துளிச் செய்திகள்

செக் குடியரசின் புதிய அதிபராக மிலோஸ் ஜெமன் மார்ச் 8 அன்று பொறுப்பேற்றார். புதிய போப் ஆண்டவராக அர்ஜென்டினா நாட்டைச் சேர்ந்த ஜார்ஜ் மேரியோ பெர்கோக்லியோ மார்ச் 13 அன்று தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சீன நாட்டின் புதிய பிரதமராக லீ கெகியாங் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். நேபாள நாட்டின் புதிய பிரதமராக கீல்ராஜ்ரெக்மி மார்ச் 13 அன்று பொறுப்பேற்றுள்ளார். மியான்மர் நாட்டின் எதிர்க்கட்சியான தேசிய ஜனநாயக லீக் கட்சியின் தலைவராக ஆங் சான் சூகி மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மேலும்....

கருத்து

பெண்களுக்கான உரிமைகளை நிலைநாட்டுவது என்பது தொடர் நிகழ்வாக இருக்க வேண்டும். பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்க, பாலியல் குற்றங்களுக்கு எதிராக கடுமையான சட்டங்கள் இயற்றப்படுவதைவிட நமது சமூகத்தின் மனப்பான்மையை மாற்றுவது மிக முக்கியம். – உச்சநீதிமன்ற மேனாள் நீதிபதி ஜே.எஸ்.வர்மா பாலச்சந்திரன் கொலை சர்வதேசத்தை உசுப்பி இருக்கிறது. சர்வதேசத்தை உசுப்ப சிறு குழந்தைகளின் மரணங்கள் தேவை எனும் ஒரு கொடிய உலகில் நாம் வாழ்கிறோம். உலகத்தின் மனசாட்சி முன்னால் இலங்கை தலைகுனிந்து நிற்கிறது. – சிங்கள பத்திரிகையாளர் […]

மேலும்....

காஸ்ட்ரோவின் வேண்டுகோள்!

அமெரிக்காவை எதிர்த்து நின்ற லத்தின் அமெரிக்க இடதுசாரித் தலைவர்களான பிரேசில் நாட்டு அதிபர் டில்மா ரூசுப், பர-குவே முன்னாள் அதிபர் பெர்னாண்டோ லூகோ, பிரேசில் முன்னாள் அதிபர் லூலா டா சில்வா போன்றோரும் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டவர்கள். தொடர்ந்து அமெரிக்காவை எதிர்த்து நிற்பவரும், அதன் பலவிதமான கொலை முயற்சிகளிலிருந்து தப்பித்தவருமான கியூபா நாட்டின் முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோ, சாவேஸ் அவர்களிடம் ஒருமுறை பேசுகையில், தொடர்ந்து அமெரிக்காவை எதிர்த்தவர்கள் இது போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டு உள்ளனர். எனவே, […]

மேலும்....

டெசோவின் பயணம் தொடரும்! தொடரும்!

உலகம் வெகு ஆவலாக எதிர்பார்த்த, ஜெனிவாவில் கூடி விவாதித்து, இலங்கையின் போர்க் குற்றங்களுக்காகவும், மனித உரிமை மீறல்களுக்காகவும், அங்கு நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலைகளுக்காகவும்,  இராஜபக்சே அரசு குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டு, பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு மட்டுமல்ல; இனி எதிர்காலத்திலும் எந்த ஒரு அரசும், இப்படிப்பட்ட காட்டுமிராண்டித்தனத்தில் ஈடுபடாதிருக்க ஒரு பாடம் புகட்டப்படுவதாகவும் அமைய வேண்டும் என்று விரும்பிய உலகத் தமிழர்கள் மற்றும் உண்மையான மனித உரிமை ஆர்வலர்கள் மிகப் பெரிய ஏமாற்றத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர்! இந்த ஆண்டு அமெரிக்கா கொண்டு வந்த […]

மேலும்....

திரிபுரா அரசின் தடாலடி

மூடநம்பிக்கை வியாபாரிகள்தான் அறிவியலைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், இணையம், சினிமா உள்ளிட்ட ஊடகங்களில் முதலில் நுழைபவர்கள் இவர்கள்தான். வெகு மக்களைச் சென்றடையும் ஊடகங்களின் மூலம் மக்களின் மூடநம்பிக்கையை வளர்த்துப் பணம் சேர்க்கும் கொள்ளைக்காரர்களாக உருவாகின்றனர். அரசோ, நீதிமன்றங்களோ இவர்களைக் கண்டு கொள்ளாமல் இருப்பதால் சாமியார்கள், ஜோசியக்காரர்களின் ஆட்சி ஊடகங்களில் பெருகிவிட்டது. இந்நிலையில் மிகச் சரியான நடவடிக்கையை அண்மையில் திரிபுரா மாநில மார்க்சிய கம்யூனிஸ்ட் அரசு எடுத்துள்ளது. ஜோசியர்களும், சாமியார்களும் மக்களை ஏமாற்றுகின்றனர். எனவே, […]

மேலும்....