கதையல்ல…

இன்னும் இருக்கிறார்கள்இப்படியும் மனிதர்கள் இடம் : நுங்கம்பாக்கம்நேரம் : மதியம் 1.30 மணிநாள் : வியாழக்கிழமை அலுவலகத்துக்குச் சென்றுகொண்டிருந்தேன். சம்மந்தமே இல்லாமல் அந்த நேரத்திற்குக் கடும் போக்குவரத்து நெரிசல். மழை வேறு தூறிக் கொண்டிருந்தது. ஸ்டெல்லா மாரீஸ் கல்லூரி முன்பாக சிக்னலில், என் பக்கத்தில் 50 வயது மதிக்கத்தக்க பச்சை நிறச் சட்டை அணிந்த நபர், கருஞ்சிவப்பு நிற சேலையும், கனமான நகைகளும் சூழ அமர்ந்திருந்த அவரின் 40 வயது மதிக்கத்தக்க மனைவி இருவரும் ஹீரோ ஹோண்டாவில் […]

மேலும்....

பொன்மொழி

நாம் பேசுவதைத் தவிர்த்துவிட்டு, பிறர் பேசுவதை அதிகம் கேட்க வேண்டும். அதன் பொருட்டே குறைவாகப் பேசுவதற்கு ஒரு வாயும் அதிகம் கேட்பதற்கு இரு காதும் இயற்கை வழங்கி இருக்கிறது. – இந்தியா

மேலும்....

துளிச் செய்திகள்

கருணை அடிப்படையில் வேலை கேட்கும்போது தகுதி அடிப்படையில் மட்டுமே வேலை கொடுக்க வேண்டும், அவரது பெற்றோர் செய்த வேலையையே கொடுக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்புக் கூறியுள்ளது. பிறவியிலேயே உருவாகும் ஹிர்ஸ்பரங்க் என்னும் குடல் நோயை ஸ்டெம் செல் சிகிச்சை மூலம் குணப்படுத்தும் முறையினை சென்னை மருத்துவக் கல்லூரி மற்றும் எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனை மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளனர். கையினால் தொடாமலேயே மின் சாதனங்களை இயங்கச் செய்யும் அகச் சிவப்புக் கதிர் […]

மேலும்....

கருத்து

இறுதிக்கட்டப் போரின்போது நடைபெற்ற சம்பவங்கள் குறித்து தனியாக இலங்கைக்குள் வெளிப்படைத் தன்மை கொண்ட நம்பகத்தன்மை வாய்ந்த விசாரணை நடத்த மார்ச் மாதத்திற்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும். கெடு தவறினால் அய்.நா.மனித உரிமை ஆணையத்தை அணுகி சுயேச்சையான விசாரணைக்கு நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவேன். – டேவிட் கேமரூன்,பிரிட்டிஷ் பிரதமர் இலங்கையில் நடைபெற்ற போரின்போது, மனித உரிமைகள் ஒட்டு மொத்தமாக மீறப்பட்டுள்ளதே காமன்வெல்த் மாநாட்டை  மொரிஷியஸ் புறக்கணித்ததற்கு முக்கியக் காரணம். அடுத்த இரண்டு ஆண்டுகளில் மொரிஷியஸ், காமன்வெல்த் மாநாட்டை நடத்த […]

மேலும்....

தந்தை பெரியார் உலகமயமாக்கப் பணியில் தமிழர் தலைவர்

– வீ.குமரேசன் உலகில் தோன்றிய பல்வேறு சமூகப் புரட்சியாளர்களிடமிருந்து தந்தை பெரியார் வேறுபட்டவர். வெறும் கருத்துகளைச் சொல்லிவிட்டுச் சென்றவர் அல்ல தந்தை பெரியார்; மானிட முன்னேற்றத்திற்காக களம் இறங்கி, போராடி, பல்வேறு சவால்களை நேர்கொண்டு தனது வாழ்நாளிலேயே சாதனைகள் பல புரிந்தவர் தந்தை பெரியார். நடைமுறை நிலைமையிலிருந்து சமுதாயப் பணியினைத் துவக்கியவர். கருத்து வடிவங்களைத் தொடர்ந்து, நடைமுறை வருவது தான் உலகில் நடைபெற்ற பல்வேறு சமூகப் புரட்சிகள் உருவான வழிமுறை என இருந்த வரலாற்றைப் புரட்டிப் போட்டவர் […]

மேலும்....