயகத்தில் நடக்காது. அதுதான் உச்சவரம்பு! கேள்வி : தமிழக முதல்வர் விளம்பரத்தின் மூலமாக தனது புகழை நிலைநிறுத்திக் கொள்ள வரைமுறை இன்றி […]

மேலும்....

ஒரு சிங்களரின் உள்ளத்திலிருந்து…

சிங்கள இன வெறியன் ராஜபக்சேவின் கடும் கோபத்திற்கு ஆளாகியிருக்கும் ஒரு சிங்களர்  நிமல்கா பெர்னாண்டோ. இனப்பாகுபாடுகள் மற்றும் இனவெறிக்கு எதிரான பன்னாட்டு அமைப்பின் தலைவி. மனித உரிமைச் செயற்பாட்டாளரான நிமல்கா கடந்த 3.3.2014 குங்குமம் இதழுக்கு அளித்த பேட்டியில் ஈழத்தமிழர்களுக்காகக் கொடுத்த குரலிலிருந்து… இப்போதுள்ள நிலையில், சுயமரியாதையோடும், சுதந்திரத்தோடும் தமிழ் மக்கள் இலங்கையில் வாழ்வது சாத்தியமில்லை என்பதே என் கருத்து. இலங்கை தேசிய கீதத்தைக்கூட தமிழில் பாட சுதந்தரமில்லாத ஒரு நிலையில் எப்படி இணைந்து வாழ முடியும்? […]

மேலும்....

இராமர் பாலக் கற்பனைக்கு எரியீட்டி – இராவணனின் இலங்கை எது? – புது ஆய்வு முடிவு

– பேராசிரியர் ந.வெற்றியழகன் கொக்கரிப்புக் கூக்குரல்கள்: இன்றைக்கு, பொருளியல் வழி ஆதாயமும் கூடுதல் பயனும் தரத்தக்க வரத்தக்க சேதுப்பெருங்கடல் திட்டத்தை இந்துமத இதிகாசமாகிய இராமாயணம் எனும் நூல் அடிப்படையில் இந்துமதவாதிகளும், இதை அடிப்படையாகக் கொண்ட இயக்கங்களும் கட்சிகளும் திட்டமிட்டு வரிந்து கட்டிக்கொண்டு இத்திட்டத்தை ஒழித்துக்கட்ட கூக்குரல் எழுப்பி வருகின்றனர். புராதனச் சின்னம் என்றும் புலம்பல் இந்தக் கும்பலுக்கு, அதிகார ஆட்சி மய்யமாக இருக்கும் இன்றைய தமிழ்நாடு அரசு, தனது முந்தைய கொள்கை அறிவிப்புக்கு மாறாக _ முரணாக […]

மேலும்....

புதுப்பா : நிஜ முகம் பெற்றுத் திமிறுவோம்

நெடிய இருள் கப்பியறைமுகங்கள்தான்நூற்றாண்டுகளில்எங்களுடையது. எச்சில்துப்பிக் கொள்ளமொந்தையும்தெருப்பெருக்கி தீட்டுக்கழிக்ககந்தையும் தவிரஎம்முண்ணோருக்குமறுக்கப்பட்டன உடைகள். மாராப்பு பறிக்கப்பட்டமார்புகளோடுஅலைந்து எம்பெண்களின்யோனிகளைத்தவிரமற்றெல்லாமே தீட்டாய்தெரிந்தனநூற்றாண்டுகளுக்கு. செவிகளில் ஊற்றப்பட்டதுஉறைந்த ஈயத்தை எடுத்துஆயதம் தயாரிக்கத் தெரியாத எம்மவர்க்குநூற்றாண்டுகளில் கடைசி நிமிடங்களில் கூடசரஸ்வதி பாய்விரிக்கவில்லை. ஊர்களுக்கு ஓர வெளியில்மாடறுத்து பறைசெய்த எம்மவர்கத்திகளுக்கு கழுத்தறுக்கத் தெரியாதபோதுநூற்றாண்டுகள் தோறும்கட்டுகளே கைகள். உழுதலுக்கு வந்தபோதுஆண்டைகளால் விசறியடிக்கப்பட்டபருக்கைக் கூலிகளைப் பொறுக்ககுனிந்துமோத தெரியாத எம்மனோர் தலைகளில்நூற்றாண்டுகள் பாரங்கள் கவிழ்ந்தனஎழ முடியாமல். அடுத்தடுத்த நூற்றாண்டுகளில்சில திமிறல்கள் ஒளிக்கீறல்களாகஉருவெடுத்தப்போது-அதையும்அபகரித்தனர் அவர்கள் சேரிகள் காலனிகளாயினஎம்மக்கள் அரிஜனங்களாக்கப்பட்டோர்கள். சைவம் நந்தனையும்வைணவம் சம்பூகனையும் ஆரியமும்காந்தியமும்எம்மையும் […]

மேலும்....