அன்புள்ள அப்பாக்களுக்கு . . .

சமூகத்தின் அனைத்து நிலைகளிலும் ஆண்களின் ஆதிக்கமே மேலோங்கி இருக்கிறது. ஒரு குடும்பம் என்கிற போது ஆண் என்கிற அந்த அப்பாக்களின் செயல்கள்  அக்குடும்பத்தையே சிதைக்கிறது. வெளியில் சொல்ல முடியாமல் அவர்களின் மனைவிகள் வெந்துச் சாகிறார்கள்.

இவைகள் பொறுக்க முடியாமல் போகிற போதுதான் வன்முறைகளும், கொலைகளும்  தீர்வாக வந்து நிற்கின்றன. மனைவிகளுக்குக் கோபம் வராததும், அவமானமாய்த் தெரியாததும் அப்பாக்களுக்குச் சாதகமாய் இருந்து வருகிறது.

மேலும்....

விஸ்வரூபம் மதம் – ஊடகம் – அரசியல்

விஸ்வரூபம் விமர்சனம் எழுத வேண்டுமென்றால், படத்தை மட்டும் எழுத முடியாவண்ணம் திரையரங்குக்கு வெளியில் படத்தை விட முக்கியமான பல விசயங்கள் நடந்திருக்கின்றன. அவற்றைக் கருத்தில் கொள்ளாமல் வெறும் படம் என்ற அளவில் விஸ்வரூபத்தை நம்மால் கண்டுவிட முடியாது. இன்னும் சொல்லப்போனால், அவற்றை கடந்த மாதம் நடந்த நிகழ்வுகளோடு மட்டும் சுருக்கிவிட முடியாது. அதற்கு ஒரு நீண்ட வரலாற்றுத் தொடர்ச்சி இருக்கிறது.

(விஸ்வரூபம் தொடர்பான திரையரங்கம் – டி.டிஹெச் உள்ளிட்ட வியாபாரப் பிரச்சினைகளெல்லாம் நமக்கு முக்கியமில்லை.) இந்தப் படம் இஸ்லாமியர்களுக்கு எதிரானது என்ற எண்ணம் உருவானதால் மட்டும் தான் விஸ்வரூபம் எதிர்க்கப்பட்டதா என்றால், இல்லை என்பதே பதிலாக இருக்க முடியும்.

மேலும்....