சிறுகதை : காசி யாத்திரை

துறையூர் க. முருகேசன் சீனிவாச சாஸ்திரி என்ன சாதாரண மானிடப் பிறவியா? பிர்மாவின் நெற்றியில் உதித்த குலமாயிற்றே! சிவனின் வம்சா வழியல்லவா! அவர் சொன்னால் சொன்னது நடக்கும் என்பது ஆன்மிக பக்தர்களின் நம்பிக்கை. கோயில் குருக்களாக இருக்கின்ற வரையில் உண்டியல் காசைவிட, இவர் அர்ச்சனைத் தட்டின் காசுதான் கனமாக இருக்கும். வயது ஏற ஏற தொந்தி பெருத்துவிட்டது. குனிந்து நிமிர்ந்து ஆத்தாளுக்கும் அப்பனுக்கும் பணிவிடை செய்ய முடியாது, தம்பி மகனை அதிகாரபூர்வமான அர்ச்சகர் ஆக்கிவிட்டு, வீட்டோடு அய்க்கியமாகிவிட்டார். […]

மேலும்....

முகப்புக் கட்டுரை : கருத்துரிமையைப் பறிக்கும் ஒளிப்பதிவு சட்டத் திருத்தத்தை திரும்பப் பெறுக!

மஞ்சை வசந்தன் ஒளிப்பதிவு திருத்த மசோதா 2019, பிப்ரவரி 12ஆம் தேதி மாநிலங்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டு பின்னர் அது நிலைக் குழுவிற்கு அனுப்பப்பட்டது. நிலைக்குழு கடந்தாண்டு மார்ச் மாதம் அறிக்கையை சமர்ப்பித்தது. தற்போது மீண்டும் 2021இல் இந்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது. ஒளிப்பதிவு சட்டத் திருத்த மசோதா 2021 இந்திய ஒன்றிய அரசுக்கு சில திருத்த அதிகாரங்களை வழங்குகிறது. ஒரு படத்துக்கு வழங்கிய சான்றை, பார்வையாளர்களின் புகாரின் பேரில் திரும்பப் பெற முடியும். இச்சட்டம், ஏற்கெனவே இருக்கும் […]

மேலும்....

முகப்புக் கட்டுரை : அர்ச்சகர்ப் பிரச்சனை

ஆகம விதிகளின்படிதான் நடக்கின்றனவா?-(2) கவிஞர் கலி.பூங்குன்றம் புரட்டு என்பதன் மறுபெயர் பூணூல் அணியும் பார்ப்பனர்களே. அதற்கு வெகுதூரம் போக வேண்டாம். பார்ப்பன உக்கிராணமான (கோயில் சமையல்கட்டு) ‘துக்ளக்கை’ ஒரு புரட்டுப் பு ரட்டினால் போதும் _ இந்தப் பூணூல் பூனைகளின் புரட்டுகளின் மொத்த உருவமும் பூதாகரமாகவே தெரிந்துவிடும். அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்ற போர்க்கொடியைத் தூக்கினார் தந்தை பெரியார். கடவுள் பக்திக்காக அல்ல _ ஜாதி ஒழிப்புக்காகவே! குறிப்பிட்ட பார்ப்பனர்கள் மட்டும்தான் கருவறைக்குள் நுழையலாம்; அர்ச்சனை […]

மேலும்....

முகப்புக் கட்டுரை : பெண்கள் அர்ச்சகர்கள் ஆகக் கூடாதா?(1)

கவிஞர் கலி.பூங்குன்றன் ஆண்களிலேயே குறிப்பிட்ட உயர்ஜாதியினர் தான் அர்ச்சகர் ஆக முடியும் என்று உச்சநீதிமன்றம் வரை சென்று அடம் பிடித்தவர்கள் _ அரட்டைக் கச்சேரி நடத்தியவர்கள், பெண்களும் அர்ச்கராகலாம் என்று சொன்னால் அமைதி காப்பார்களா? அம்மணமாக ஆடித் தீர்த்திட மாட்டார்களா? ‘துக்ளக்’ சோ.ராமசாமி 15 ஆண்டுகளுக்கு முன் ‘துக்ளக்’கில் (7.6.2006) எழுதிய தலையங்கத்தை மறுபதிப்பு செய்து (‘துக்ளக்’ 30.6.2021) குருமூர்த்தி குருக்கள் குதியாட்டம் போடுகிறார். ‘சோ’ ராமசாமி எழுதியது என்ன? “சரிநிகர் சமானம் என்ற நாகரிக உலகில் […]

மேலும்....

பெரியார் பேசுகிறார் : கடவுளின் நடவடிக்கை

தந்தை பெரியார் உலகத்தை எல்லாம் உண்டாக்கி அதிலுள்ள எல்லாவற்றையும் நடத்தும், ஒரு சர்வ சக்தியுள்ள கடவுள்  ஒருவர் இருக்கிறார். அவரால்தான் (அவர் இஷ்டப்படி) உலகம் இயங்கு (நடைபெறு)கின்றது என்று சொல்லப் படுமானால், அவரை நடுநிலைமை யுடையவரென்று சொல்லுவதை விட, பாரபக்ஷம்  (ஒரு சார்பு) உடையவரென்று சொல்வதற்கே மிக மிக இடமிருக்கின்றன. அவரைக் கருணை உடையவர் என்று சொல்வதை விட, கருணையற்றவர் என்று சொல்வதற்கே ஏராளமான பிரத்தியக்ஷ (நடைமுறை) உதாரணங்கள் இருக்கின்றன. அவரை நீதிவான் என்று சொல்வதை விட, […]

மேலும்....