பக்தி – தந்தை பெரியார்

இராஜாஜியும், சங்கராச்சாரியாரும் மக்களிடையே பக்திப் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். எப்போதையும்விட இப்போது அதிகமாகச் செய்து வருகிறார்கள். பேச்சு, பேசும்போதும் “மக்களுக்கு இப்போது வரவர கடவுள் பக்தி குறைந்து வருகிறது என்று பேசி வருகிறார்கள். அதன் கருத்து என்ன என்று சிந்திப்போமானால், மக்களிடம் வரவர காலப் போக்கில் மூட நம்பிக்கைகள் குறைந்து விலகி வருகிறது என்பதுதான் பொருளாகும்.

மேலும்....

IIT – யில் CBI

சென்னை அய்.அய்.டி. என்பது மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறை (H.R.D.) என்ற கல்வித் துறையின்கீழ் இயங்கும் ஒரு மத்திய கல்வி நிறுவனம்;  இதற்கென ஆளுமைக்குழுவும், ஆளுநரும் உண்டு என்றாலும், இதன் இயக்குநர்களாக தொடர்ந்து உயர்ஜாதி (பார்ப்பனரே) வந்ததோடு அல்லாமல், இந்திய அரசியல் சட்டத்தின் 16ஆவது விதியின்படி பின்பற்றப்பட வேண்டிய இடஒதுக்கீட்டை அறவே புறக்கணித்து, , I.I.T. என்றால், “Iyer Iyengar Tennancy” என்று பார்ப்பவர் எவருக்கும் எளிதில் தெரியும் வண்ணமே அது நடந்து கொண்டு வந்துள்ளது! வருகிறது!!

மேலும்....

இந்து ராஜ்ஜியம் வந்தால்…? – வரலாறு விடுக்கும் எச்சரிக்கை

பிரச்சாரப் பலத்தினாலேயே பார்ப்பனீயம் நிலை கொண்டுள்ளது. இமயமலையை இட்லிக்குள் மறைக்கும் பொய்யர்கள் பார்ப்பனர்கள். கல்லைக் காட்டிக் கடவுள் என்பார்கள்; புராணங்களைப் புளுகி புனிதம் என்பார்கள். அழுக்கடைந்த ஆசாமியை ஜகத்குரு என்பார்கள். இப்படித்தான் இப்போது மோடியை முன்னிறுத்தி இதோ மோட்சத்தின் வழிகாட்டி என்கிறார்கள். மிக சொற்ப வாக்கு சதவீதத்தில் குஜராத்தில் 3ஆவது முறையாக வென்ற மோடி இந்தியாவை அப்படியே தூக்கி நிறுத்திவிடுவார் என்று புளுகுகிறார்கள். மனித வள மேம்பாட்டிலும், ஏழை மக்களுக்கான நலத்திட்டங்களிலும் எள்ளளவும் முன்னேற்றம் அடையாத குஜராத்தை முன்மாதிரி மாநிலம் என்கின்றன இந்துத்துவம் ஊடுருவிய ஊடகங்கள்.

மேலும்....

மீண்டும் தேவதாசி முறையா?

முன்பு தேவதாசி முறையினால் பரதநாட்டியம் வளர்ந்து வந்தது. அரசியல் காரணங்களுக்காக தேவதாசி முறையை ஒழித்துவிட்டார்கள் என்று கவலைப்பட்டிருக்கிறார் ஒருவர். பரதநாட்டியத்தில் முனைவர் பட்டம் பெற்றவரும், தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளருமான சொர்ணமால்யா தான் சென்னை டாக்டர் எம்.ஜி.ஆர் ஜானகி கல்லூரியின் நாட்டியத் துறை சார்பாக நடத்தப்பட்ட பரத நாட்டியம் தொடர்பான கருத்தரங்கத்தில் இப்படிப் பேசியிருக்கிறார்.

மேலும்....