பெரியாராம் பேரண்டம்!

இருளை வெடிவைத்துப்பிளந்த எரிமலை!இன உணர்வை ஏற்றிய தீபம்! ஆயிரங் காலத்துஅடிமைச் சேவகத்தைஅடி தெரியாமல் நொறுக்கிய பூகம்பம்! ஆணவச் சிரிப்பின்அடங்கா ஆரியத்தைஅக்னிச் சிரிப்பால்அழித்திட்ட அரிமா! பிறவிப் பேதசமுத்திரக் காட்டைஅறிவுப் புனலால்உறிஞ்சிய அகழி! எங்கே எங்கேஏற்றத் தாழ்வென்றுமுகவரி தேடிமோதிய வேழம்! மதமாம் யானையைசம் ஹாரம் செய்துமன்பதை காத்திட்டமானுட மீட்பர்! அமைதித் தேன்குழல் தென்றல் காற்றைவையத்து வாயினில்ஊட்டிய செவிலி! யாரிந்த மானுடர்?ஈரோட்டுத் தொட்டிலில் குழந்தையாய்ப் பிறந்தபெரியாராம் பேரண்டம்! – கவிஞர் கலி. பூங்குன்றன்

மேலும்....

தலைவர்கள் போற்றும் தலைவர்!

தலைவர்கள் போற்றும் தலைவர்! கொள்கைக் குன்றம் இன்று நான் கழகப் பணியாற்றுவதாயிருப்பினும், பொதுப் பணி ஆயினும், கலைப் பணி ஆயினும், எழுத்துப் பணி ஆயினும், கொள்கைப் பிரச்சாரப் பணியாயினும், முரசொலி நாளேட்டுப் பணியாயினும் ஓய்வு கொள்ளாமல், உறக்கம் கொள்ளாமல், உணவு கூட அருந்தாமல் உழைப்பதற்குப் பயிற்சி பெற்றிருப்பது, குடிஅரசு அலுவலகத்திலும் ஈரோடு இல்லத்திலும் அந்தக் கொள்கைக் குன்றம் பகுத்தறிவுப் பகலவனிடம்தான் என்பதை எண்ணியெண்ணி இப்போதும் இன்பம் காணுகிறேன். – முத்தமிழறிஞர் கலைஞர் ஆயிரம் ஆண்டெனும் மூதாட்டி ஆயிரம் […]

மேலும்....

விநாயகனின் மர்ம விளையாட்டுகள்

கிராமங்களில் இந்துக்கள் என்ற அடையாளத்தோடு தாழ்த்தப்பட்டோர் குடியிருக்கும் சேரிக்குள்ளும் வரச் சொன்னால், தனக்குத் தீண்டாமை ஒட்டிக் கொள்ளும் என்று சிலிர்த்துக் கொண்டு போகும் இந்துக் கடவுள்கள்; நகரங்களில் தாழ்த்தப்பட்ட இளைஞர்களுக்கு இந்துக்கள் என்று முக்கியத்துவம் கொடுத்து; இந்துக்கள் அல்லாத இஸ்லாமியர் தெருவழியாக அதுவும் மசூதிகள் வழியாகத்தான் போவேன் என்று பிள்ளையார் அடம் பிடிப்பதன் மர்மம் என்ன? சென்னை மீனவர்களை இந்துக்கள் என்று அடையாளப்படுத்தி, விநாயகரை மீனவர் குடியிருப்புகளுக்கும் மீனவரை விநாயகர் ஊர்வலத்திற்கும் சிறப்பு அழைப்பாளர்களாக அழைத்துச் செல்லும் […]

மேலும்....

மதுரை மீனாட்சி

புதுமை இலகியப் பூங்கா மதுரை மீனாட்சி – ஏ.வி.பி.ஆசைத்தம்பி திராவிட இயக்க எழுத்தாளர்களுள் ஒருவர். தனி அரசு, திராவிட சினிமா இதழ்களின் ஆசிரியர். வாலிபப் பெரியார் எனப் புகழப்பட்டவர்.சிறந்த பேச்சாளர், நாடக ஆசிரியர் என்பதுடன் திரைப்படங்களுக்கும் வசனம் எழுதியுள்ளார். தமிழக சட்டமன்ற உறுப்பினராகவும், தமிழக சுற்றுலா வாரியத் தலைவராகவும், இந்திய நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளார். மதுரைக் கல்லூரியிலே படித்தாள் கட்டழகி மீனாட்சி. வகுப்பிலே வெளியூர் மீனாட்சிகள் இரண்டு பேர் இருந்தனர். அதனாலேதான் மதுரை மீனாட்சி என்று அவளுக்குப் […]

மேலும்....

அருந்ததி தெரியுறதா?

எது தமிழ்த் திருமணம்? (4)

அருந்ததி தெரியுறதா?

–  சு.அறிவுக்கரசு

புறநானூற்றுக் காலத்தில் சடங்குகள் இல்லை. சிலப்பதிகாரக் காலத்தில் மாமுது பார்ப்பான் புரோகிதராக இருந்து சப்தபதி சுற்றச் செய்த சடங்கு நுழைந்துவிட்டது. பார்ப்பனப் புரோகிதருடன் கூடவே சடங்கும் நுழைந்துவிட்டது.

மேலும்....