மோடியின் மோசடி

உத்ரகாண்ட் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தில் ஜூன் 21 அன்று ஏற்பட்ட இயற்கையின் சீற்றத்தில் ஏராளமானோர் உயிரிழந்தனர். மீட்புக் குழுவினர் பல்வேறு சிரமங்களுக்கிடையில் போராடி 10 நாட்களில் சுமார் 40,000 மக்களை மீட்டுள்ளனர். இப்படியொரு சூழ்நிலையில், குஜராத் மாநிலத்தின் முதல் அமைச்சர் நரேந்திர மோடி திறமையான அதிகாரிகள் சிலருடன் டேராடூன் நகருக்கு வந்து, உத்ரகாண்ட் பகுதிகளில் தவித்துக் கொண்டிருந்த 15,000 குஜராத் மக்களைக் காப்பாற்றி அவர்களைச் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்ததாக செய்தி வெளிவந்தது. 80 இன்னோவா கார்களைப் […]

மேலும்....

ருணவிமோசகர் சாமியோவ்…!

-பிரதிபா தஞ்சாவூரில் உள்ள ஆயிரமாவது ஆண்டுப் பழைமையான கோயிலான (ராஜராஜசோழனால் கட்டப்பட்ட) தஞ்சைப் பெரிய கோயிலையும்விட மிகப் பழைமையான கோயில் திருவாரூரில் வீற்றிருக்கும் தியாகராஜர் சாமி திருக்கோயில். ஆரூராதியாகேசா… இச்சாமிதான் திருவாரூரின் சிறப்புமிக்கதான தேரில் பவனி வரும் சாமி. தியாகராஜருக்கு கமலாம்பிகை என்ற காதலி உண்டு. அக்காதலிக்கும் தியாகராஜரின் மூலஸ்தானத்துக்கும் அருகில் ஒரு மண்டபத்தில் சிலையாக கமலாம்பிகை அமைக்கப்பட்டு, எல்லோராலும் (தியாகராஜரைவிட கமலாம்பிகையைத்தான்) முக்கியமாக வணங்கப்பட்டும் வருகிறது. அவர்கள் இருவருக்கும் இன்னும் திருமணம் ஆகவில்லை. திருவாரூரில் மூன்று […]

மேலும்....

மதத்தில் தொலைந்துபோன மனிதர்கள்…!

– சி.இராஜாராம் ஆதி மனிதன் இயற்கை மற்றும் இயற்கை தந்த சக்திகளை _ இனம் தெரியாத, அடையாளப்படுத்த முடியாத சக்திகளைக் கண்டு அஞ்சி, அடங்கி, பணிந்து, சாந்தி செய்வித்து, பலி கொடுத்து, அதன் வழியாக மனிதர்கள் தங்களுக்கும், அவற்றுக்கும் இடையில் பௌதீக ரீதியில் இல்லாமல் மாந்திரீக, சமய ரீதியிலான உறவைக் கட்டமைத்துக் கொண்டான். இந்த இயற்கையை எதிர்கொள்ளும் போராட்டத்தில் மனிதன் தொடர்ந்து செயல்படுகிறான். அதற்காக பல சடங்குகளை நிகழ்த்துகிறான். அச்சடங்குகள் ஒலி வடிவத்தில் மந்திரங்களாகவும், பாடல்களாகவும் இருக்கின்றன. […]

மேலும்....

பக்திப் போதை

கோவை மாவட்டம் உடுமலை அருகே உள்ள திருமூர்த்திமலையைச் சேர்ந்த விவசாயி மல்லப்பனும் அவரது மனைவி காளியம்மாளும் வீட்டைவிட்டு வெளியே வராமல் சாப்பிடாமல் 2 நாள்கள் பூஜை செய்து வந்துள்ளனர். அப்போது திடீரென்று காளியம்மாள் கணவனின் கண்களைக் குத்தியுள்ளார். உடனே, கோவை அரசு பொதுமருத்துவமனையில் மல்லப்பன் சேர்க்கப்பட்டார். கண்களின் கருவிழிகள் மிகவும் பாதிப்படைந்ததால் மருத்துவர்கள் எவ்வளவோ முயன்றும் அவரது பார்வையை மீட்க முடியவில்லை. மல்லப்பனின் மனைவி மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும்....

யார் தவறு

மாமியார்க்காரி கத்திக்கொண்டு இருந்தாள். என் பையன் சிங்கம்டி. உன்னைத் தள்ளி வைத்துவிட்டு இன்னொரு கல்யாணம் பண்ணிவச்சேன்னா, எண்ணிப் பத்தாவது மாசத்தில் புள்ளையக் கொடுத்துருவான். ஏதோ போனாப்போகுது ஆதரவில்லாத பெண்ணாச்சே, நாமளும் ஒதுக்கிட்டா, வாழவழியில்லாமல் தவிச்சு நிப்பியேன்னு யோசனை சொன்னோம்னா ரொம்பத்தான் ராங்கு காட்டிக்கிட்டு நிக்கிறயே! கண்ணம்மா கண்கலங்கி நின்றுகொண்டு இருந்தாள். திருமணம் நடந்து அய்ந்து ஆண்டுகளாகிவிட்டது. கண்ட பெண்களிடமெல்லாம்  வம்பு செய்து கொண்டு ஊருக்குள் மைனர் என்று பேர் வாங்கித் திரிந்த கனகுக்குக் கல்யாணம் செய்து குழந்தை […]

மேலும்....