அ.தி.மு.க. தலைமை சிந்திக்கட்டும்!

வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்த வழக்கில் அ.இ.அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளருக்கும், அவருடன் மற்ற மூவருக்கும் பெங்களூரு தனி நீதிமன்றம் கடந்த 27.9.2014 அன்று நான்கு ஆண்டு சிறைத் தண்டனையும், அபராதமும்  வழங்கியுள்ளதைக் கண்டு அ.தி.மு.க.வினர் அதிர்ச்சியும், துயரமும் அடைவது இயற்கைதான். அதற்கென  இனி உள்ள சட்டபூர்வ வாய்ப்புகள் – பிணை (ஜாமீன்)  கோரி, தண்டனையை நிறுத்தி வைக்கவும் அல்லது ரத்து செய்யுங்கள் என்று உயர்நீதிமன்றம் போன்ற மேல்முறையீட்டு நீதிமன்றங்களில் பரிகாரம் தேடி, வெளியே வர முயற்சிப்பதும்தான் சரியான வழிமுறை. […]

மேலும்....

1கோடியே,-68லட்சத்து,-97ஆயிரத்து-425-ரூபாய்,-மற்றும்-88-கிராம்-தங்கம்,-149-கிராம்-வெள்ளி-நகைகள்

சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாகத்தை தமிழ்க அரசின் இந்து சமய அறநிலையத்துறை எடுத்துக் கொண்டு 2009ம் ஆண்டு பிப்ரவரி 1ம் தேதி செயல் அலுவலரை அரசு நியமித்தது. இதனையடுத்து நடராஜர் கோயிலில் 9 இடங்களில் உண்டியல்கள் வைக்கப்பட்டன. இந்நிலையில், செயல் அலுவலர் நியமனத்தை ரத்து செய்து சுப்ரீம் கோர்ட் கடந்த ஜனவரி 6ம் தேதி உத்தரவிட்டது. மீண்டும் தீட்சிதர்களின் நிர்வாகத்தின் கீழ் கோயில் வந்தது. 2014 அக்டோபர் 7-ஆம்தேதி கடைசியாக உண்டியல் திறந்து எண்ணப்பட்டது. கடந்த 5 […]

மேலும்....

உங்களுக்குத் தெரியுமா?

1925 ஆண்டு காங்கிரஸ்காரரான கோவை அய்யாமுத்து புதுப் பாளையத்தில் நடத்தி வந்த ஆதிதிராவிடர் பாடசாலையில் பார்ப்பானை அய்யர் என்ற காலமும் போச்சே என்ற பாரதி பாடலை மாணவர்கள் பாடி வந்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்து, அதைப் பாடக் கூடாது என்று தடை போட்டவர் சந்தானம் அய்யங்கார் என்ற பார்ப்பனத் `தேசியத்’ தலைவர் என்பது உங்களுக்குத் தெரியுமா?  

மேலும்....

எது தமிழர் திருமணம்? – 6

– சு.அறிவுக்கரசு

1954ஆம் ஆண்டில் மதுரைத் திருவள்ளுவர் கழகத்தில் தமிழ்ப் பேராசிரியர் முனைவர் மா.இராசமாணிக்கம் உரையாற்றும்போது தமிழர் திருமணங்களில் ஆதியில் தாலி இருந்தது இல்லை என்றும் அது பாதியில் புகுந்தது என்றும் பேசினார். தினத்தந்தி நாளேட்டில் வெளியிடப்பட்ட அந்த உரையைப் படித்த ம.பொ.சி. என அறியப்பட்ட சிவஞான கிராமணி என்பவர் அதற்கு மறுப்புத் தெரிவிக்கும் மாதிரியில் உண்மைக்கு மாறானது எனும் தலைப்பில் தினத்தந்தி தீபாவளி மலரில் ஒரு கட்டுரை எழுதினார். இவர் தொடக்கத்தில் அச்சகத்தில் அச்சுக் கோப்பவராகப் பணியாற்றியவர். அதன் மூலம் தன் தமிழறிவைப் பெருக்கிக் கொண்டவர். விபச்சாரத்தில் தொடங்கி, மூடத்தனத்தில் வளர்ந்து முட்டாள்தனத்தில் முடிந்த கதை என்று தந்தை பெரியாரால் வருணிக்கப்பட்ட சிலப்பதிகாரம் எனும் தமிழ்க் காப்பியத்தைப் பயின்று, பாண்டித்யம் பெற்று எழுதியும் பேசியும் வந்ததால் சிலம்புச் செல்வர் என்று சிலரால் பாராட்டப்பட்டவர்.

மேலும்....

பெரியாருக்கும் நாஸ்டர்டாமசுக்கும் என்ன வேறுபாடு?

கேள்வி : தமிழ்த் தேசியவாதிகள், தமிழன் இந்து என்றும், சிவனைத்தான் பழைமைத்தமிழன் வணங்கினான் என்றும் கதை கட்டுகின்றனரே.. இதற்கான காரணமென்ன?
– செ.சி.பிரபாகரன், எழுமலை

பதில் : இந்து என்ற சொல் எந்த மொழி என்று இந்தப் புதுப் பதவிப் பைத்தியங்களைக் கேளுங்கள். பார்ப்பான் இவர்கள் கணக்கில் தமிழனா? அல்லாதவனா _ கேளுங்கள். பிறகு தெரியும் சிவன் படும் பாடு! உளறல்களுக்கு உலககெங்கும் இடம் உண்டே!

மேலும்....