மொழி எப்படி இருக்க வேண்டும்?

மனுஷனுக்கு மொழி வேணும்ன்னா, அந்த மொழியில் இருந்தே உணர்ச்சி கிளம்பணும். அறிவு வளர்ச்சியடையணும்.  விஞ்ஞானத்துக்கு எல்லாம் தோது இருக்கணும்.  தமிழிலே என்னா இருக்குது.  தமிழைக் காட்டுமிராண்டின்னு சொல்லிட்டாங்கிறான் யாரு?  சுத்தக் காட்டு மிராண்டிப்பசங்கதான் (கைத்தட்டல்) அதைச் சொல்றவங்க அறிவாளியில்லே. நான் சொல்றேன். நீங்களும், நானும் சண்டை பிடிச்சிக்கிட்டா, வாடா போடாங்கிறோம். வாத்தாங்கிறோம் (சிரிப்பு) அவுங்கம்மா இவுங்கம்மாங்கிறோம்.  அவனே, அவன் மகனே இவன் மகனேங்கிறோம். இதெல்லாம் தமிழ்லே இருக்குது. இந்தப் பேச்செல்லாம் ஆங்கிலேத்திலேயே கிடையாதே. (சிரிப்பு) ராணியாய் இருந்தாக் […]

மேலும்....

நமது இலக்கியங்கள் என்ன சொல்கின்றன?

இந்தச் சடங்கு முறைகளைப் பற்றி எனக்கும் சில புலவர்களுக்குமே, இந்தச் சடங்கு இருந்திருக்க முடியாது. இது ஆரம்பமான பிறகு இதுக்குக் கண்ணு மூக்கு வச்சிருப்பாங்க. எப்படிக் குழந்தை பிறக்குது?  நிர்வாணமாத்தானே பிறக்குது.  அப்புறம்தானே, சீலை, அப்புறம்தானே நடக்க அப்புறம்தானே காரிலே உட்கார்ந்துக்கிட்டு  ஓட்ட. அதுபோல அது பிறக்கிற போது ஒன்னும் இருந்திருக்காது. ஏதோ அவுக இஷ்டத்தைப் பொறுத்திருக்கும்.  அது ஏதோ பழக்க வழக்கத்தினாலே வந்துருக்கும். சில புலவர்கள் சொன்னார்களாம் சடங்கு இருந்ததாகக் தெரியலே. அப்படி இருந்திருந்தால் மாற்றிக்கலாம்ன்னு.  […]

மேலும்....

மாறுதல்

ஒரு கணவன் அவன் மனைவியை ஏதாவது அடிச்சிப் போட்டான்னா அது கிரிமினல். பொம்பளைகள் எல்லாம் முன் காலத்திலே எப்படி நினைத்துச் சொல்லுவாள் தெரியுமா புருஷனிடம்?  மகாராசா உன் கையாலே நான் செத்தால்நான் புண்ணியத்துக்குப்  போய்டுவேன் என்பாள். இப்ப சட்டப்படி அது கிரிமினல். இப்போ வைதால் கிரிமினல். வாடி போடீன்னா இவன் கிட்டே இருக்க இஷ்டமில்லை அய்யா என்னைக் காட்டுமிராண்டி-யாட்டம்  பேசுறான் என்பாள். இதெயெல்லாம் மனிதனுக்குச் சுதந்திரம் ஏற்பட்ட பிறகு _ மாறுதல் ஏற்பட்ட பிறகு ஏற்படுகிற மாற்றம். […]

மேலும்....

பெரியார் திடல் வாங்கிய கதை!

ஜி.டி.நாயுடு அவர்கள் பேசினார்கள். உங்களுக்கும் தெரியும் அய்யா ஜி.டி.நாயுடு அவர்களுக்கும் எனக்கும் இருக்கிற நட்பு.  எப்பவும் அவுங்க, எந்தக் கூட்டத்துக்கு வந்தாலும் என்னைப் பாராட்டுவதற்கு அவர் கொண்டிருக்கிற ஒரு உறவு என்னைப் பற்றிக் கேலியா சில வார்த்தைகள் சொல்லுவது என் காதுக்கு இனிய சில சிக்கல் சம்பிரதாயங்களை எடுத்து எடுத்துச் சொல்லுவார்கள்.  ஒன்னும் பொய் இருக்காது. அதை நான் சொல்லிக்கிறேன்.  நிஜம் தான் (கைத்தட்டல் சிரிப்பு) அய்யா அவர்களுக்கும் அது வேடிக்கை.  சிக்கனம். நாங்கள் இரண்டு பேரும் […]

மேலும்....

பார்ப்பனர்களை ஆதரித்தது ஏன்?

பொதுவாக  இந்தக் காரியத்திலே (தேர்தலிலே)  கிருஷ்ணமாச்சாரியை மாத்திரமா நான் ஆதரிச்சேன். சீரங்கத்திலே, வாசுதேவ அய்யாங்காரை ஆதரிச்சேன் கும்பகோணத்திலே சம்பத்- அய்யங்காரை ஆதரிச்சேன், சர்.பி.ராமசாமி அய்யர் மகன் பட்டாபிராமனை அந்த ஆளை ஆதரித்தேன், பட்டுக்கோட்டையில் யாரோ ஒரு சீனிவாசனை ஆதரிச்சேன், இன்னும் எங்கெங்கேயோ  நான் ஆதரிச்ச பாப்பானிலே தோத்துப்போன ஆளு இந்த காஞ்சிபுரம்தான்,  ஏறக்குறைய நான் போன ஆளுக எல்லாம் ஜெயிச்சாங்க, என்னமோ அந்த ஆளுக எல்லாம் இப்ப நம்ம காமாராசருக்குக் கையாளாக இருப்பாங்கன்னுதான் நினைச்சேன், அதுதான் காரணம். […]

மேலும்....