மடல் ஓசை

போப் மாளிகை மர்மங்கள் செய்தி அநேகமாக தமிழ்நாட்டுக்குப்புதியது. ஆசீர்வாதக் கூட்டங் களுக்குப் படையெடுக்கும் ஆன்மீக அன்பர்கள் படிக்க வேண்டிய கட்டுரை. சில ஆண்டுகளுக்கு முன் ஒரு அய்ரோப்பிய நாட்டில் சிறுவர்களை வன்புணர்ச்சிக்கு ஆளாக்கிய பாதிரியார் களுக்காக போப் மன்னிப்புக் கேட்ட செய்தியை இந்தக் கட்டுரை எனக்கு நினைவுபடுத்தியது.   -கோ.ஜெயமுருகன், கோவிலாம்பாக்கம் அட்சய திருதியை பற்றி பல பத்திரிகைகள் புராணக்கதைகளைப்போட்டிருந்தன.ஆனால்,உங்கள் உண்மை மட்டும்தான் அதனால் ஏற்படும் தீமையைச்சுட்டிக்காட்டியிருந்தது. வியாபாரத்திற்காக எது வேண்டுமானாலும் செய்யலாம் என்ற நிலைக்குப் போய்விட்டார்கள். அரசாங்கம் […]

மேலும்....

அக்கிரகாரத்து அதிசய மனிதர் வ.ரா.வின் எழுத்தோவியம்!

மேதாவிகளுக்-கு குஷி வந்துவிட்டால், அவர்கள் சில உண்மைகளை வேடிக்கையாகச் சொல்லிவிட்டுப் போய்விடுவார்கள். அது மற்றவர்களுக்கு ஹிம்ஸையாக இருக்கிறது. அதைப்பற்றி யோசிக்க வேண்டியதாய் இருக்கிறது. யோசனை புரியாவிட்டால், மேதாவி ஏன் அப்படிச் சொன்னார் என்று கேள்வியைத் திருப்பித் திருப்பிக் கேட்டுக்-கொண்டே இருக்க வேண்டி இருக்கிறது. மேதாவிகள் தோன்றாவிட்டால், உலகம் எவ்வளவு இன்பத்தோடு தூங்கிக் கொண்டி-ருக்கும்! மேதாவிகள் தோன்றி, இப்பேர்ப்பட்ட உத்தமமான காரியத்தைக் கெடுத்துவிடுகிறார்கள். பாருங்கள்! ஒரு மேதாவி, மனித வர்க்கத்தை சந்தையில் கூட்டம் என்று வர்ணிக்கிறார். மனிதனுடைய வாழ்க்கையை […]

மேலும்....

ஈரோட்டுச் சூரியன் – 15

வீட்டை விட்டு வெளியேரிய இராமசாமி குழந்தை இறந்த துக்கம்கொஞ்சம் கொஞ்சமாகமறைந்தது;மகவின் நினைவுகள்மனதிலிருந்து மெதுவாகக் கரைந்தது.இராமசாமிவியாபாரத்தில்முழுக்கவனம் செலுத்தினார்;முடிந்தவரைவார்த்தைகளாலே மூடநம்பிக்கைகளைக் கொளுத்தினார்;சமுதாயத்தின் மீதுஇராமசாமியின் பார்வைஆழமாய்ப் பதிந்தது;அதில் மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும் என மனம் நினைந்தது;ஜாதிப் பிரச்சனைதீண்டாமைமூட நம்பிக்கைகள் எனதலைவிரித்தாடியது.அவற்றிற்கொரு கடிவாளம் கட்ட நினைத்தார்;சமுதாயப் பிரிவினைக்கும்தீண்டாமைக்கும்கடவுளைக் காரணம் காட்டியதால்கடவுளையும் கண்டித்தார்;அவ்வெண்ணங்களைதுண்டித்தார்;பேச்சளவில் இல்லாமல் செயலானார்;விவாதத்தில் புயலானார்;கருத்துகளைக்காரசாரமாக முன் வைத்தார்;பஜனை பாடும் பாகவதர்களைக் கேள்விகளால் தைத்தார்;பார்ப்பனர்களின் தீண்டாமையைத்தீண்டிப் பார்த்தார்;அவர்களிடம் தன் சந்தேகங்களைவேண்டிக் கேட்டார்;இறை நம்பிக்கை என்பதுகுருட்டுத் தனம் என்றார்;இப்படிக் கேட்பதுமுரட்டுத் தனம் என்றனர்;ஆம்..இராமசாமியின்சந்தேகங்களுக்குஎந்தப் […]

மேலும்....

கலைஞர் – 90

இந்திய அரசியல் வரலாறு காணாத அதிசயமாய் இடைவிடாமல் இயங்கிக்கொண்டிருக்கும் தி.மு.க தலைவர் கலைஞர். இந்த ஜூன் 3இல் 90 அகவையையைத் தொட்டிருக்கிறார். கலைஞரின் வாழிவில் நடந்த சுவையான நிகழ்வுகள் சில இங்கே : வாரியாரைத் திணறடித்த மாணவர் திருவாரூர் கோயில் கதாகாலட்-சேபத்தின் போது திருமுருக கிருபானந்த வாரியார் உயிர்க்கொலை செய்து உண்பதைத் தவிர்க்க வேண்டும். உயிர் உள்ளவைகளை உயிரோடு இருக்க அனுமதிக்க வேண்டும் என்றார். அப்போது கூட்டத்திலிருந்து ஒரு மாணவர் தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்பது தங்களுக்குத் […]

மேலும்....

கவிதை

வேடிக்கையா? வாடிக்கையா? சிலைக்கும் சிலையற்றதுக்கும் வேடிக்கைசிதறும் மனிதஉடல்கள் வாடிக்கைகொலையும் கொலைவெறியும் மதமானதுகுண்டுகள் வெடிப்பதால் நிஜமானது. மக்காத கொடிய நச்சுக்குப்பையால்மதமென்ற மரத்தை நட்டுவிட்டான்மனிதக் குருதியால் நீர்பாய்ச்சிமடமையின் உச்சத்தைத் தொட்டுவிட்டான். மடமை உண்டாக்கிய மதங்கள் மானுடப் பயிர்களை எரிக்கின்றதுகுலத்தை ஒழிப்பது கோடாரிக்காம்புகள்குவலயத்தை அழிப்பது கேடான வேதங்கள். மனநோயாளி செய்யும் குற்றத்திற்குமன்றத்தில் தண்டிக்கச் சட்டமில்லைமனநோயாளி யாக்கும் மதங்களைமண்ணைவிட்டு அகற்றத்தான் திட்டமில்லை அய்ந்துவேளை தொழுகை நடத்துவோர்க்கும்ஆறுகால பூசைகள் செய்வோர்க்கும்ஆரம்ப முதலே போராட்டம்ஆறாய் ஓடுதே குருதியோட்டம்.மனிதன் வணங்கும் வழிபாட்டிடம்மனித உயிர்களின் பலிபீடம்கொலையை கலையாய் கையாளுகிறான்தலைகொய்ய […]

மேலும்....