கருத்து

குற்றவாளிகளிடமிருந்து சமுதாயம் எதிர்பார்ப்பது அவரிடம் ஏற்பட வேண்டிய மாறுதலையே. எனவே குற்றம் செய்தவர்களுக்குக் கொடுக்கப்படும் தண்டனைக்குப் பதில் மாற்று வழிமுறைகளை ஆராய வேண்டியது அவசியம். தண்டனைக்கு உள்ளாகுபவரால் அவரின் குடும்பம், அவரைச் சார்ந்திருப்பவர்கள் கடும் பாதிப்பைச் சந்திக்கின்றனர். – சுஷில்குமார் ஷிண்டே      மத்திய உள்துறை அமைச்சர் அய்.நா.வின் செயல்பாடுகளை உள் ஆய்வு செய்தபோது இலங்கை இறுதிக்கட்டப் போரின்போது அமைப்புரீதியாக அய்.நா. தோல்வி அடைந்திருப்பது தெரிய வந்துள்ளது. உறுப்பு நாடுகள், தாங்கள் நிர்ணயித்த பணிகளை அய்.நா. செய்வதற்குப் போதிய […]

மேலும்....

செய்திக் குவியல்

ஜெயேந்திரர் ஆள்வைத்துத் தாக்கினார் நீண்ட நாட்களாக நடைபெற்றுவரும் சங்கரராமன் கொலை வழக்கில் ஜெயேந்திரர் ஆள்வைத்து ராதாகிருஷ்ணனைத் தாக்கியதாக சங்கரராமனின் மகன் ஆனந்த் சர்மா சாட்சியம் அளித்துள்ளார். எனது தந்தை சங்கரராமன் காஞ்சி வரதராஜபெருமாள் கோவிலில் திருப்பணி செய்து வந்தார். அதேபோல் ராதாகிருஷ்ணனும் திருப்பணி செய்துவந்தார். இதனால் இருவருக்கும் பழக்கம் இருந்தது. இந்நிலையில், 2001இல் ஜெயேந்திரர் சீனாவுக்குப் போக முடிவு செய்தபோது, எனது தந்தை எதிர்ப்புத் தெரிவித்து உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இதனால், எனது தந்தைக்கும் ஜெயேந்திரருக்கும் […]

மேலும்....

நிர்வாகம், சட்டத்துறைக்குப் பொருந்தும் இடஒதுக்கீடு நீதித்துறைக்கும் பொருந்தும்!

23.9.2013 அன்று உச்ச நீதிமன்றத்தில் (உச்ச)நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் இடஒதுக்கீடு அளிக்கும்படி அரசுக்கு உத்தரவிட முடியாது. சுப்ரீம்கோர்ட்டுக்கு நீதிபதிகளை நியமிக்கும் போது, எஸ்.சி., எஸ்.டி. மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களை நியமிக்கும்படி அரசுக்கு உத்தரவிடக் கோரி, போடப்பட்ட பொதுநல மனுவின்மீது தீர்ப்பு வழங்கிய ஜஸ்டீஸ் டி.எஸ். தாக்கூர் தலைமையிலான (பெஞ்ச்) அமர்வு, அக்கோரிக்கையை ஏற்று தாங்கள் அப்படி ஒரு ஆணையைப் பிறப்பிக்க இயலாது என்று தெரிவித்துள்ளது.

மேலும்....

கடவுளை மறுக்கும் துகள் கண்டுபிடித்தவருக்கு நோபல் பரிசு

ஆல்பிரட் நோபல் நினைவாக ஒவ்வோர் ஆண்டும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. 2013ஆம் ஆண்டின் மருத்துவத்திற்கான நோபல் பரிசு ஜேம்ஸ் ரோத்மேன், ரேன்டி ஷேக்மன், தாமஸ் சுடாப் ஆகிய மூவருக்கு வழங்கப்பட உள்ளது. இயற்பியலுக்கான நோபல் பரிசு கடவுளை மறுக்கும் துகளான நிஷீபீபீணீனீஸீ ஜீணீக்ஷீவீநீறீமீ என்ற துகளைக் கண்டுபிடித்து, ஹிக்ஸ் போசன் கொள்கை பற்றி ஆராய்ச்சி செய்த ஃபிரான்காய்ஸ் எங்லெர்ட், பீட்டர் ஹிக்ஸ் ஆகிய இருவருக்கு வழங்கப்பட உள்ளது. வேதியியலுக்கான நோபல் பரிசு  அமெரிக்காவைச் சேர்ந்த மார்ட்டின் […]

மேலும்....

உங்களுக்குத் தெரியுமா?

1927-இல் சிதம்பரத்துக்கு காந்தியார் வந்தபோது ஆதிதிராவிடர்களை உள்ளே அழைத்துச் சென்றுவிடாமல் தடுக்க தீட்சிதப் பார்ப்பனர்கள் கோவிலின் நான்கு கதவுகளையும் இழுத்து மூடிவிட்டனர். கோவிலுக்குள் இருந்த பக்தர்கள் அன்று முழுவதும் உள்ளேயே அடைபட்டுக் கிடந்தார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா?

மேலும்....