வாசகர் மடல்

வணக்கம். ‘உண்மை’ ஏப்ரல் 1-15, 2021 படித்தேன். அது பற்றி எழுதுகிறேன். ‘நீட்’ என்ற கொடுவாள் வெட்டிக் கொன்ற பிள்ளைகள் 15க்கு மேல் ஆன பிறகும் அரசு ஆணவத்தைக் குறைத்து ‘நீட்’டிலிருந்து விலக்கு இல்லவே இல்லை என்னும் கல்வி உரிமையைப் பற்றி எழுதியுள்ள கட்டுரை அருமை. இலங்கையில் நடந்த போர்க் குற்றங்கள் குறித்து அய்.நா. மனித உரிமை மன்றத்தில் கொண்டு வந்த தீர்மானத்தில் இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களிக்காமல் பச்சைத் துரோகம் செய்திருக்கிறது என்பதை முகப்புக் கட்டுரையில் […]

மேலும்....

தகவல்

கோயிலில் கொள்ளை அடிப்பவர்கள் யார்? குமுதம் : பெரிய மற்றும் சிறிய கோயில்களில் அடித்தக் கொள்ளை, கொலை போன்ற விரும்பத் தகாத செயல்கள் நடைபெறுகின்றது. இதற்கு. என்ன காரணம்? மக்களுக்கு கடவுளின் மீது உள்ள பக்தி போய்விட்டதா? ஜெயேந்திர சரஸ்வதி காஞ்சி சங்கராச்சாரியர்: கொலை, கொள்ளை செய்யத் துணிகிறவர் களில் அனேகம்பேர் பக்தர்களாகவே இருந்து ஆண்டவனிடத்தில் பிரார்த்தனை செய்து கொண்டு தப்பித்துக் கொள்வதற்கு வழிதேடுகிறார்கள். நாத்திகத்திற்கு இப்படி எடுத்துப் போவதற்கும் சம்பந்தம் இருப்பதாக நாம் நினைக்கவில்லை பொதுவாக […]

மேலும்....

ஆசிரியர் பதில்கள் : மத்தியில் ஆட்சி மாற்றமே தீர்வு

கே:வாக்குப்பதிவு எந்திரத்தின் மீதான நம்பகத்தன்மை ஒரு புறம் இருக்க, தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பிக்கை தொடர்ந்து கேள்விக்குறியாகிறதே… இதிலிருந்து மீள என்ன வழி?                – கல.சங்கத்தமிழன், செங்கை ப:மத்தியில் பா.ஜ.க. _ ஆர்.எஸ்.எஸ். இல்லாத எதிர்க்கட்சிகளின் கூட்டாட்சிதான் ஒரே தீர்வு _ ஒரே வழி! கே:தமிழ்நாட்டை மூன்றாகப் பிரிக்கும் திட்டம் பற்றி தங்கள் கருத்து என்ன?                – இளையராஜா, பிலாக்குறிச்சி ப:முதல்வர் கனவில் மிதக்கும் சில தலைவர்களின் முதல் போடா முனைப்பு தழைத்து வரும் […]

மேலும்....

சிறுகதை : அன்னதானம்

பேரறிஞர் அண்ணா “அவன் பிழைக்கும் வழி, சார்! அது’’ என்ற பேச்சு சதா என் நண்பனிடமிருந்து பிறக்கும்! கோயில் குளம், கும்பாபிஷேகம், திருவிழா, சடங்கு சாமியாடல் முதலிய எந்தக் காரியத்துக்கும் அவன் வைத்துவிடும் பொதுப் பெயர், பிழைப்பு. அதிலும் அவன் கூறும் கடுமையான மொழிப்படி சொல்கிறேன், வெட்கங்கெட்ட, சுரண்டும் பிழைப்பு! அவன் பேச்சிலே காரம் அதிகம், சாரம் இருப்பதாகத்தான் அவன் எண்ணினான். நாம் ஒப்புக் கொள்வதில்லை. நான் என்ன அவனைப்போல சூனாமானாவா என்ன! சைவன்!! சதா கதாகாலட்சேபங்களுக்கு […]

மேலும்....

கவிதை : களத்தில் நிற்போம்!

முனைவர் கடவூர் மணிமாறன் பகுத்தறிவுப் பேராசான், பாரே போற்றும்                பகலவனாம் அய்யாவின் புகழை மாய்க்கத் தகுதியிலா அறிவற்ற கூட்டத் தார்கள்                தலைதூக்கி நிலைமறந்து குதிக்கின் றார்கள் ; வகுப்புரிமை இறையாண்மை சமூக நீதி                வழங்கியுள்ள இடஒதுக்கீ டெல்லாம் இந்நாள் தொகுப்பாக வீழ்த்திடவே துடிப்போர் தம்மின்                தூதுவராய் இனப்பதர்கள் காலில் வீழ்ந்தார்!   சாலைகளின் பெயர்மாற்றம்; சிலைக்குக் காவி                சங்கிகளின் வெறியாட்டம் ஓய வில்லை ; பாலைநிலம் ஒருநாளும் சோலை யாகா […]

மேலும்....