வாழ்க்கைத் துணைவிக்காக வாதாடிய பெரியார்
அய்யா அவர்கள் இரவு நீண்ட நேரம் கடையில் இருந்துவிட்டு வீட்டுக்கு வருவார். அய்யா வரும்வரை விழித்திருந்து உணவு பரிமாறுவார் நாகம்மையார். ஒரு நாள் நீண்ட நேரமாகியும் அய்யா வீட்டிற்கு வரவில்லை. எதிர்பார்த்துக் கொண்டிருந்த நாகம்மையார் அருகில் இருந்த தூணில் சாய்ந்தபடியே அயர்ந்து தூங்கிவிட்டார். அய்யா வீட்டிற்கு வந்ததுகூடத் தெரியாமல் தூங்கிக் கொண்டிருந்தார். இதனைப் பார்த்த அய்யாவின் அம்மா மருமகளை எழுப்பிச் சாப்பாடு எடுத்து வைக்கும்படிக் கூறியுள்ளார். அரைகுறைத் தூக்கத்தில் பதற்றத்துடன் எழுந்தார் நாகம்மையார். தூக்கக் கலக்கத்திலேயே சாதம் […]
மேலும்....