மடல் ஓசை

ஆசிரியருக்கு வணக்கம். மக்களுக்காக _ அதுவும் மக்களால் புறந்தள்ளப்படும் மக்களுக்காகக் குரல் கொடுக்கும் உண்மையான இதழ் உண்மை. பெரியார் வழி கருத்துகள், மூடநம்பிக்கை ஒழிப்பு, உயர்ஜாதிக்காரனின் ஆதிக்கம் போன்றவற்றை உண்மை தட்டிக் கேட்பது சக மனிதனுக்கும், மக்களுக்கும் ஆறுதல் அளிக்கும் நிகழ்வு. கவிதைகளில் படைப்பாளிகளின் கவிதைத்தனத்தைக் காட்டாமல், சமூகத்தின் மீதான அக்கறையை மிகவும் உன்னிப்பாய் படைப்பாளிகளின் வரிகளில் கொண்டு வருவது உண்மையின் உண்மை. மதுமதி, ஓவியச்செல்வன், ஆசிரியர் பதில்கள் போன்ற பகுதிகள் படைப்பாளனுக்கும், வாசகனுக்கும் பெரிய எதிர்பார்ப்பையும், […]

மேலும்....

டுனீசியாவில் பெண்ணுரிமைக் குரல்

’என் (பெண்) உடல் என் (பெண்)னுடையது மட்டுமே’ பெண்ணுடல் மீதான உரிமை அவளையன்றி கிட்டத்தட்ட மற்ற அனைவருக்கும் உரியதாகக் கருதப்படுகிறது. மதம், ஜாதி, குடும்பம், சமூகம் என்று பலவும் அவள் உடல் மீது உரிமை கொண்டாடுகின்றன. அது மேற்கண்டோரின் கவுரவத்தின் அடையாளமாகப் பார்க்கப்படுகிறது. இந்தச் சூழலில் தன்னுடல் சார்ந்த தன் உரிமையை உரத்துப் பேச வேண்டிய தேவை பெண்ணுக்கு எழுகிறது. உலகளவில் எங்கெல்லாம் அடக்குமுறை ஏவப்படுகிறதோ, அங்கெல்லாம் அதற்கான எதிர்க்குரல் கிளம்புகிறது. 2008-ஆம் ஆண்டு உக்ரைனில் உருவான […]

மேலும்....

பள்ளி சென்றாள் மலாலா

பள்ளிக்குச் செல்ல முடியாத தனது அனுபவங்களை 11 வயதில் பிபிசி இணையத்தில் எழுதியவர் மலாலா. பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர். 2011ஆம் ஆண்டு உலகப் புகழ் பெற்ற டெஸ்மாண்ட் டூட்டு, உலக அமைதிக்கான குழந்தைகள் பரிசுக்கு மலாலாவின் பெயரினைப் பரிந்துரை செய்தார். அதே ஆண்டு டிசம்பரில் பாகிஸ்தானின் தேசிய இளைஞர் அமைதிப் பரிசு மலாலாவுக்கு அறிவிக்கப்பட்டது. 2012 அக்டோபர் 9 அன்று தேர்வு எழுதிவிட்டு வீட்டுக்கு வந்து கொண்டிருந்த மலாலா தலிபான்களால் சுடப்பட்டார். பெஷாவரில் உள்ள ராணுவ மருத்துவமனையில் […]

மேலும்....

அதிரடிப் பக்கம்

பழங்குடிகளின் சாமிகள் முதலில் வந்து பூஜை செய்து ஏசு வருவார் என்றாய்… அப்புறம் அவர்கள் வந்தார்கள். பூதிக்காடு மாரியைத் திருடிக்கொண்டு, கரட்டியம்மனையும் தூக்கி கிணற்றில் வீசிவிட்டு ரங்கநாதனே தெய்வம் என்று கூறி பூஜை செய்தார்கள். உங்கள் ஏசுவும், அவர்களின் ரங்கநாதனும் எங்களுக்கு அந்நியர்கள். மணியரசி, பூமிவீரன், பூதிக்காடு மாரி, கூரய்யன் போன்றவர்களே எங்கள் சாமிகள். அருங்காட்சியகத்தில் இருப்பதெல்லாம் எங்கள் சாமிகள் அல்ல… – இது பழங்குடி இருளர் மக்களின் பாடல்களில் ஒன்று. ஆதிக்க மதங்கள் அண்டிப் பார்த்து […]

மேலும்....

திருடர்களுக்கு உதவும் கடவுள்

– தேன் தினகரன் கடவுள் திருடர்களுக்கும் உதவுகிறார் என்றால் ஆச்சர்யமாக இருக்கிறதா? கோபாலன், கோவிந்தன் இருவரும் கோயில் உண்டியலை உடைத்து கொள்ளையிட்டுச் சென்றதாக காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு அந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது. முதலில் கோபாலனை விசாரிக்கிறார்கள். நீதிபதி: ஏம்ப்பா இதுக்கு முந்தி வீட்டில திருடுனதாக வழக்குப் போட்டு தண்டனை வாங்கி இருக்க? இப்போ கோயில் உண்டியலை உடைச்சி கொள்ளையடிச்சிருக்கிறியே! கடவுள் நம்பிக்கை கிடையாதா ஒனக்கு? கோபாலன்: அய்யா, நான் தீவிர முருகன் பக்தன்யா. நீதிபதி: […]

மேலும்....