முற்றம்

இணையதளம் – shakespeare.palomar.edu வில்லியம் ஷேக்ஸ்பியரையும் அவரது படைப்புகளையும் தெரிந்துகொள்ள பல இணையதள முகவரிகள் உள்ளன. மேலே குறிப்பிட்டுள்ள முகவரிக்குள் சென்றால், ஷேக்ஸ்பியர் படைப்புகளான நகைச்சுவை, துன்பியல் நாடகங்கள், வரலாறு, கவிதை ஆகியன பிரித்துத் தொகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளன. படிக்க விரும்பும் படைப்பினைச் சொடுக்கினால் படித்துப் பயன்பெறலாம். shakespeare.palomar.edu/works.htm என்ற முகவரியில் பதிப்புகள் பிரித்தளிக்கப்பட்டு, புத்தக வெளியீட்டாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் தொடர்புடைய ஆய்வு வழிகாட்டியும் இடம் பெற்றுள்ளது.   செவ்வாழை – சைமன் ஜார்ஜ், செல்பேசி: 9840345234   […]

மேலும்....

நமக்குள் ஒற்றுமை

முதலாவது நமக்குள் ஒருவித ஒற்றுமையை உண்டாக்கிக் கொள்ள-வேண்டும். அதற்காகவே பாடுபடவேண்டும். உண்மையான ஒற்றுமை ஏற்பட வேண்டு-மானால், அதற்கு இடையூறாய் உள்ளவற்றை எல்லாம் ஒழிக்கவேண்டும். நமது நாட்டில் ஒற்றுமைக் குறைவு என்பது ஒரு தேசத்தாருக்கு ஒரு தேசத்தார் என்கிற முறையில் மாத்திரம் இல்லை.

மேலும்....

ரோட்டோ வைரஸ்

அய்ந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டால், குழந்தையின் எடை குறைவதுடன் பல பிரச்சினைகளும் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. ஆண்டுக்கு 1.60 லட்சம் குழந்தைகள் வயிற்றுப்போக்கினால் உயிரிழக்கின்றனர். குழந்தைகளின் வயிற்றுப்போக்கினைக் குணப்படுத்த ரோட்டா வைரஸ் என்ற புதிய தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மத்திய அறிவியல் தொழில்நுட்பத் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பயோ டெக்னாலஜி துறையும், அய்தராபாத்தைச் சேர்ந்த பாரத் பயோ டெக் நிறுவனமும் இணைந்து தடுப்பூசியைக் கண்டு-பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும்....

துளிச் செய்திகள்

மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கு தமிழகத்தில் இந்த ஆண்டு பொது நுழைவுத் தேர்வு இல்லை என்று உச்ச நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. கர்நாடக மாநில முதல்வராக சித்தராமையா மே 13 அன்று பொறுப்பேற்றுள்ளார். பாகிஸ்தான் நாட்டின் பிரதமராக நவாஸ் ஷெரீப் பொறுப்பேற்றுள்ளார். பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்றுநோயைத் துல்லியமாக கண்டுபிடிக்கும் அமுலெட் என்ற கருவியை இந்தியாவின் பியூசி நிறுவனம் செயல்பாட்டுக்குக் கொண்டு வந்துள்ளது. எம்.பி.பி.எஸ். பி.டி.எஸ்., படிப்புக்கு முதல்கட்ட கவுன்சிலிங் ஜூன் 18ஆம் தேதியும், பொறியியல் படிப்புக்கு  21ஆம் தேதியும் […]

மேலும்....

கருத்து

இடஒதுக்கீடு என்பது ஏழ்மையைப் போக்குவதற்கான கருவி அல்ல. நூற்றாண்டுகளாக உரிய வாய்ப்புகள் மறுக்கப்பட்ட சமூக ரீதியாகவும் கல்வி நிலையிலும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு அரசியல் சட்டம் வழங்கிய உரிமையே இடஒதுக்கீடு என்பதாகும். – கலைஞர், தி.மு.க. தலைவர் ஒரு மருமகள், புகுந்த வீட்டில் மதிக்கப்பட வேண்டும். ஆனால் சில நேரங்களில் கணவராலும், அவரது குடும்பத்தினராலும் மருமகள்கள் நடத்தப்படும் விதத்தைக் கண்டு சமூகமே அதிர்ச்சியில் உறைந்து போகிறது. மருமகள் என்பவர் அன்புடனும் பாசத்துடனும் ஒரு குடும்ப உறுப்பினராக நடத்தப்பட வேண்டும். […]

மேலும்....