கவிதை : புரிந்து கொள்வீர்

1. ஆஸ்தீகம் எது? நாஸ்தீகம் எது?  அறிந்து சொல்வீரே! – நன்றாய்ப்  புரிந்து கொள்வீரே! 2. சாஸ்திரம் காட்டும் சுயநலமோகம்  ஆஸ்திகமா? இல்லை நாஸ்திகமா?  மக்கள்   சமத்துவங் காட்டும் பொதுநலத் தியாகம்   நாஸ்திகமா இல்லை ஆஸ்திகமா – இதில் (ஆஸ்தீகம் ) 3. காணிக்கை கொடுத்து கற்பூரச் சுடரால்   கடவுளைக் காண்பது ஆஸ்திகமா? – அது   கல்லாமையென்பது நாஸ்திகமா?  காணரும் அன்பால் நாணயமாகக்  கடமையைப் புரியெனல் நாஸ்திகமா? – அதற்  குடன்பட […]

மேலும்....

உணவுத்தாள்

  உணவகங்களில் பார்சல் உணவு இல்லையென்றால் இன்று பல இளைஞர்கள் பட்டினிதான். பொட்டலம் கட்டப்பட்ட உணவில் உருவாகும் பாக்டீரியாக்கள் உடல்நலனைப் பாதிக்கின்றன. பிளாஸ்டிக் பொருள்களால் தாள், உறைகள் செய்யப்படுவதால் பிளாஸ்டிக் கழிவுகளும் அதிகமாகின்றன. இந்த இரண்டிற்கும் தீர்வு கண்டிருக்கிறார்கள் சென்னை அய்அய்டி மாணவர்கள். இவர்கள் கண்டுபிடித்திருக்கும் பாக்டீரியா எதிர்ப்பு உணவுத்தாள்கள், பொட்டலம் கட்டப்பட்ட உணவுப் பொருள்களில் பாக்டீரியாக்கள் உருவாவதைத் தடுக்கின்றன. இதனால் விரைவாக உணவுப் பொருள்கள் கெட்டுப்போவதைத் தடுக்க முடியும். இந்த உணவுத் தாள் பயன்பாட்டினால் பிளாஸ்டிக் […]

மேலும்....

ஆரோக்கியம் தரும் நெல்லிக்காய்

தினம் ஒரு ஆப்பிள் சாப்பிடுவதுபோல் தினம் ஒரு நெல்லிக்காயைச் சாப்பிடலாம் என்று டாக்டர்கள் பரிந்துரைக்கிறார்கள். காரணம் அதில் பலதரப்பட்ட மருத்துவ பயன்கள் உள்ளது. நெல்லிக்கனியினை சாப்பிடும்போது என்னென்ன நன்மைகள் என அறிவோம். கல்லீரலில் உள்ள டாக்ஸின்களை முற்றிலும் வெளியேற்றி, கல்லீரல் சிறப்பாக செயல்பட்டு, ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவும். மேலும் இது மஞ்சள் காமாலையைப் போக்கும். இதில் உள்ள ஆன்டி – ஆக்ஸிடன்டுகள், டாக்ஸின்கள் மற்றும் நுரையீரலை ப்ரீ – ராடிக்கல்களிடமிருந்து பாதுகாக்கும். இதனால் சுவாசக் கோளாறுகள் வராமல் […]

மேலும்....

திராவிடம் வென்றது ஆரியம் தோற்றது!

  “நாட்டில் நடைபெறுவது அரசியல் போராட்டமல்ல; ஆரியர் _ திராவிடர் போராட்டமே’’ என்றார் தந்தை பெரியார். பல தேர்தல்களிலும், அது நிரூபணம் ஆகியுள்ளது என்றாலும் -_ நடந்து முடிந்த தேர்தல் மேலும் அப்பட்டமாகவே தெரிவித்துவிட்டது. பார்ப்பனர் சங்கம் வெளிப்படையாகவே தீர்மானம் நிறைவேற்றி _ தி.மு.க. மீதான தங்களின் பாரம்பரிய எதிர்ப்பைக் காட்டத் தவறவில்லை. பார்ப்பனர் ஏடுகள் பச்சையாக தி.மு.க. எதிர்ப்பைத் தூக்கிப் பிடித்தன. விளைவு _ ஆரியப் பார்ப்பனர்களுக்கு எதிராகவும், பார்ப்பனர் அல்லாத திராவிட இயக்கத்துக்கு வெற்றியாகவும் […]

மேலும்....

தோற்றது ஜோதிடம்!

தி.மு.க. தோல்வி காரணங்கள் குறித்து ‘வீரகேசரி’ என்ற இலங்கை ஏடு தி.மு.க.வின் ஜாதகத்தைப் பார்த்து தி.மு.க. தோல்வி அடைந்துவிடும் என்று தேர்தல் முடிவு வரும் (30.4.2021) இரு நாள்களுக்கு முன்பாக எழுதியது. 1. கலைஞரின் ஆளுமையை கட்சியால் நிரப்ப முடியவில்லை. நான்கு ஆண்டுகளில் அ.தி.மு.க. ஆட்சியைக் கலைக்க முடியவில்லை. அது தி.மு.க.வின் தந்திரமின்மையையும், சக்தியின்மையையும் காட்டுகிறது. 2. மேல்மட்ட தலைவர்களிடையே ஒற்றுமை இல்லை. துரைமுருகன், டி.ஆர்.பாலு போன்றோர் சற்று தள்ளி இருந்தே பட்டும் படாமல் வேலை செய்கிறார்கள். […]

மேலும்....