மண்டேலா வாழ்க்கைக் குறிப்பு

1918ஆம் ஆண்டு ஜூலை மாதம் 18ஆம் தேதி தென் ஆப்பிரிக்காவில் உள்ள குலு கிராமத்தில் பிறந்தார். தெம்பு அரச குடும்பத்தைச் சார்ந்த பரம்பரையில் வந்த மண்டேலாவின் தந்தையின் பெயர் காட்லா ஹென்றி. தாயின் பெயர் நோஸ் கெனிபேனி. இளம் வயதிலேயே குத்துச் சண்டை வீரராக அறியப்பட்ட மண்டேலா ஆடு மாடு மேய்த்துக்கொண்டே பள்ளியில் படித்தார். லண்டன் மற்றும் தென் ஆப்பிரிக்க பல்கலைக்கழகங்களில் படித்து பட்டப் படிப்பையும் சட்டப்படிப்பையும் முடித்தார். கருப்பர் இன மக்களுக்கு எதிரான வெள்ளையர்களின் நிறவெறியை […]

மேலும்....

ஓங்கி ஒலித்த உரிமைக் குரல்

உலகம் பல போராளிகளைப் பார்த்துள்ளது. அவர்களின் விடுதலை உணர்ச்சி முழக்கங்களைக் கேட்டுள்ளது. அவற்றில் மண்டேலாவின் முழக்கம் வித்தியாசமானது. மண்டேலா பல்வேறு நிகழ்வுகளில் ஒலித்த உரிமைக் குரல் இதோ:- வெள்ளை ஆதிக்கத்தின் நேரடி விளைவுதான் ஆப்பிரிக்கர்கள் அனுபவிக்கும் இழிநிலை. வெள்ளை ஆதிக்கம் என்பது கருப்பர்கள் தாழ்வானவர்கள் என்பதையே குறிக்கிறது. தென்னாப்பிரிக்காவில் ஒழிசலான வேலைகள் என்பவை ஆப்பிரிக்கர்களால் மட்டுமே செய்யப்படுகின்றன. எதையாவது தூக்கிச் செல்ல வேண்டுமென்றாலோ எதையாவது சுத்தம் செய்ய வேண்டுமென்றாலோ ஒரு வெள்ளையர் சுற்றும்முற்றும் யாராவது கருப்பினத்தவர் தென்படுகிறாரா […]

மேலும்....

புத்தர் பிறப்பு கி.மு. 6ஆம் நூற்றாண்டில்…

புதிய ஆய்வுத் தகவல் புத்தர் கி.மு.3ஆம் நூற்றாண்டில் பிறந்தவர், 4ஆம் நூற்றாண்டில் பிறந்தவர் என்று பல கருத்துகள் நிலவிவரும் நிலையில், புத்தரின் பிறப்பிடமான நேபாளத்தில் மிகப் பழைமையான புத்த விகாரை (கோவில்) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனின் துர்ஹாம் பல்கலைக்கழகப் பேராசிரியர் ராபின் கன்னிங்ஹம் தலைமையிலான தொல்லியல் குழுவினர் மேற்கொண்ட அகழ்வாய்வில், செங்கற்களால் கட்டப்பட்ட தொடர் புத்த விஹாரைகளின் கீழ் கி.மு.6ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மரத்தாலான விஹாரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மய்யப்பகுதியில் வெற்று இடம் உள்ளது. இந்த வெற்றிடத்தின் மய்யத்தில் […]

மேலும்....

உங்களுக்குத் தெரியுமா?

வைக்கம் போராட்டத்தில் கைது செய்யப்பட்ட தந்தை பெரியார் – சிறையில் கைவிலங்கு பூட்டி வைக்கப்பட்டிருந்தார் என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?

மேலும்....

அய்யாவின் அடிச்சுவட்டில்.. – 108

அம்மா மறைந்தாரே!

1978 மார்ச் 16ஆம் தேதி காலை கழகத் தலைவர் அம்மாவுக்கு நெஞ்சு வலி திடீர் என்று ஏற்பட்டது. உடனே சென்னை பொது மருத்துவமனை தீவிர இருதய நோய் சிகிச்சைப் பிரிவுக்கு தகவல் தெரிவித்தேன். தீவிர இருதய நோய் சிகிச்சைப் பிரிவைச் சேர்ந்தவரும், கழகத் தலைவர் அம்மா அவர்களுக்கு நாள்தோறும் மருத்துவப் பராமரிப்பைச் செய்துவருபவருமான டாக்டர் ஜெகந்நாதன் உடனே விரைந்து வந்தார்.

மேலும்....