பெரியாராம் பேரண்டம்!
இருளை வெடிவைத்துப்பிளந்த எரிமலை!இன உணர்வை ஏற்றிய தீபம்! ஆயிரங் காலத்துஅடிமைச் சேவகத்தைஅடி தெரியாமல் நொறுக்கிய பூகம்பம்! ஆணவச் சிரிப்பின்அடங்கா ஆரியத்தைஅக்னிச் சிரிப்பால்அழித்திட்ட அரிமா! பிறவிப் பேதசமுத்திரக் காட்டைஅறிவுப் புனலால்உறிஞ்சிய அகழி! எங்கே எங்கேஏற்றத் தாழ்வென்றுமுகவரி தேடிமோதிய வேழம்! மதமாம் யானையைசம் ஹாரம் செய்துமன்பதை காத்திட்டமானுட மீட்பர்! அமைதித் தேன்குழல் தென்றல் காற்றைவையத்து வாயினில்ஊட்டிய செவிலி! யாரிந்த மானுடர்?ஈரோட்டுத் தொட்டிலில் குழந்தையாய்ப் பிறந்தபெரியாராம் பேரண்டம்! – கவிஞர் கலி. பூங்குன்றன்
மேலும்....