கலைஞரின் தேவை

செய்தி : கடந்த ஆட்சியில் கலைஞர் கொண்டு வந்த 108 ஆம்புலன்ஸ் திட்டத்தில் பயனாளி களின் எண்ணிக்கை நான்கு மடங்கு உயர்ந்துள்ளது. சிந்தனை : கலைஞர் கொண்டு வந்த மக்கள் நலத்திட்டங்களின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதற்கு இதுவே தக்க சான்று. கலைஞரின் திட்டங்களை முடக்காமல் தொடரவேண்டும் என்பதையே மக்கள் விரும்புகிறார்கள் என்பதை ஆட்சியாளர்கள் புரிந்து கொள்வார்களா?

மேலும்....

உங்களுக்குத் தெரியுமா?

1921இல் நீதிக்கட்சி ஆட்சி வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தை அமல்படுத்தியபோது – பார்ப்பன அதிகாரிகளை பி என்றும், பார்ப்பனரல்லாத அதிகாரிகளை என்.பி. என்றும் அரசு ஃபைல்களைக் குறிப்பிட்டுப் – பார்ப்பனரல்லாதாரை இனம் கண்டு, வாய்ப்புகளைத் தந்தது என்பதும், அதன் காரணமாக பார்ப்பனர்கள் தங்கள் ஜாதிப் பட்டத்தைப் போட அஞ்சினர் என்பதும் உங்களுக்குத் தெரியுமா?

மேலும்....

எச்சரிக்கை புகையும் மாணவர்கள்

இங்கிலாந்து உள்ளிட்ட மேலை நாடுகளில் 50 சதவிகிதமாக இருந்த புகைப்பழக்கம் தற்போது 20 சதவிகித மாகக் குறைந்துள்ளது. ஆனால், இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் 24 சதவிகித ஆண்கள் புகையிலை மற்றும் புகைப்பழக்கத்திற்குஅடிமையாகியுள்ளனர். பெண்களில் 8 சதவிகிதமும்; 11 வயது முதல் 15 வயது வரை உள்ள மாணவர்களில் 3 சதவிகிதமும் புகைப் பழக்கத்துக்கு அடிமை யாகியுள்ளனர். இதனைத் தடுக்கும் கடமை பெற்றோர் களுக்கும் ஆசிரியர்களுக்கும் உள்ளது. எனவே, அவர்கள் குழந்தைகள்முன் புகையிலை உபயோகிக்கக் கூடாது. குழந்தைகளிடையே புகையிலை […]

மேலும்....

பாகிஸ்தானில் சரப்ஜித் சிங் மரணம் : இந்தியாவின் முன் நிற்கும் கேள்விகள்

பாகிஸ்தான் தலைநகர் லாகூர் மருத்துவ-மனையில்  சிகிச்சை பெற்று வந்த இந்தியக் கைதி சரப்ஜித் சிங், 2013 மே 20 அன்று அதிகாலை மரணமடைந்தார்.

கோமா நிலையில் இருந்த சரப்ஜித் சிங்குக்கு   மூளைச் சாவு ஏற்படலாம் என, லாகூர் மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்து வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

மேலும்....

ஆசிரியர் பதில்கள்

கேள்வி : கிரிக்கெட் சூதாட்டத்தைப் பார்த்த பிறகாவது கிரிக்கெட் போதையிலிருந்து மக்கள் மீள்வார்களா?
– வெ.செல்வநாதன், திருப்பூர்

பதில் : மீள்வார்களா என்பது சந்தேகம்தான். காரணம், இந்தப் போதை அவ்வளவு எளிதாக இறங்கிவிடாது. என்றாலும், அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகர்ந்துதானே ஆகவேண்டும்?

மேலும்....