கவிதை : உண்மை உணர்வாய்!

நிலம் இருந்தும் வளம் இருந்தும்                வாட்டுதடா வறுமை – எங்கும்                காட்டுதடா கருமை – நாட்டில் நிதமும் நடக்கும் கொள்ளை யினால்                சுருண்டதடா உலகம் – கண்டு                மூண்டிடாதோ கலகம்!   காட்டைத் திருத்தி மலையைக் குடைந்து                கழனி யாக்கினாய் அன்று – நல்ல                கடமை யாற்றினாய் நன்று – ஆனால் காட்டையும் மேட்டையும் திருத்திய உனக்கு                கஞ்சிக்கு வழியில்லை இன்று – இதைக்                கண்டு […]

மேலும்....

கட்டுரை : உயர்கல்வியில் வர்ணபேதமும் சொர்ணபேதமும்!

  கல்விதான் ஒருவனை அறிவாளி ஆக்குகிறது. ஒருவனுடைய அறிவுக் கண்ணைத் திறக்கும் திறவுகோல் கல்வியாகும். படிக்காமல் இருப்பதனைவிட பிறக்காமல் இருப்பதே மேல் என்கின்றார் பேரறிஞர் பிளாட்டோ. கற்றவர்கள் எப்போதும் சமூகத்தில் உயர்ந்த இடத்திலேயே மதிக்கப்படுகின்றனர். அப்படிப்பட்ட கல்வியின் வளர்ச்சிக்கு ஒன்றிய அரசு ஒதுக்கும் நிதி என்பது ஒருதலைப்பட்சமானதாக இருப்பதால் ஏற்படும் வளர்ச்சி என்பதும் ஒரு சாரார் மட்டுமே பயன்படும் வகையில் இருப்பது வேதனைக்குரியது. இந்தியாவில் 23 IITக்கள் (Indian Institute of Technology) உள்ளன. இவை பொறியியல் கல்வி […]

மேலும்....

சமூகநீதி நாள் 17 : பெரியாரைப் படி, படி, படி!

முனைவர் வா.நேரு தந்தை பெரியார் பிறந்த நாள் அன்று மதுரை மீனாட்சி அரசு கலைக்கல்லூரியில் ‘சமூகநீதி நாள்’ கொண்டாடப்பட்டது. தமிழ்நாட்டின் முதல் அமைச்சர்  மானமிகு மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களால் பெற்ற பெரும்பலன் இந்த ஆண்டு சமூகநீதி நாள் கொண்டாட்டமாகும். தந்தை பெரியார் பிறந்த நாள் சமூகநீதி நாளாகக் கொண்டாடப்படும் என்ற அவரின் அறிவிப்பு பத்தோடு பதினொன்று அல்ல. திராவிடர் கழகத் தலைவர் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் “செப்.17 என்ற எம் அறிவு ஆசானின் பிறந்த நாள் […]

மேலும்....

மருத்துவம் : விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள் (39)

சிறுநீரகங்களும் நோய்த் தொற்றும் KIDNEYS & INFECTIONS மரு.இரா.கவுதமன் மருத்துவம்: சிறு நீர்ப் பாதை நோய்த் தொற்றை எளிதில் குணமாக்கலாம். ஆரம்ப அறிகுறிகள் தெரியும்போது மருத்துவம் செய்து, நோயை எளிதில் குணமாக்கலாம். நோய்க்கு அடிப்படைக் காரணமான நோய்க் கிருமிகளை அழிப்பதன் மூலம் நோயை எளிதில் குணமாக்கலாம். கிருமிக் கொல்லிகள் (Anti-biotics) மூலம், நோய்க் கிருமிகளை அழித்தால் நோய் எளிதில் குணமாகும். பொதுவாக, நைட்ரோப்யூரன்டைன், சல்பா, அமாக்ஸிசிலின், செஃபலோஸ்போரின் பாக்டிரிம், டாக்ஸிசைக்ளின், சிப்ரோப்ளாக்ஸின் போன்ற மருந்துகள் நோயை எளிதில் கட்டுப் […]

மேலும்....

உணவே மருந்து : நன்மை பயக்கும் நார்ச்சத்து

  ஒரு சீரான உணவுத் திட்டத்தின் அத்தியாவசிய உள்ளடக்கங்களில் ஒன்று நார்ச்சத்து. மேலும் அது உணவு செரிமானத்திலும் ஊட்டச்சத்துகளை உள்வாங்குவதிலும் முக்கிய பங்காற்றுகிறது. நம் உணவுத் திட்டத்தில் மிகக் குறைவான உள்ளடக்கமாக இருக்கக்கூடிய நார்ச்சத்து ஏராளமான நன்மைகளைத் தருகிறது. நார்ச்சத்து உணவு என்பது ஒரு வகையான கார்போஹைட்ரேட். நார்ச்சத்து எப்படிச் செயல்படுகிறது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். அது உணவின் எடையை அதிகரிக்கிறது, வயிறு நிரம்பிய உணர்வை நீடிக்கச் செய்கிறது, மலத்தின் திடத்தன்மையை அதிகரிக்கிறது, பொதுவாக நார்சத்து […]

மேலும்....