நிகழ்வு : தமிழ் தேசியவதிகள் திராவிடம் நோக்கி வருவர்!

“பெரியார் விருது” பெற்ற இயக்குநர் கரு.பழனியப்பன் உரை   நேரம் இல்லை என்பவர்கள் தந்தை பெரியாரையும் – கலைஞரையும் நினைத்துக் கொள்ளுங்கள் “பெரியார் விருது” பெற்ற இயக்குநர் கரு.பழனியப்பன் உரை: தந்தை பெரியார் முத்தமிழ் மன்றத்தின் 27ஆம் ஆண்டு திராவிடர் திருநாள் விழா 16.1.2021 அன்று மாலை சென்னை பெரியார் திடலில் நடைபெற்றது. விழாவில்  ‘பெரியார் விருது’ பெற்ற  இயக்குநர் கரு.பழனியப்பன் அவர்கள்  உரையாற்றுகையில், இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களில் உள்ளவர்களைப் பற்றி ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி.காரர்கள் புரிந்து […]

மேலும்....

வரதட்சணையாக புத்தகம் கேட்ட பாகிஸ்தான் பெண்!

ஹக் மெஹர் என்னும் தங்கள் சமூக வழக்கப்படி திருமணம் செய்வதற்கு வரதட்சணையாக பணம் மற்றும் நகைகளுக்குப் பதிலாக, பாகிஸ்தான் ரூபாயில் 1,00,000 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.46,600) மதிப்புள்ள புத்தகங்களை வழங்க வேண்டும் என்று கோரி ஆச்சரியப்படுத்தியுள்ளார் மர்தான் நகரத்தைச் சேர்ந்த நைலா ஷமல். தங்கம் அல்லது பணத்திற்குப் பதிலாக புத்தகங்களை ஏன் கேட்கிறேன் என்று இவர் விளக்கம் அளிக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. “நம் நாட்டில் பணவீக்கம் அதிகரித்து வருவதால், நம்மில் பலர் விலை […]

மேலும்....

செய்தியும் சிந்தனையும்… சினாவின் சிறையில் சிவன்!

  செய்தி: உலகளவில் அதிக மாசுபட்ட முதல் 15 நகரங்களில் 13 இந்திய நகரங்கள் அடங்கும். சிந்தனை: ஏன் எனில் இங்கு புண்ணிய நதிகள் எனும் சாக்கடைகள் அதிகம். பா.ஜ.க.வா – கொக்கா? செய்தி: கரோனாவுக்காக ‘மாஸ்க்’ அணிந்து முகத்தை மூடிக்கொண்டால், ‘பியூட்டி பார்லர்’ நடத்துபவர்கள் கதி என்னாகும்? – அஸ்ஸாம் சுகாதார அமைச்சர் ஹிமந்தா பிஸ்வாஸ் சிந்தனை: எல்லோரும் சோப்பைப் பயன்படுத்திக் கைகழுவ ஆரம்பித்தால் சோப் விலை ஏறிவிடும் என்று சொல்லாமல் விட்டாரே? ‘துக்ளக்’கின் வேத […]

மேலும்....

மருத்துவம் : விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள்! [29]

கல்லீரல் அழற்சி (Hepatitis) சிறுநீர் சோதனை: சிறுநீரில் “பித்தநீர் உப்புகள்’’ (Bile Salts), பித்த நீர் நிறமிகள் (Bile pigments) அறியும் சோதனை ஆரம்ப நிலை ஆய்வாகும். இயல்பான நிலையில் சிறு நீரில் இவை இருக்காது. ஆனால், பாதிப்படைந்த கல்லீரலில் இவை சிறுநீரில் தெரியும். இரத்த ஆய்வுகள்: கல்லீரலின் செயல்பாடுகளை அறிய இரத்தப் பரிசோதனை உதவும். இவை “கல்லீரல் செயல்பாட்டு ஆய்வுகள்’’ (Liver function tests) என்றழைக்கப்படும். இவை SGOT, SGPT, alkaline phosphatase எனப்படும் ஆய்வுகளாகும். SGOT (Serum Glutamic […]

மேலும்....

பெண்ணால் முடியும் : பின்தங்கிய பகுதியில் கல்வி அறிவினை வளர்க்கும் ஆசிரியை!

சாதனைகள் என்பது ஒருவருடைய வெற்றியாக மட்டுமே பார்த்து நாம் கொண்டாடும் இந்நாளில், தான் கற்ற கல்வி மூலம் பின்தங்கிய சமுதாயப் பிள்ளைகளின் கல்வியை வளர்க்க அதனை முழுமையாகப் பயன்படுத்தி, எந்தவிதமான பெரிய வசதியும் இல்லாத திருவண்ணாமலை கிராமப் பள்ளிக் கூடத்தினை தனது ஆர்வத்தினால் வளர்த்து, அப்பள்ளியை 400க்கும் மேற்பட்ட புதிய மாணவ – மாணவிகளுக்குக் கல்வி அறிவு பெறச் செய்து, பள்ளியையும் தரம் உயர்த்தி அப்பகுதி மக்களின் வாழ்வில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளார் ஆசிரியர் மகாலட்சுமி. அவரது கல்விப் […]

மேலும்....