புதுக்கவிதை
அப்பொதும்…. அது இப்போதும்…. கடந்து சென்றிருக்கிறேன்,கல்லுரி நாட்களில் வழிநெடுகபல கடவுளர் ஆலயங்களை.பத்துக்கல்இடைவெளிக்குள் பத்துக் கோயில்கள்;அந்தப் பத்தும்அப்போது கிழவி;இப்போது அழகி.எல்லாமே இழந்துசாகக் கிடந்த நோயாளியாய்,இடிந்து விழுவதற்குஅவைநாட்களை எண்ணிக்கொண்டிருந்தன.சுவரில்பூச்சுச்சதைகள் உதிர்ந்துகாச நோயாளியாய்கல் எலும்புகள் தெரிந்தன.பரமன் இடங்களில்பரதேசிகள் படுத்துக் கிடந்தனர்.அதிதுயிலில் ஆலய மூலையில் அன்னக்காவடிகள்.சாலையோரம்உள்ளிழுக்கப்பட்ட சில கோயில்கள்,வழிப்போக்கருக்குஒதுக்குப்புற கழிப்பறையானது.பிச்சைக்காரர்கள்அங்கு இல்லறத்தை இனிதாக்கிய வேளைகளில்இறைவன்தலையிட்டு, தடையிட்டுஎந்தத் தாக்கீதும் அனுப்பியதில்லை.திரைப்படம்இரண்டாம் ஆட்டம் பார்த்துவரும்கிராமத்து ஜோடிகளின்திருட்டு உறவுக்குஆலயங்களின்இருட்டுக் கதவுகள் திறந்தே இருந்திருக்கின்றன.உடல் பசியின்பகல் விருந்துகளுக்கும்இடிந்த கோயில்இடிந்து போனதில்லை.பகலும் இரவும்கள்ளச் சாராய விற்பனைஅங்கேதான் களைகட்டும்அந்தக்காலம்.ஆலயம்சமூக விரோதிகளின் சரணாலயம்.வடக்கே […]
மேலும்....