வைக்கம் வீரர்

திரு.வி.க. வாழ்க்கைக் குறிப்புகள் என்ற நூலில் சுவையான எழுத்தோவியம் இதோ:வைக்கத்தில் (1924) தீண்டாமைப் போராட்டம் எழுந்தது. நாயக்கர் அங்கு சென்று சத்தியாகிரகம் செய்தார். திருவாங்கூர் அரசாங்கம் அவரைச் சிறைப்படுத்தியது. அப்பொழுது யான் வைக்கம் வீரர் என்று தலைப்பீந்து நாயக்கரின் தியாகத்தை வியந்து வியந்து நவசக்தியில் எழுதுவேன். வைக்கம் வீரர் என்பது நாயக்கருக்கொரு பட்டமாகவே வழங்கலாயிற்று. (பக்கம் 349)

மேலும்....

அறிவியல் வளர்ச்சி எப்படி இருக்கும்?

அன்று பெரியார் சொன்னது இன்று நடந்தே விட்டது! தமிழ்நாடு தனியாகப் பிரிந்தாலும் பத்து வருடத்திலே நாம் நூறு வயது வரை வாழ்வோம். ஆகாயத்திலே பறப்போம். உங்களுக்கு எல்லாம் ஒன்றும் தெரியாது. இப்போது நானூறு பேரை, முன்னூறு பேரைத் தூக்கிக் கொண்டு பறக்கிறது ஆகாயக் கப்பல். ஒரு மனிதனைத் தூக்கிக் கொண்டு ஏன் பறக்காது? தனித்தனியாக வாங்கி முதுகில் கட்டிக்கொண்டால். ஏறுது மேலே விர் என்று! இப்பவே நாற்பது வருடம் சராசரி வயது உயர்ந்துவிட்டதே! தோழர்களே! 1952இல் நமது […]

மேலும்....

பிள்ளையார் சிலை உடைப்பு: எது ஒழுக்கம்?

தந்தை பெரியார் அவர்கள் காலத்தில், ஏன் பிள்ளையாரை உடைத்தார்? அவருக்கு என்ன பிள்ளையார்மீது கோபமா? உடைப்பதில்கூட ஒரு கட்டுப்பாட்டினைத் தன்னுடைய தோழர் களுக்குச் சொல்லியிருக்கிறார். குளத்தருகிலோ, மரத்தடியிலோ இருக்கின்ற பிள்ளையாரைக் கொண்டு வந்து உடைக்க வேண்டாம்; நம்முடைய காசைக் கொடுத்து வாங்கி அந்தப் பிள்ளையார் சிலைக்குச் சக்தி இல்லை என்று உடைத்துக் காட்ட வேண்டும் என்றுதான் சொன்னார். இன்னொருவருடைய பொருளை எடுக்கக் கூடாது; அது திருட்டாகிவிடும்; அது தவறாகும். அதைச் செய்யக்கூடாது. ஆனால், பக்தன் என்ன சொல்கிறான்? […]

மேலும்....

கிருஷ்ணன் மட்டும் வாழ்க!

ஒருமுறை செங்கல்பட்டில் அண்ணா முன்னின்று நடத்திய நடிகர்கள் மாநாட்டிற்கு பெரியார் தலைமை வகிக்கிறார். அதில் கலந்து கொண்டவர்கள் எல்லாம் மிகப் பெரிய நடிகர்கள். பி.யு.சின்னப்பா, எம்.கே. இராதா, என்.எஸ். கிருஷ்ணன் போன்றோர் எல்லாம் கலந்து கொண்டனர். அப்போது பெரியார் பேசுகிறார்: நீங்க ஒவ்வொருவரும் ரூ.50,000க்கு மேல்சம்பளம் வாங்குகிறீர்கள். இது என்ன நியாயம்? எனப் பெரியார் கேட்கிறார். நடிகர்கள் ஏற்பாடு செய்த மாநாட்டில் தான் பெரியார் இப்படிப் பேசுகிறார். உங்களுக்கு ரூ.50,000 சம்பளம் எனக் கேள்விப்படுகிறேன். ஆனால் விவசாயிகளுக்கு […]

மேலும்....

சோற்றைத் தின்றுவிட்டு சும்மா இருப்பதா?

நேற்று குறிச்சி வைச்சேன் சொல்லலாம்னு.  நேற்று வந்து என்னைச் சந்தித்தவரு 90 வயசு ஆகுதே கொஞ்ச நாளைக்குச் சும்மாயிருங்களேன்னாரு. அடே பயித்தியக்காரா ஒரு ஆளு சோறு திங்கிறேன்.  கொஞ்சங் கொஞ்சமா சாப்பிட்டாலும் என் ஒருத்தனுக்கு செலவு ரூ200 ஆகுது.  ஒரு வேளை காபி, ஒரு வேளை பாலு, ஒரு நாளைக்கு அரைகிலோ கறி. கறி இல்லாமல் (இறைச்சி) சாப்பிடவே மாட்டேன்.  முட்டை அது இது எல்லாம். முன்பு ரூ.15லே அடங்கின செலவு இப்ப எனக்கு 200 ரூபாய் […]

மேலும்....