திராவிடத்தால் வளர்ந்தோம்

திராவிடத்தால் வாழ்ந்து, திராவிடத்தால் கல்வி கற்று, இப்போது முழுப் பலனையும் அனுபவித்துக் கொண்டு, திராவிடக் கட்சியால் சீரழிந்தோம், திராவிட மாயையை அகற்ற வேண்டும் என ஏற்றிவிட்ட ஏணியை எட்டி உதைப்பது போல் உளறிக்கொண்டு இருக்கும் அரைவேக்காடுகளுக்கு ஒரு சிறிய எடுத்துக்காட்டு. 1911_வாக்கில் நடந்த வர்ணாசிரம (குலக்கல்வி) பள்ளிப் பாடம்: 1.    இவன் தச்சன்_மரவேலை செய்கிறான்2.    இவன் குயவன்_மண்பாண்டம் செய்கிறான்3.    இவன் கொல்லன்_இரும்புவேலை செய்கிறான்4.    இவன் அம்பட்டன்_முகச்சவரம் செய்கிறான்5.    இவன் வண்ணான்_துணி வெளுக்கிறான்6.    இவன் வாணியன்_எண்ணெய் ஆட்டுகிறான்7.    இவன் […]

மேலும்....

சிறப்புச் சிறுகதை – வேலை

– இமையம்

சாமியெ மொதல்ல கும்பிடு. அப்புறமா மெயில ஓப்பன் பண்ணி இண்டர்வியூக்குப் பதில் சொல்லலாம். வா, வந்து சாமியக் கும்பிடு என்று பெருமாள் சொன்னார்.  இருப்பா அம்மாவையும் தங்கச்சியையும் கூப்புட்டுக்கிட்டு வர்றேன் என்று சொன்ன தனுசு விமலாவையும் சாந்தியையும் அழைத்துக் கொண்டு சாமி கும்பிடுகிற இடத்திற்குப் போனான். எதுக்கு நிக்குற? கற்பூரத்த ஏத்து என்று பெருமாள் சொன்னதும் விமலா கற்பூரத்தை ஏற்றினாள். முதலில் எல்லா சாமிப் படங்களுக்கும் தீபத்தைக் காட்டினாள்.  அடுத்ததாக தனுசுவிற்குக் காட்டினாள்.  அப்போது விமலாவினுடைய கண்கள் கலங்கின. அதைப் பார்த்த பெருமாள், வாழ்க்கையிலெ கடவுளு இன்னிக்கித்தான் நல்லது பண்ணியிருக்கான். இந்த நேரத்திலெ நீ ஏம்மா அழுவுற?

மேலும்....

ஊழ்

– கலைஞர்

புயலும் மழையும் ஓய்ந்து ஊர்மக்கள் வெளியில் தலைகாட்டத் தொடங்கினார்கள். ஆங்காங்கே பெருமரங்கள் அடியற்றுக் கிளைகளுடன் வீழ்ந்து கிடந்தன. காற்றுக்கு வளைந்து கொடுத்துத் தப்பித்துக் கொள்ளும் நாணலும், படுகை மண்ணோடு தூக்கியெறியப்பட்டுத் தலைகுப்புறச் சாய்ந்து கிடந்தது. ஊர்க் கோவிலின் கோபுரத்துக் கலசம், ஒரு கல் தொலைவுக்கப்பால் உருண்டு கிடந்தது. கால்நடைகள் ஒன்றிரண்டு தெருக்களில் மூச்சற்றுக் கிடந்தன. கிழங்கள் நடுங்கும் மேனியைப் போர்த்துக்கொண்டு தங்கள் இல்லத்துத் திண்ணைகளில் படுத்திருந்தன. வீதிகளில் தேங்கியிருந்த மழைநீர்க்குட்டைகளில் குறும்பு செய்யும் இளைஞர் கூட்டம்

மேலும்....

ஆரியக் கடவுள்கட்கு ஓர் அறைகூவல்!

(இரண்டாம் உலகப் போர் காலத்தில் அறிஞர் அண்ணா அவர்கள் எழுதியது இந்தக் கட்டுரை.  வடக்கு, மேற்கு எல்லைகளில் இந்திய ராணுவம் விழிப்பாக இருக்க வேண்டிய அளவுக்கு இந்தியாவுக்குப் போர் அச்சுறுத்தல்கள் இருக்கத்தான் செய்கின்றன. எனவே, அண்ணாவின் சிந்தனையைத் தாங்கிய அந்த நாள் எழுத்துக்கு இன்றும் அவசியம் இருக்கிறது. படியுங்கள்; அது சரிதான் என்பது புரியும்)

மூவரே! தேவரே! சூரியசந்திராதியரே! இந்திரனே, வாயு வருண அக்னியாதிகளே! கந்தா, விநாயகா! காளி! வீரபத்திரா! நாரதா! மற்றுமுள்ள ஆரியக் கடவுள்களே! உங்கள் அனைவரையும், சுயமரியாதைக்காரர்கள், கண்டிக்கிறார்கள், மூடமதியிலே முளைத்த காளான்கள் என்று கூறுகின்றனர்,

மேலும்....

சங்ககாலம் பொற்காலமா? – ஒரு பகுத்தறிவுப் பார்வை

– பேராசிரியர் ந.வெற்றியழகன்

எதனைச் சங்ககாலம் என்பது:

சங்ககாலத் தமிழர் வாழ்வியல்  _ பற்றி ஆய்வு செய்வதற்கு முன்னர் சங்கம் என்பது எந்தச் சங்கத்தைக் குறிக்கும்? என்று தெளிவுபடுத்துவது தேவை.

ஏற்கெனவே இருந்ததாகக் கூறப்பட்டு அவை கடற்கோளால் கொள்ளப்பட்டுப் போயின என்பது நமக்குத் தேவையில்லை.

மேலும்....