மதத்தை மறுப்பதா? கர்ப்பிணிக்கு மரணதண்டனை தந்த மதம்

இங்கல்ல… சூடானில்!

மதத்தை மறுப்பதா?

கர்ப்பிணிக்கு மரணதண்டனை தந்த மதம்

சூடானில் மரியம் யாஹ்யா இப்ராகிம் (வயது 27) என்பவருக்கு 20 மாத வயதுள்ள ஆண்குழந்தை உள்ளது. தற்போது எட்டு மாத கர்ப்பிணியாக உள்ளார். ஆனால், அப்பெண்ணின் தந்தை குழந்தைப் பருவத்திலேயே பிரிந்துவிட்டார். தனக்குத் தெரிந்தவரை தான் ஒரு கிறித்தவர் என்றே கருதி வந்துள்ளார்.

மேலும்....

பெண்ணுணர்வை மதிக்காதவரா பெரியார்? தொடரும் துரோகக் கும்பலின் புரட்டுக்கு மறுப்பு

அகநாழிகை எனும் அடிவருடி இதழ் ஒன்று ம.பொ.சி.யின் விட்ட குறை தொட்ட குறையாக ம.பொ.சி.யாரின் பேத்தி (தி.பரமேஸ்வரி என்பவர்), இதோ இன்றும் எங்கள் துரோகம் தொடர்கிறது என்று சொல்லும் வகையில் பெரியாரைக் கொச்சைப்படுத்தி எழுதிய ஒரு கட்டுரையை கடந்த மார்ச் மாத இதழில் வெளியிட்டுள்ளது. அவர் காலத்தில் வாழ்ந்த மற்ற பெரியார்களெல்லாம் ஒதுக்கப்பட்டு, ஈ.வெ.ரா பெரியார் என்னும் ஒருவருடைய அதிகபட்ச செயல்பாடுகளையும் மீறிய ஒரு பெரும் பிம்பத்தைக் கட்டமைத்து, ஆதரவானதோர் அலையைத் தொடர்ந்து உருவாக்கி வரும் ஒரு கூட்டத்தார்,

 

மேலும்....

மாணவர்களும் பொதுநலத் தொண்டும்

மாணவர் கழகத்தின் சார்பாக அழைக்கப்படும் யாரும் மாணவர்களைப் புகழாமல் செல்வதில்லை என்பது உங்களுக்குத் தெரியும்.

மாணவர்கள் நிலை நிரந்தரமானதல்ல; என்றுமே ஒன்றுபோல் இருப்பதில்லை. நேற்று குழந்தைகளாய் இருந்தவர்கள்தான் இன்று பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் மாணவர்களாய் படித்து வருகிறீர்கள். நாளை நீங்கள்தான் பெரியவர்களாய் வாழ்க்கை நடத்தப் போகிறீர்கள்.

 

மேலும்....

ஆதிசங்கரன் X விவேகானந்தர்

மே 5! கார்ல் மார்க்ஸ் 196ஆம் பிறந்த நாள்! அதேநாளில் ஆதிசங்கரன் பிறந்த நாள் என்று அக்கிரகாரம் அறிவித்தது. அதுவும் ஆதிசங்கரனின் 2524ஆம் ஆண்டு பிறந்த நாள் என்று பிரச்சாரம்! தினமணியைப் பாருங்கள்.

ஆர்யாம்பாள் எனும் விதவைப் பார்ப்பனப் பெண்மணியின் மகன் சங்கரன். 32 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்து இறந்தவன். (பொது ஆண்டு 775_807). இதுதான் வரலாற்று நூல்களில் தெரிவிக்கப்பட்டுள்ள செய்தி. பத்ரிநாத், துவாரகா, பூரி, சிருங்கேரி எனும் நான்கு ஊர்களில் நான்கு மடங்களை நிறுவித் தன் அத்வைதக் கருத்துகளைப் பரப்பிட ஏற்பாடு செய்தவன் என்பதும் வரலாறுதான்.

 

மேலும்....