இவர்தான் பாரதியார்

தமிழர்களில் யாரொருவர் அறிவாளியாக இருந்தார்களோ அவர்களைக் கொச்சைப்படுத்துவது பார்ப்பனர்களின் சுபாவம். அதற்கு பாரதியாரும் விதிவிலக்கல்ல. பாரதியார் கட்டுரைகள் என்ற நூலில் (ஸ்ரீமகள் கம்பெனி வெளியீடு) சமூகம் என்ற தலைப்பில் பக்கம் 74இல் கீழ்க்கண்டவாறு கூறுகிறார். பகவன் என்ற பிராமணனுக்கும் ஆதி என்ற பறைச்சிக்கும் ஔவை, திருவள்ளுவர், கபிலர், பரணர், உப்பை, உறுவை, வள்ளி என்ற குழந்தைகள் பிறந்து… என்று எழுதியிருக்கிறார். பாரதியார் ஒரு கவிஞர்; ஆராய்ச்சியாளர் அல்ல. ஔவை, திருவள்ளுவர், கபிலர், பரணர் ஆகியோர் வாழ்ந்தது வரலாறு. […]

மேலும்....

அய்யாவின் அடிச்சுவட்டில்.. – 103

இஸ்மாயில் கமிஷன் வெளியிட்ட உண்மைகள்!

அவசர கால நிலையில் நாங்கள் அனுபவித்தவற்றை விவரித்து எழுதியுள்ள எழுத்தாளர் சோலை அவர்கள் தொடர்கிறார்.

ஆரம்ப காலங்களில் வீரமணிக்கும் அளிக்கப்பட்டது கல்லும், மண்ணும் கலந்த உணவுதான். சில நாள் வேப்பெண்ணை கலந்தும் கொடுத்தார்கள். சிறுநீர்கூட உணவில் கலக்கப்பட்டதை இஸ்மாயில் கமிஷன் அறிக்கை சுட்டிக்காட்டியிருக்கிறது.

மேலும்....

பெண்கள் தாங்களாகவே தங்களுக்கேற்ற துணையைத் தேடிக்கொள்ள வேண்டும்

இந்தத் திருமணம் சுயமரியாதைக்காரர் திருமணமேயொழிய, சுயமரியாதைத் திருமணமல்ல. உண்மையான சுயமரியாதைத் திருமண முறை வர இன்னும் நாளாக வேண்டும். இம்முறை என்னால் ஏற்பாடு செய்யப்பட்டது என்று சொன்னாலும், இது பழைய முறைக்கு மாறுதல் முறையாகும்.

மேலும்....

உடல் உறுப்புதானம் தமிழ்நாட்டிற்குப் பெருமை!

உடல் உறுப்பு தானத்தால் கடந்த 5 ஆண்டுகளில் 2,076 பேர் பயனடைந்துள்ளனர். சாலை விபத்துகளில் சிக்கி மூளைச்சாவு அடைந்த 83 சதவீதம் பேரும், தீவிர நோயினால் மூளைச்சாவு அடைந்த 17 சதவீதம் பேரும் உடல் உறுப்பு தானம் செய்கின்றனர். இவர்களில் 64 சதவீதம் பேர் 21 முதல் 50 வயதுக்குட்பட்டவர்கள். சாலை விபத்துகளில் சிக்கி மூளைச்சாவு அடையும் 80 சதவீதம் பேர் ஆண்களாகவே உள்ளனர். 10 லட்சம் பேரில் 1.1 சதவீதம் பேர் உறுப்பு மாற்று அறுவைச் […]

மேலும்....

துளிச் செய்திகள்

உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக தமிழகத்தைச் சேர்ந்த நாகப்பன் செப்டம்பர் 19 அன்று பொறுப்பேற்றுள்ளார். டெல்லி மாணவி பாலியல் வன்கொடுமை, கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 4 பேருக்கும் மரண தண்டனை விதித்து டெல்லி நீதிமன்றம் செப்டம்பர் 12 அன்று தீர்ப்பளித்துள்ளது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் குற்ற வழக்கு, சொத்து விவரங்களை வேட்பு மனுவில் மறைத்தால் மனுவை அதிகாரிகள் தள்ளுபடி செய்யலாம் என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. அணு ஆயுதங்களை ஏந்திக் கொண்டு கண்டம் விட்டுக் கண்டம் பாய்ந்து […]

மேலும்....