அய்யாவின் அடிச்சுவட்டில்… 100

’அவசரநிலைப் பிரகடனம்’ – நடந்தது என்ன? – கி.வீரமணி

கடந்த 38 ஆண்டுகளுக்கு முன் அவசர நிலை எனும் இருண்ட காலத்தில்,  கழகப் பொதுச் செயலாளராகிய நான் உள்பட, எப்படி திராவிடர் கழகத் தோழர்கள் தமிழ்நாட்டில் வேட்டையாடப்பட்டனர் என்பதையும், விடுதலை ஏட்டின் மீது பார்ப்பனக் கத்திரிக்கோல் பாய்ந்து, பார்ப்பன அதிகாரிகள் தடை போட்ட வரலாற்றையும் விளக்க விரும்புகிறேன்.

மேலும்....

கோழிச்சண்டை மரபு – ஆர்.பாலகிருஷ்ணன், அய்.ஏ.எஸ்

ந்தியஜ என்கிற சமஸ்கிருதச் சொல் உண்டு. அந்தச் சொல்லுக்குப் பொருள் கடைசி இனத்தைச் சேர்ந்தவன்; கடைக்கோடியில் இருக்கிறவன். அவன் யார் என்றால் மலைவாழ் மக்கள். மலைவாழ் மக்களும் ஒரு கடைக்கோடி மக்கள். ஆனால், திராவிட நாகரிகத்தைப் பொறுத்தவரை மலையில் இருப்பவனே தலைவன். அவர்கள் கடவுள் மலையில்தான் இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் இன்றைக்குக்கூட மேட்டுநாயக்கன் குடி மேற்குத் தொடர்ச்சி மலையில் இருக்கிறது. எவன் எவனெல்லாம் மேட்டில் இருக்கிறானோ அவன் வந்து மேட்டுநாயக்கன். ஆனால், சமஸ்கிருத மொழியில் மேட்டில் இருப்பவன் கடைசி.

மேலும்....

நூல் மதிப்புரை : கிருஷ்ணன் என்றோரு மானுடன்

நெய்வேலி நிலக்கரி நிறுவனத் தொழிலாளியான நண்பர் ப.ஜீவகாருண்யன் – செய்யாறு வட்டம், வெம்பாக்கம் என்ற கிராமத்தில் பூத்த இலக்கியப் புதுமலர் – ஆற்றல் வாய்ந்த எழுத்தாளர் – படைப்பாளி – புதிய கோணத்தில் சிந்திப்பவர்; புராணங்கள் மறுவாசிப்புக்கு உட்படுத்தப்பட்டால்…? என்பதற்கு நல்ல விடையாக அவர் தந்ததே `கிருஷ்ணன் என்றொரு மானுடன் என்ற நூல். இந்நூலுக்கு  திசை எட்டும் ஆசிரியர் குறிஞ்சிவேலனின் இந்த அணிந்துரை பல்வேறு தகவல்களின் களஞ்சியமாக உள்ளது – படித்துப் பயன் பெறுக.

– ஆசிரியர்

மேலும்....

திருப்பதிக்கே லட்டு

திருப்பதி ஏழுமலையான் கோவில் சார்பில், வெளிநாடுகளில் நடத்தப்படும் சீனிவாச திருக்கல்யாணங்களில் முறைகேடுகள் நடந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என திருமலை தேவஸ்தானம் எச்சரித்துள்ளது. உலகின் நம்பர் 1 பணக்காரச் சாமியான திருப்பதி ஏழுமலையானுக்கே லட்டு கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது இச்செய்தியிலிருந்து தெரிய வருகிறது. தன் பெயரில் நடக்கும் மோசடிகளைக்கூடத் தடுக்க வக்கில்லாத இந்தச் சாமியைத்தான், க்யூ கட்டி நின்று தரிசிக்கிறார்கள் பக்த சிரோன்மணிகள். உள்ளூரிலேயே ஒரு  சீனிவாசப் பெருமாள் கோவில் இருந்தாலும், அது திருப்பதி  கோவிலுக்கு இணையில்லை என்பதே […]

மேலும்....

ஈரோட்டுச் சூரியன் – 17

பட்டினிக் கிடந்த இராமசாமி இருவரையும்ஈரோடு செல்லுமாறு இராமசாமி கூறினார்;காசிக்குச் செல்லதனியாக ரயில் ஏறினார்; பெஜவாடாவில்இறங்கினார்..இன்றைய விஜயவாடாஅன்றைய பெஜவாடா.. அங்கே..அய்யர் இருவரின்அறிமுகம் ஏற்பட்டது;இருவரின் கொள்கைகளும்இராமசாமிக்குஅப்பாற் பட்டது; இருவரின் சேர்க்கைஇராமசாமிக்குத் தெம்பைக் கொடுத்தது;பயத்தைத் தடுத்தது; வழித்துணைக்கும்வழிகாட்டலுக்கும்இருவரின் சேவைதனக்குத் தேவைஎன உணர்ந்தார்;நட்பைத் தொடர்ந்தார்; காசே இல்லாமல்காசி செல்ல முனையும்இருவரையும் கண்டுமுதலில் வியந்தார்;தன் உடலில் அணிந்துள்ள நகைகளைக் கண்டு பயந்தார்; இருவரையும் பின்பற்றுவோம்;இருவர் பின் சுற்றுவோம்; யோசித்த இராமசாமிநகைகளைக் கழட்டிப்பத்திரப்படுத்திக்கொண்டார்;சத்திரத்தில் படுத்துக்கொண்டார்; மீண்டும் பயணம்…அய்தராபாத்போய்ச் சேர்ந்தனர்;மூவரும் சோர்ந்தனர்; பசித்தது… இருவரும் தெருவில் நின்றுயாசகம் […]

மேலும்....