மார்க்கண்டேய கட்ஜுவின் கருத்து சரியானதே!

நமது நாடு ஒரு ஜனநாயக நாடு. கருத்துச் சுதந்திரத்தை அதன் அரசியல் சட்டம் அனுமதித்துள்ளது; அதைவிட, இந்திய அரசியல் சட்டத்தின் முக்கியப் பிரிவான அடிப்படை உரிமைகள் (Fundamental Rights) என்பதில் பேச்சுரிமை, எழுத்துரிமை போன்ற பல உரிமைகள் குடிமக்களின் பிறப்புரிமையான ஜீவாதார உரிமையாகும். ஜனநாயகத்திற்கு அடையாளமே இது தான். இதற்கு மாறாக தங்களைப் பற்றி யாரும் விமர்சிக் கக் கூடாது, அப்படிப்பட்டவர்களை அடியோடு ஒழித்து விட வேண்டும் என்பது கடைந்தெடுத்த பாசீசம் ஆகும்! பன்மதங்கள், பல மொழிகள், […]

மேலும்....

புதுக்கவிதை

தோழர் இரா.சென்ராயன் எழுதியுள்ள உருவி எடுக்கப்பட்ட கனவு கவிதைத் தொகுப்பு இலக்கிய உலகின் கவனத்தை பெறக்கூடிய வகையில் சிறப்பாக அமைந்துள்ளது. அதில் சில கவிதைகள் தலைப்பே இல்லாமல், படிப்பவர்களே தலைப்பை ஊகித்து கொள்ளும்படிக்கு விட்டிருப்பது சிந்தனையை இன்னும் செம்மையாக்குகிறது. அதிலிருந்து சில கவிதைகள்… குடிநீர்என எழுதப்பட்டதொட்டியின் குழாயில்டம்ளரோடுஇழுத்துக்கட்டப்பட்டஇரும்புச்சங்கிலிஅறிவிக்கிறதுநீதிருடனென்று*** பறைஇசை வாளின் உறை.அடிக்க அடிக்ககாற்றின் கரத்தில்சுழல்கிறது வாள்.அதிகாரத்தின்மூச்சுக்காற்று திணறுகிறது.பதம் போதாதென்றுநெருப்பில் காய்ச்சப்பட்டுமுன்னெப்பொழுதைவிடமுன்னேறுகிறதுகாற்றின் பிடறியேறி.அதிர்கிறதுகோட்டை.***ஒளி புகும் சிறகுகள்அடுக்குமாடி வீட்டின்மூலையில்சிலந்தி பின்னிய நூலாம்படை.சில நாட்களுக்கு முன்னால்பூக்களைத் தேடி வந்துசிக்கிய தும்பியின்மிச்சமிருந்த ஒளிபுகும் […]

மேலும்....

முற்றம்

ஜின்னாவின் உண்மைக் கதை

பாகிஸ்தானின் தந்தை ஜின்னா பற்றிப் பல நூல்கள் வந்துள்ளன. பா.ஜ.க.வின் ஜஸ்வந்த் சிங் ஜின்னா குறித்து எழுதிய நூல் பரபரப்பைக் கிளப்பியதுண்டு. இந்த நூல் பரபரப்புக்காக எழுதப்பட்டதல்ல;ஒரு பொதுவுடைமைச் சிந்தனையாளரின் பார்வையில் ஜின்னாவின் பங்களிப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது.இந்துத்துவக் கருத்தாளர்களால் வில்லனகாச் சித்தரிக்கப்படும் ஜின்னா பற்றி, டி.ஞானையா என்ற மதச் சார்பற்ற பொதுவுடைமைவாதி எழுதியுள்ளது இன்றைய காலகட்டத்தில் முக்கியத்துவம் பெறுகிறது.`ஜின்னாவின் உண்மை வாழ்க்கையும் அவருடைய அரசியல் பரிணாம வளர்ச்சியும் சுவாரசியமாகவிருப்பதாலும் வரலாற்று உண்மைகள் பெரும்பாலும் இருட்டடிப்புக்கும்,திரித்துக் கூறுவதற்கும் புரட்டல்களுக்கும் ஆளாவதும் உண்மைதான் என்பது ஜின்னாவைப பற்றிய சித்திரங்கள் நிரூபிக்கின்றன என்பதாலும் ஜின்னாவின் உண்மைக் கதையை நாம் ஆர்வத்துடன் வெளியிடுகிறோம் என்கிறார் இந்நூலின் ஆசிரியர்.

மேலும்....

ஈரோட்டுச் சூரியன் – 10

நாகம்மையின் விரதத்தைக் கலைத்த இராமசாமி

– மதுமதி

இராமசாமிக்கும்
நாகம்மைக்கும்
திருமணம் நடந்தது;
தாயம்மைக்குள் நடந்த
போராட்டம் முடிந்தது;
தன் வழிச் செல்லும்
இராமசாமியை
உன் வழி அழைத்து வா
சொன்னது தாயம்மை;
தலையாட்டியது
நாகம்மை;

நல்ல மனையாளாக
முதலில் மாறிக்கொள்வோம்;
நல்ல மணாளனாக
அவர் மாறிக்கொள்வார்;

மேலும்....