மனைமாட்சியருக்கு விழா!

ஆண்கள் தங்கள் குறிப்பிட்ட வயது தொடங்கும்போது வெள்ளி விழா, அறுபதாம் ஆண்டு விழா, மணி விழா, பவள விழா என்று சிறப்பித்துக் கொண்டாடி குழந்தைகள், உறவினர்கள், நண்பர்கள் சூழ மகிழ்வர். அப்போது, பெண்ணுக்கு விருப்பம் இருக்கிறதோ இல்லையோ, தங்கள் இணையருடன் இணைந்து விழாவினைச் சிறப்பிக்க வேண்டும். இப்படியொரு சூழலில், தங்கள் இணையருக்கு -_ மனைமாட்சியருக்கு விழா எடுத்து மாண்பு செய்து பெருமைப்படுத்தியுள்ளனர் சென்னை, எம்.ஜி.ஆர். நகரில் வசிக்கும் வெள்ளையாம்பட்டு சுந்தரம், எஸ்.நடராஜன் குடும்பத்தினர். மனைவிக்கு மணிவிழா! இல்லத்தரசிக்கு […]

மேலும்....

இந்தக் கொடுமைக்கு என்று விடுதலை?

மனிதனை வைத்து மனிதனே இழுக்கும் கை ரிக்ஷா முறையை தமிழகம் ஒழித்து 40 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால், இரண்டு தடித்த மனிதர்களை அமரவைத்து தூக்கிச் சுமக்கும் அவலம் இன்னும் நீடிக்கிறது மதத்தின் பெயரில்- கடவுளின் பெயரில். குழந்தைத் தொழிலாளர்கள், பிச்சைக்காரர்கள், கூலித் தொழிலாளர்களின் படங்களையெல்லாம் அவ்வப்போது போட்டு அவர்களுக்காக அனுதாபப்படும் தினமலர் தான் இந்தப் படத்தையும் வெளியிட்டுள்ளது. காஞ்சிபுரம் யதோக்தகாரி கோவில் பங்குனி உற்சவத்தில் வேணுகோபாலன் திருக்கோலத்தில் சப்பரம் வாகனத்தில் எழுந்தருளினார்-என்று தனது இணையதளத்தில் பவ்யமாகச் செய்தி […]

மேலும்....

இந்தியத் தத்துவங்களில் கடவுள் மறுப்பு – (10)

மனிதர்களைப் பலியிட்ட யாகங்கள்

– சு.அறிவுக்கரசு

ஆள்வதற்குத் தகுதியானவன் சத்திரியனே என்று கூறப்பட்டாலும் பார்ப்பனர்கள் மேலாதிக்கம் செலுத்த விரும்பி அதனை ஏற்க மறுத்துள்ளனர். வாஜசனேய சம்கிதை பார்ப்பனர் சத்திரியரைவிட உயர்ந்தவர் என்கிறது. சத்திரியன் இல்லாமல் பார்ப்பனர் இருக்க முடியும். ஆனால், பார்ப்பனர் இல்லாமல் சத்திரியர் இருக்க முடியாது

மேலும்....

உடலின் செல்கள் சொல்வதேன்ன?

நலம் என்பது ஆரோக்கியம் _ நோயற்ற வாழ்வு. உங்கள் உடலுடைய முழுமையான நலம்தான் _ அதன் பலமாகவும் அமைகிறது.

நம் உடலின் கட்டுமஸ்தான புறத்தோற்றமும், உடற்கட்டும் மட்டுமே ஆரோக்கியத்தை நிர்ணயிக்காது. உடலின் உள் இயக்கமே _ உடல் நலத்தைத் தீர்மானிக்கிறது. இன்னும், உடல் நலம் என்பது இயற்கை; நிரந்தரமானது. உடற்கட்டு _ பொய்த்தோற்றம்; தற்காலிகமானது.

மேலும்....

பாபர் மசூதி வழக்கும் அத்வானியின் பேச்சும்!

டெல்லியில் நடைபெற்ற பாரதிய ஜனதாக் கட்சியின் 33 ஆம் ஆண்டு நிறுவன தினத்தில் பேசிய அக்கட்சியின் மூத்த தலைவர் லால் கிஷன் அத்வானி, அயோத்தியா விவகாரத்தில் நமது கட்சி வருத்தப்படத் தேவையில்லை.  இந்த விவகாரத்தில் கட்சியின் நிலைப்பாடு பெருமைக்குரிய விசயமாகும். தயக்கம் கொள்ளாதீர்கள்.  தாழ்வு மனப்பான்மையை உருவாக்கிக் கொள்ளாதீர்கள்.

மேலும்....