பெயர்க் காரணம்

கேள்வி: திருவாரூரில் கருணையானந்த பூபதி என்ற சித்தர் இருந்ததாகவும், அவருடைய நினைவாக உங்கள் பெற்றோர் கருணாநிதி என்று பெயரிட்டதாகவும் கேள்விப்பட்டோம். இது உண்மையா? பதில்: உண்மைதான், என்னுடைய தந்தை, கருணையானந்த பூபதி என்ற சித்தரிடம் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். அவர் நினைவாகத்தான் எனக்குப் பெயர் சூட்டினார். அந்த சித்தரின் மகன் கருணை எம். ஜமால்தான் முதன்முதலில் முரசொலியை அச்சடித்துக் கொடுத்தவர். முத்தமிழறிஞர் கலைஞரின் இலக்கியப் பேட்டியிலிருந்து.. நன்றி: இனிய உதயம் (ஜனவரி 2013)

மேலும்....

இந்தியா முழுதும் பேசப்பட்ட மொழி எது?

தமிழ் மொழி இந்தியா முழுமைக்குமாக பேசப்பட்ட மொழி. தமிழ் என்ற சொல் சமற்கிருதமய மாக்கப்பட்ட பிறகு தமிழா என்றும் தமிளா என்றும் உருமாறி பிறகு திராவிடமாகிவிட்டது. திராவிடம் என்பது தமிழர்களின் மொழியைக் குறிப்பிடுகின்றது. அது அம்மக்களின் இனத்தை அல்லது திராவிடம் என்பது தென்னிந்தியாவின் மொழி மட்டும் அன்று, ஆரியர் வருகைக்கு முன் தமிழ் மொழி இந்தியத் துணைக்கண்டம் முழுக்க பேசப்பட்ட மொழியாகும். தமிழ் காஷ்மீரத்தில் இருந்து குமரி வரையில் பேசப்பட்ட மொழி. இது உண்மையில் இந்தியா முழுவதும் […]

மேலும்....

சிறப்புச் சிறுகதை – தலைமுறைக் கிளிகள்

ஏன் உங்களுக்கு எந்த சம்பந்தமும் இல்லாத மாதிரி என்னையே குத்தம்  சொல்றீங்க? அவ பொறந்தததுல உங்க ளுக்கு எந்த  பங்கும் இல்லையா? வீட்டுக் குள்ளே இவ்வளவு சத்தம் போடுறீங்களே.. ரோட்டுல நின்னு அவ என் பொண்ணு இல்லைன்னு சொல்லுங்க..

மேலும்....

லோகாயதமும் புத்தமும்

சத் தரிசன சமுச்சயம் என்ற நூலுக்கு விளக்கவுரை எழுதிய மணிபத்ர என்பவர், சுவர்க்கம் போவது, நன்மை தீமை பற்றிப் பகுத்தறிவது ஆகியவைபற்றி வேதமோதிகளான ஏமாற்றுக்காரர்கள் மக்களை பொய்த்தோற்றம் காட்டி ஏமாற்றுகின்றனர். இத்தகைய புரட்டுகளைத் தோலுரிப்பதற்காகத்தான் உலகாயவாதிகள் புலன் அறிவை (இந்திரிய அறிவை) வலியுறுத்துகின்றனர் என்கிறார். அய்ம்புலன்களான கண்டு, கேட்டு, உண்டு, உயிர்த்து, உற்றறிதல் ஆகிய அய்ந்தினாலும் அறிவை மட்டுமே ஏற்றுக் கொள்ள முடியும் என்போர் லோகாயதவாதிகள்.

மேலும்....