முற்றம்

இணையதளம் www.rtoaifmvd.com இரு சக்கர நான்கு சக்கர வாகனங்கள் வைத்திருப்பவர்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள இணையதளம். வாகன ஓட்டுநர் உரிமம் பெறப் பயன்படுத்தும் மருத்துவச் சான்றிதழ் பதிவு செய்வது, புதுப்பிப்பது, NOC, சான்றிதழைத் தொலைத்துவிட்டால் பெறும் மாற்றுச் (duplicate) சான்றிதழ் என்று வாகனங்கள் தொடர்புடைய அனைத்து விண்ணப்பங்களையும் பதிவிறக்கம் (download) செய்து இணையத்திலேயே விண்ணப்பிக்கும் முறையில்  அமைக்கப்பட்டுள்ளது. மேலும் வரி தொடர்பான விவரம், தொடர்புடைய ஆர்டிஓ அலுவலகங்கள், மாவட்டங்களில் உள்ள அலுவலகங்களின் அட்டவணை, பயனாளர் […]

மேலும்....

அச்சுறுத்தும் இ-கழிவுகள்

பழுதடைந்த கணினி, வீடியோ கேம், செல்பேசிகள், குறுந்தகடுகள், டி.வி.டி.கள், தொலைக்காட்சிப் பெட்டி போன்ற எலக்ட்ரானிக் பொருட்களின் கழிவுகளாலும் குளிர்சாதனப் பெட்டி, ஓவன், துணி துவைக்கும் இயந்திரம் போன்ற எலக்ட்ரிக் பொருட்களின் கழிவுகளாலும் நிலர், நீர், காற்று, சுற்றுப்புறச் சூழல் பாதிக்கப்படுவதுடன் பல்வேறு நோய்களும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இ_கழிவுகள் என்றழைக்கப்படும் இவை மக்காத தன்மை உடையன. இ_கழிவுகளில் பெலாடியம், வெள்ளி போன்ற உலோகங்களும் தீமை தரும் காரீயம், காட்மியம், பாதரசம் போன்ற உலோகங்களும் உள்ளன. மும்பையில் மட்டும் […]

மேலும்....

ஆசிரியர் பதில்கள்

கேள்வி : ஆத்திகனுக்கும் நாத்திகனுக்கும் உள்ள ஒற்றுமைக் கருத்துகள் எவை? இரு சாராரும் ஒரே மேடையில் பேசும் வாய்ப்பு ஏற்படுமா?
-_ இரா.மகாலிங்கம், கூடுவாஞ்சேரி

பதில் : மனிதநேயத்திலும் அவரவருக்குள்ள சுயமரியாதையை மதிப்பதிலும் இரு சாராரும் இருந்தால் சாத்தியமே! மனிதநேயத்தில் நம்பிக்கையுள்ள ஆத்திகராக _ தவத்திரு குன்றக்குடி அடிகளார்போல் வாழுபவர்களாக இருப்பின் ஒரே மேடையில் பேசிடலாம்.

மேலும்....

இவ்வளவுதான் ராமன் – 2

ராமன் தற்கொலை – சு.அறிவுக்கரசு மாமிசம் தின்றனர் காட்டுக்குள் நுழைந்த புதிதில், யமுனை ஆற்றங்கரையில் மேய்ந்து கொண்டிருந்த மான்களை வேட்டையாடிக் கொன்று அதன் கறியை ராமன், லட்சுமணன், சீதை தின்றிருக்கிறார்கள். இறைச்சி உணவை மறுத்தவர்கள், மரக்கறி மட்டுமே சாப்பிட்டவர்கள் என்பதை மறுக்கவே இதனை எடுத்துக்காட்டுவதாகவும் சாஸ்திரி குறிப்பிட்டிருக்கிறார். என்னைச் சந்தேகப்படாதீர். என் உடம்பை ராவணன் தொட்டதைப்பற்றிக் கேட்கிறீரா? அதை நான் விரும்பிக் கேட்கவில்லை. என் இதயம் உம்மையே நினைத்துக் கொண்டிருந்தது. என் கை, கால்கள் என்ன செய்யும்? […]

மேலும்....

துளிச் செய்திகள்

உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக தமிழகத்தைச் சேர்ந்த நாகப்பன் செப்டம்பர் 19 அன்று பொறுப்பேற்றுள்ளார். வியர்வை வாசனையைத் திரவம் மூலம் உருவாக்கி கொசுக்களைக் கவர்ந்திழுத்து அழிக்கும் புதிய கருவியை சென்னை பெரம்பூர் கல்கி ரங்கநாதன் மான்ட்போர்டு மெட்ரிக் பள்ளி பிளஸ் 1 மாணவிகள் கண்டுபிடித்துள்ளனர். கம்போடிய நாட்டின் பிரதமராக ஹன்சென் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற விழாவில் சிறப்பாக சேவை செய்தவருக்கான ஜோர்டான் ராணி ரனியா விருதும், இங்கிலாந்தின் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தால் மனிதநேயப் பணிகளுக்கான பீட்டர் […]

மேலும்....