நூல் மதிப்புரை : புயல் பகுத்தறிவு சிறுகதைகள்

நூல்: ‘புயல்’ பகுத்தறிவுச் சிறுகதைகள் ஆசிரியர்:ஆறு.கலைச்செல்வன் பதிப்பகம்: மணிவாசகர் பதிப்பகம், 31, சிங்கர் தெரு,       பாரிமுனை, சென்னை – 108. போன்: 044-25361039 பகுத்தறிவுச் சிறுகதைகள் தொகுப்பான ‘புயல்’ ஆசிரியர் ஆறு.கலைச்செல்வன் அவர்கள், அரசுப் பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். தனது இளம் வயது முதலே தந்தை பெரியார் அவர்களின் பொதுக்கூட்டங்களில் பங்கேற்று அவரது உரையால் கவரப்பட்டவர். தொடர்ந்து திராவிடர் கழகத்தின் செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்டவர். தனது சென்னை வாழ்க்கையின் போது பெரியார் திடலுக்கும் […]

மேலும்....

அய்யாவின் அடிச்சுவட்டில் ….இயக்க வரலாறான தன் வரலாறு (268)

ராணி அண்ணா மறைவு கி.வீரமணி அமெரிக்க பயணத்தின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றாக உலகத் தமிழர் இயக்கம் ஏற்பாட்டில் 20.4.1996 அன்று முத்தமிழ் விழா ஸ்கார்பர்ரோ பகுதியில் மிட்லண்ட் காலேஜ்யேட் இன்ஸ்டிடியூட் மண்டபத்தில் நடைபெற்றது. கனடா நாட்டின் டொரொன்டோ நகரில் புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்கள் உள்பட சுமார் 1 லட்சம் பேர் வாழ்கின்றனர். மண்டபம் முழுவதும் நிரம்பி வெளியிலும் ஏராளமானோர் நின்று கொண்டே உரையைக் கேட்கும் அளவுக்கு தமிழ் உணர்வாளர்கள் கூடியிருந்தனர். பல்வேறு போட்டிகளில் பங்கு பெற்று […]

மேலும்....

ஆரியர் சூழ்ச்சி : ஆதி சங்கரரை கொன்றவர்களும் ஆரிய பார்ப்பனர்களே!

சென்னையில் 5.6.1983 அன்று பகுத்தறிவாளர் கழகம் நடத்திய சங்கராச்சாரி _- யார்? விளக்கப் பொதுக்கூட்டத்தில் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் கி.வீரமணி சிறப்புரை ஆற்றினார். நிகழ்ச்சிக்குத் தலைமையேற்ற பன்மொழிப் புலவர் கா.அப்பாத்துரையார் அவர்களின் பேச்சிலிருந்து: நான் மொழி ஆராய்ச்சியாளன் என்ற முறையிலும், இலக்கிய ஆராய்ச்சியாளன் என்ற முறையிலும், வரலாற்று ஆராய்ச்சியாளன் என்ற முறையிலும், ஏன் சமய ஆராய்ச்சியாளன் என்ற முறையிலும் உங்களுக்குத் தெரிந்திருக்க முடியாத சில உண்மைகளை உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். ஸ்மார்த்தர்கள் இந்தியாவிலே சைவ ஆகமங்களை ஏற்றுக்கொள்ளாதவர்கள்தான் […]

மேலும்....

மருத்துவம் : விதி நம்பிகையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள் !(30)

பித்தப்பை கற்கள் (GALL BLADDER STONE) பித்தப்பை கல்லீரலின் கீழே அமைந்துள்ள, ஒரு சிறிய பையாகும். கல்லீரலில் உற்பத்தியாகும் பித்த நீரை எடுத்துச் செல்லும், பித்த நீர்க்குழாயுடன் இணைந்துள்ளது. கொழுப்புச் சத்துகளை சம அளவில் சீராக வைப்பதற்குத் தேவையானது பித்த நீர். அதை சேமித்து வைத்து, தேவையான நேரத்தில் குடலுக்குள் செலுத்தி, செரிமானத்திற்கு உதவுகிறது. இயல்பாக உணவு உண்டதும் பித்தப்பை சுருங்கும். லேசான நீல நிறத்தில் இருக்கும் பித்தப்பையானது, வளர்ந்தவர்களுக்கு 7 முதல் 10 செ.மீ. நீளமும், […]

மேலும்....

முகப்புக் கட்டுரை : திராவிடம் வெல்லும் தி.மு.க ஆட்சி அதனைச் சொல்லும்

கவிஞர் கலி.பூங்குன்றம் எந்த விலை கொடுத்தேனும் தி.மு.க.வைத் தோற்கடித்தே தீருவது என்பதில் அடேயப்பா, பார்ப்பனர்கள் மத்தியில் பீறிட்டு எழுந்த அடங்கா கோபக்கனல் – ஆத்திரத் தீ தேர்தல் முடிந்து முடிவுகள் வெளிவந்த பிறகும் தணியவில்லை. தி.மு.க. சரியான தேர்ந்தெடுத்த பாட்டையில் பயணம் செய்கிறது என்பதற்கு இதைவிட சான்றுப் பட்டயம் வேறு ஒன்றும் இருக்க முடியாது. தினமலரான திரிநூல் ஏட்டின் அகழ்வாராய்ச்சி என்ன தெரியுமா? மக்களவைத் தேர்தலைவிட சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க.வுக்குக் குறைந்த சதவிகிதத்தில்தான் வாக்குகள் கிடைத்திருக்கின்றன என்று […]

மேலும்....