கருத்து

அறிவியல் துறையில் சாதித்திட ஆரம்பக் கல்வியைத் தமிழ் வழியில் கற்றது ஊக்கமாக இருந்தது. மொழி என்பது இனத்தின் அடையாளம் மட்டுமல்ல; அது ஒரு சேமிப்புக் கிடங்கு, தகவல் சுரங்கம். காலம், தலைமுறையைக் கடந்து நிற்பது தாய்மொழிதான். – அப்துல் கலாம்,மேனாள் குடியரசுத் தலைவர் மக்களவையில் மசோதா தாக்கல் செய்வது என்பது அரசுக்கு உள்ள அதிகாரம். இதை ஏற்பதா இல்லையா என்பதை மக்கள் முடிவு செய்வர். நீதித்துறையின் செயல்பாடு சுதந்திரமாக இருக்க வேண்டியது முக்கியம். நீதித்துறைக்காகவோ நீதிபதிகளுக்காகவோ இதை […]

மேலும்....

சோத்தபய ராம’பக்க்ஷே துக்ளக்கின் துதிபாடும் பயணம் – 6

தமிழ் மக்கள் எங்களுக்கே ஆதரவுக் கரம் நீட்டுகிறார்கள் என்ற ராஜபக்க்ஷேவுக்கும், டக்ளசையும், ஆனந்த சங்கரியையும் கருணாவையும் சிங்கள ராணுவத்தையும் உத்தமர்கள் போல தங்கள் எழுத்துகளில் அடையாளம் காட்டிய துக்ளக்குக்கும்  சாட்சியமிக்க பதில்களாக தங்கள் பெரும்பான்மை வாக்குகளை ஆளும் அரசுக்கு எதிராகவும் அவர்களோடு கூட்டணி போட்ட தமிழ்ச் சந்தர்ப்பவாதிகளுக்கு எதிர்ப்பாகவும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பிலேயே ஒட்டிக் கொண்டு தமிழர் தரப்புக்கு முரணான வேலைகளைச் செய்து கொண்டிருப்பவர்களின் முகத்திரையைக் கிழிக்கும்படியாகவும்  வட மாகாணத் தேர்தலில் தமிழர்கள்  பதிவு செய்திருக்கின்றனர்.

மேலும்....

நாத்திக அறிவியலாளர் – ‍பீட்டர் மெடவார்

சர் பீட்டர் ப்ரைன் மெடவார் (1915_1987) (Peter Medawar) பிரேசிலில் பிறந்த ஒரு பிரிட்டிஷ் உடற்கூறு இயலார். உடல் உறுப்பு மற்றும் மென்செதில் (tissue) மாற்று அறுவைச் சிகிச்சைக்கு மிக முக்கியமானதாகக் கருதப்படும் ஒட்டு மறுப்புகளுக்கும், எய்ட்ஸ் நோய் கண்டுபிடிப்புகளுக்கும் மென்செதில் மற்றும் உறுப்பு மாற்று அறுவைகளுக்கும் அடிப்படையாக அமைந்திருந்தது.

மேலும்....

இவ்வளவுதான் ராமன் ‍‍- சு.அறிவுக்கரசு

நினைவில் வைத்துக்கொள், இதையெல்லாம் நான் செய்தது உனக்காக அல்ல! உன் ஒழுக்கத்திற்கு ஓர் இழுக்கு ஏற்பட்டுள்ளது. உன் நடத்தை மீது மேகம் போன்ற சந்தேகப்படலம் படிந்துள்ளது. என் எதிரே நீ நிற்கிறாய், என்றாலும் உன்னைப் பார்க்க என் கண்களில் வலி ஏற்படுகிறது, ஒளிமிக்க வெளிச்சத்தைப் பார்க்க கண்கள் கூசுவதைப் போல!

மேலும்....