அய்யாவின் அடிச்சுவட்டில்… இயக்க வரலாறான தன் வரலாறு (276)

முத்தமிழ் மன்றத்தின் மூன்று நாள் விழா கி.வீரமணி தஞ்சை மாவட்டம் குடந்தையில் சுற்றுப் பயணத்தின் வாயிலாக பல்வேறு நிகழ்ச்சிகளில் 7.2.1997 அன்று கலந்துகொண்டேன். வழிநெடுகிலும் சுயமரியாதைச் சுடரொளிகள் நினைவாக கல்வெட்டு திறப்பும், கொடியேற்ற நிகழ்ச்சியும், கடவுள் மறுப்புக் கல்வெட்டுகள் திறப்பு விழாவையும் செய்து வைத்தேன். பெருமண்டி என்னும் பகுதியில் குடந்தை நகர தோழர்கள், மறைந்த சுயமரியாதைச் சுடரொளிகள் டி.மாரிமுத்து, பார்வதி, எம்.தங்கவேல் ஆகியோரது நினைவாக மீனாட்சி தங்கவேல் அவர்கள் ஏற்பாடு செய்து உருவாக்கிய கல்வெட்டினைத் திறந்து வைத்தேன். […]

மேலும்....

ஆசிரியர் பதில்கள் :இலங்கை தமிழ் அகதிகளுக்குக் குடியுரிமை தருக!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உதயநிதி ஸ்டாலின் கே1:     ஜாதிவாரிக் கணக்கெடுப்பை எல்லா மாநிலங்களும் வலியுறுத்த ஓர் ஒருங்கிணைப்பை ஏற்படுத்தினால் என்ன? — சங்கமித்திரன், மதுரை ப1:        இயல்பாகவே சூழ்நிலை அதனை நாளும் வலுவாக்கிக் கொண்டே வருகிறது. கொரோனா போன்ற பல காரணங்-களால் சாத்தியமில்லா-விட்டாலும் அது காலத்தின் கட்டாயமாகிறது! தமிழ்-நாட்டில் ஒருங்கிணைந்த முயற்சிகளை தாராளமாகச் செய்ய நம்மால் முடியும். கே2:     பா.ஜ.கவின் ஆசீர்வாத யாத்திரை எதற்கு? – மகிழ், சைதை ப2:        கலைவாணர் என்.எஸ்.கே. ஒரு திரைப்படத்தில் கூறுவார்: ‘ஆசி’ […]

மேலும்....

சிந்தனை

கங்கையின் சுத்தம் இதுதான்! மோடி வெற்றிபெற்ற நாடாளுமன்றத் தொகுதியான வாரணாசி மற்றும் அதற்கு மேற்கே உள்ள உன்னாவ் போன்ற பகுதிகளில் கடந்த இரண்டு மாதங்களாக 200க்கும் மேற்பட்ட பிணங்கள் மிதந்தன. அடையாளம் தெரியாத இந்தப் பிணங்களால் அந்தப் பகுதி மக்களிடம் அச்சம் மிகுந்து காணப்படுகிறது. சில பிணங்கள் நாய் மற்றும் காகங்கள் சிதைத்து விட்டதால் மிகவும் கோரமாக காட்சியளிக்கின்றன. இதுகுறித்து உன்னாவ் மாஜிஸ்ட்ரேட் கூறியதாவது, “எங்களுக்கு சில மீனவர்கள் மூலம் கங்கை நதியில் பிணங்கள் அதிக அளவு […]

மேலும்....

சிந்தனை : சொத்து சம்பாதிக்கும் சக்தி

முனைவர் வா.நேரு “பெண்களுக்குப் படிப்பு, தொழில் ஆகிய இவை இரண்டும் பெற்றோர்களால் கற்பிக்கப்பட்டு விட்டால், சொத்து சம்பாதிக்கும் சக்தி  வந்துவிடும். பிறகு தங்கள் கணவன்மார்களைத் தாங்களே தேர்ந்-தெடுக்கவும், அல்லது பெற்றோர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டாலும் கணவனோடு சுதந்திரமாய் வாழ்க்கை நடத்தவும் கூடிய தன்மை உண்டாகிவிடும்’’ என்றார் தந்தை பெரியார். “பெண்களுக்குப் படிப்பு கற்பிக்க வேண்டும். ஒரு வீட்டில் ஒரு ஆண் பிள்ளையும், பெண் பிள்ளையும் இருந்தால் முதலில் பெண் பிள்ளையைப் படிக்க வைக்க வேண்டும்’’ என்ற தந்தை பெரியாரின் அறிவுரை […]

மேலும்....

உடல் நலம் : மாதுளையின் மகத்துவம்

நிறைய மருத்துவ குணங்களும், பிளேக், புற்றுநோய் போன்றவற்றை குணமாக்கும் ஆற்றலும் கொண்டது. ¨           உடலில் நைட்ரிக் ஆக்ஸைடு (Nitric oxcide) என்னும் தனிமம் குறையும்போது மன அழுத்தம் ஏற்படும். மாதுளை ‘நைட்ரிக் ஆக்ஸைடு’ அளவை அதிகரிக்கும் தன்மை கொண்டது. இதை உண்பதால் மன அழுத்தம் குறையும். ¨           மாதுளையில் உள்ள எல்லஜிக் அமிலம் (Ellagic Acid) சூரிய வெப்பத்தால் தோலில் ஏற்படும் கருமையையும், தோல் புற்று நோயையும் தடுக்கும். ¨           நாளும் உண்பதால் மூளையில் உள்ள நரம்பியல் கடத்திகள் இயற்கையாகவே […]

மேலும்....