இதய நோய் அய்யங்களும் விளக்கங்களும்

இதய நோய்கள் வருவது பற்றி பல்வேறு செய்திகள் இணையத்தில் உலாவிக்கொண்டே இருக்கின்றன. எது உண்மை, எது பொய் என்று தெரிந்திருப்பது மிகவும் அவசியமாகிறது. 1. இளம் வயதில் இதயநோய் வருமா? குழந்தைப் பருவத்தில் இருந்தோ அல்லது இளமைப் பருவத்தில் இருந்தோ ரத்தக் குழாயில் கொழுப்பு படிய ஆரம்பித்துவிடுகிறது. எதிர்காலத்தில் இந்தப் படிதல் அளவு அதிகரிக்கும்போது ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்படும். மாரடைப்பு என்று மருத்துவமனைக்கு  இளைஞர் முதல் முதியவர் வரை எல்லோரும் வருகின்றனர். உடல் பருமன், டைப் […]

மேலும்....

இதுவரை பார்க்காத முகம் மெட்ராஸ்

இதுவரை பார்க்காத முகம் மெட்ராஸ்   படம் தொடங்கியதுமே அன்பு பேசும் வசனங்-களிலும், வாய்ஸ் ஓவரிலும் இது யாரைப் பற்றிய, யாருக்கான படமெனத் தெளிவாகச் சொல்லிவிடுகிறார்கள். முக்கியமாக, எந்தக் குறியீடுகளுமின்றி. ஊர்ல யார் கொலையானாலும் போலீஸ் எங்க ஹவுஸிங் போர்டு ஆளுங்களத்தான் புடிச்சுட்டுப் போகும் என்கிறார். அன்பு என்பவன் அரசியல் அதிகாரம் ஒன்றுதான் தன் மக்களின் விடியல் என தீவிரமாக நம்புகிறான். ஆனால் கல்வியறிவு அந்த மக்கள் எல்லோரையும் அதற்குத் தயாராக்கும் என்பதை அறியாத கோபக்காரனாக இருக்கிறான். […]

மேலும்....

புதுப்பாக்கள்

  தாயின் அன்பு குறித்துநெஞ்சுருகப் பேசும் நாம்,என்றாவது ஒரு நாள்சிந்தித்துப் பார்த்ததுண்டா? அப்பாக்களுக்கு இருந்தசுதந்திரம் எல்லாம்,அம்மாக்களுக்கும் இருந்ததா என்று ….…………………………………………………கல்விக் கடவுள் சரஸ்வதிக்குஅப்படி என்ன கோபம்?என் கைநாட்டுப் பாட்டன்கள் மீது ………………………………………செவ்வாய் தோசத்தால்திருமணம் ஆகாமலேசெத்துப் போன ஜெயந்தி அக்காவிடம்யார் சொல்லுவார்?மங்கள்யானின் வெற்றியை ……………………………………………………………..உளிகள் அறியும்.கருவறையில் இருப்பதுகடவுள் அல்லகற்சிலை என்று ……………………………………………….களிமண்ணில் கடவுள் வடித்து,அதைக் காக்க காவலர் நிறுத்தி,கடைசியில்கடலில் கரைத்து,வீதி தோறும்நாத்திகப் பிரச்சாரம் .விநாயகர் சதுர்த்தி – ஓவியச்செல்வன்

மேலும்....

அய்யாவின் அடிச்சுவட்டில்… – 116 ஆம் தொடர்

சூளுரை நாள்   7.4.78-நெல்லை, 8.4.78-நாகர்கோவில் ஆகிய முக்கிய நகரங்களில் சூளுரை நாள் பொதுக் கூட்டங்களில் தொடர்ந்து கலந்துகொண்டு உரையாற்றினேன். அதில், அய்யா அவர்கள் 60 ஆண்டுக்காலம் இடையறாது சுயமரியாதைச் சூறாவளி வீசும்படியாகப் பயணம் செய்தார்கள். அய்யா அவர்களுடைய சுயமரியாதை இயக்கம் அய்ம்பதாண்டைத் தாண்டிய அதன் காரணமாக இந்த இயக்கம் பெற்ற வெற்றிகளை எல்லாம் தொகுத்துக் காட்டுவதற்காக, உலகத்துக்கு எடுத்துக்காட்டுவதற்கு அப்போது இந்த இயக்கத்தின் அடிநாள் தோழர்களாக, அய்யாவின் தொண்டர்களாக தங்களைத் தாங்களே அர்ப்பணித்துக் கொண்டு இருக்கின்ற […]

மேலும்....

மேடிசன் மோடி… மோகன்’லால்’ காந்தி!

பிரச்சாரத்திற்குப் போன காலத்திலெல்லாம் தப்புந்தவறுமாக வரலாற்றுச் செய்திகளைச் சொல்லிக் கொண்டுதிரிந்த மோடி, பத்தாண்டுகளாக நுழைய முடியாமலிருந்த அமெரிக்காவுக்குப் போவதற்காகவே பிரதமராகி, சகிக்க முடியாமல் அவர்களும் அனுமதித்துவிட்டார்கள். விசா மறுக்கப்பட்டுவந்த மோடிக்கு, அங்கே ரொம்ப காலமாக சம்மன் மட்டும் தயாராக இருந்தது வேறு கதை! நம் கதை… சாரி… மேடிசன் சதுக்கத்தில் பேசிய மோடியின் கதை என்னவென்றால், காந்திக்குப் புதுப்பெயர் வைத்தது தான். மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி என்று ஒன்னாப்பு படிக்கும் பிள்ளைக்குக் கூட சொல்லிக் கொடுக்கப்பட்டிருக்கும் நாட்டின் […]

மேலும்....