கருடனும் கருநாகமும்

  – ப.உ.சண்முகம் திராவிட இயக்கப் பேச்சாளர்களுள் ஒருவர். சட்டமன்ற உறுப்பினராகவும் மேல்சபை உறுப்பினராகவும், அமைச்ச ராகவும் பதவிகளை வகித்துள்ளார். கோடையிலே வாடி குளிர் நிழலில் அமர்ந்து கூவும் குயிலும், கதிரவன் ஒளியை மறைத்திடும் கார்முகில் கண்டதும் கலாபம் விரித்தாடும் மயிலும், அம்புலியின் அழகைக் கண்டதும் சிரிக்கும் அல்லியும், பனிபோக்கும் பகலவனைக் கண்டதும் பல்லிளிக்கும் தாமரையும், காலத்தின் கரத்தால் பூவெல்லாம் காயாவதும், பருவத்தின் சேட்டையால் காயெல்லாம் பழமாவதும், இயற்கையின் விளையாட்டுகள் என்று எவரும் ஏற்றுக் கொள்வர். ஆனால்…. […]

மேலும்....

பிராமணாள் கபே!

  ஜாதிப் பெயரில் பல நிறுவனங்கள் செயல்படுகின்றன. அப்படி தங்கள் ஜாதிப் பெயரை வெளிப்படுத்துவதைப் பெருமையாகக் கருதுகின்றனர். ஆனால் பிராமணர்கள் பயன்படுத்தக்கூடாதா? பிராமணர்கள் மற்றும் பிராமணியத்திற்கு எதிராக திராவிடர் கழகம் போன்ற அமைப்புகள் பேசுவதற்குத் தடைவிதிக்க வேண்டும் என சிவகாசிப் பார்ப்பனர் ஒருவர் மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ள செய்தியை நாளிதழ்கள் வெளியிட்டுள்ளன. எந்த ஜாதிப் பெயரையும் பொது இடங்களில் பயன்படுத்தக்கூடாது என திராவிடர் இயக்கம் வலியுறுத்தி வந்ததால்தான், கடந்த திராவிட இயக்க ஆட்சிக் காலங்களில் […]

மேலும்....

வியாபாரியும் பிக்காரியும்

– மதிமன்னன்.சு

2014இல் இந்தியாவுக்கு ஒரு பிரதமரைத் தந்திருக்கும் குஜராத்தில் ஒரு பழமொழி உண்டு. ஜெனோ ராஜா வியாபாரி _ எனி பிரஜா பிக்காரி என்பது பழமொழி. உங்கள் மன்னன் வியாபாரி ஆனால் மக்கள் எல்லாம் பிச்சைக்காரர்கள் என்பது அதன் பொருள். வியாபாரி எனும் குஜராத்திச் சொல் தமிழில் எப்படி இடம்பெற்று தமிழ்ச் சொல் என்றே கருதப்பட்டு வருகிறது? பிக்காரி எனும் சொல் என் நண்பர்களால் வசவுச்சொல்லாகப் பயன்படுத்தப்பட்டது 1970களில்! எப்படி இது நிகழ்ந்தது? அதுதான் இந்தியாவின் பன்முகத் தன்மையின் விளைவு எனலாமோ?

மேலும்....

சிறுகதை : சட்டை

டேய் என்னடா இருக்கு அந்த அமெரிக்கால, இந்த மாதிரி கோவில் குளம்ன்னு இருக்காடா? இங்க பாரு கடற்கரை, மணல்ன்னு எவ்வளோ ரம்மியமா இருக்கு என்றபடி மடித்துக்கட்டிய வேஷ்டியோடு அலைகளுக்கு மத்தியில் நின்று கொண்டிருந்தார். சித்தப்பா! ஒன் மந்த் வெக்கேசன்ல ஜாலியா இந்தியாவ சுத்திப் பார்ப்போம்னு வந்தா இப்படி கோவிலு குளம்னு சுத்திக் காட்றீங்களே. ஏதோ தனியா வர்றீங்களே கொஞ்சம் கம்பெனி கொடுப்போம்னுதான் வந்தேன். இல்லாட்டி இங்க வந்திருக்கவே மாட்டேன். அங்க இல்லாத பீச்சா சித்தப்பா!? இது என்ன […]

மேலும்....

ஆசிரியர் பதில்கள்

கேள்வி : வாக்களித்த ஏழை, எளிய மக்களின் வயிற்றிலடிப்பதைப் போல, பால் விலை உயர்த்தப்பட உள்ளது. ஆனால், ஒரு கல்லின் தலையில் இலட்சக்கணக்கான லிட்டர் பால் கொட்டி வீணடிக்கப்படுகிறது. தமிழ்நாடு அரசு அறிவுபூர்வமாக சிந்தித்து இதனைத் தடை செய்ய புரட்சிகரமான முடிவு எடுத்தால் அறிவுலகம் பாராட்டுமே.. செய்யுமா?– நெய்வேலி க.தியாகராசன், கொரநாட்டுக்கருப்பூர் பதில் : அறிவுலகம் பாராட்டும் அளவுக்கு துணிவுடன் செய்யும் பகுத்தறிவாளர் அரசு முகிழ்ந்தால் முடியக்கூடும்! கேள்வி : காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் […]

மேலும்....