கடவுளா? கழிப்பறையா?

வாயைக்கொடுத்து வாங்கிக் கட்டிக்கொள்ளாதே என்று சொல்வார்கள். அதற்குச் சரியான உதாரணமாக அமைந்துவிட்டது இந்த வாயாடித்தனம். அதிகப் பிரசங்கியாக அண்மைக்காலத்தில் விளங்குபவர் பா.ஜ.க.வின் நரவேட்டை மோ(ச)டி. 2.10.2013 அன்று நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற மோடி, நான் இந்துத்துவா தலைவராக அறியப்படுகிறேன். என் மீதான பிம்பம் தற்போது ஒரு கருத்தைக் கூற அனுமதிக்காது. இருப்பினும் தைரியமாகச் சொல்கிறேன். கழிப்பறை கட்டுவதற்கே முக்கியத்துவம், கோவில் கட்டுவது இரண்டாம்பட்சம்தான் எனக் கூறியிருந்தார். இதற்குப் பதிலடி கொடுத்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மத்திய அமைச்சர் […]

மேலும்....

நல்ல நேரம் – கெட்ட நேரம்?

ஜோதிடம், ஜாதகத்தில் அவ்வளவாக நம்பிக்கை இல்லாத சரவணப் பெருமாள், ஏழு ஆண்டுகளுக்கு முன் கொஞ்சம் பணத்தையும் நிறையத் தன்னம்பிக்கையையும் மூலதனமாக வைத்து, ஒரு தொழில் தொடங்கினான். எல்லாத் தொழில்களிலும் இருக்கிற சிக்கல்கள், தடங்கல்களைத் தாண்டி அய்ந்து வருடங்களில் நல்ல நிலைக்கு வந்தான். மூன்று வேளை உணவே உத்தரவாதம் இல்லாத காலத்தில் இருந்து, இன்றைக்கு 45 பேருக்கு வேலை கொடுக்கும் நிலைக்கு உயர்ந்திருக்கிறான். தொழிலில் பிரச்சினை, மனசு சரியில்லை, குடும்பப் பிரச்சினை என்று எதுவாக இருந்தாலும், அவனிடம் 10 […]

மேலும்....

நீதி

அவருக்கு 30 வயதுக்குள் இருக்கலாம்.புது மணமகள் போலகை நிறைய கண்ணாடி வளையல்கள்…அவசரக் கோலத்தில் வைக்கப்பட்டதாய் தெரியும்தலை நிறைய பூங்கொத்துக்கள்…வீங்கிய முகம்….பதினாறாம் நாளுக்கன்னுஎழவு வீழ்ந்து…ஓலமாய் கத்துகிறார்அம்மாவைப் பெற்றவள். இவன் செத்தான்தாலியறுத்தான்…பதிலுக்கு எம்பொண்ணு செத்திருந்தாபுதுத் தாலி கட்டியிருப்பான்கிடுகிடுக்கிறாள் பாட்டி சார்மினார் பந்தலில் கிழவன்என்னா பேச்சு பேசுறா பாத்தியாஆம்பளைக்கூட்டம்நெளிகிறது… – மணிவர்மா

மேலும்....

ஆபத்தான விஷயங்கள்

மோடிக்கு குற்ற உணர்வு இல்லை. அப்படிப்பட்டவர்கள் சமுதாயத்திற்கு மிகவும் ஆபத்தானவர்கள். மக்களைக் கொலை செய்வது அரசியலில் நியாயமானது என்று அவர்கள் கருதுகிறார்கள். மோடிக்கும், சர்வாதிகாரி ஹிட்லருக்கும் எந்தவித வித்தியாசமும் இல்லை.  மோடி பிரதமர் ஆவதற்கு அவசரப்படுகிறார். ஆபத்தான விஷயங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரிகளிடம் மோடி ஆலோசனை நடத்துகிறார். இந்தியாவில் இதுவரை அரசியலும், ராணுவமும் தனித்தனியாக இருந்து வந்துள்ளன. மோடி அலையை இந்தியா முறியடிக்கும். அவர் வெற்றி பெறமாட்டார். ஊடகங்கள்தான் அவரைப் பெரிதுபடுத்தி வருகின்றன. -_ […]

மேலும்....