பொருளாதாரம் : பெரியாரியல் நோக்கில் பங்குச்சந்தை

முனைவர் .வா. நேரு “முதலாளி _ தொழிலாளி இருவரும் ஒன்று சேர்ந்தால்தான் உற்பத்தி செய்ய முடியும். உற்பத்தி நடக்க வேண்டுமென்றால் பணம் _ தொழில் இரண்டும் தேவை. உற்பத்தி, மக்கள் நலனுக்கு _ உலக நலனுக்கு அவசியம் ஆகும்  என்றாலும் முதல் (பணம்) இருந்தால்தான் உற்பத்தி  தலைகாட்ட முடியும்’’ என்றார் தந்தை பெரியார். எந்தப் பொருளை உற்பத்தி செய்ய வேண்டுமென்றாலும் பணம் தேவை. அதற்கு மிகப் பெரிய வாய்ப்பாக அமைந்தவைதான் பங்குச் சந்தைகள். இப்போது, 2021இல் ஒருவர், […]

மேலும்....

பெண்ணால் முடியும் : விண்வெளிக்குப் பயணமாகும் இந்தியப் பெண்!

அண்மையில் அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி மய்யமான நாசா முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டது. அது இந்தியர்கள் அனைவரையும் பெருமைப்பட வைத்துள்ளது. அந்தத் தகவல் இது: ஜூலை 11ஆம் தேதி விண்வெளியில் பயணம் செய்யும் 6 பேரில் சிறீஷா பந்தலா இடம் பிடித்து சாதனை செய்துள்ளார். இந்தியாவின் ஆந்திர மாநிலம் குண்டூரில் பிறந்த சிறீஷா பந்தலா அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் வளர்ந்தார். உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான ரிச்சர்ட் பிரான்சனின் விர்ஜின் கேலட்டிக் யூனிட்டி என்ற விண்கலம் மூலம் […]

மேலும்....

மருத்துவம் : விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள்! [34]

நீரிழிவு நோய் (DIABETES MELLITLIS) மரு.இரா.கவுதமன் பெண்களுக்கு ஏற்படும் தனித்துவ அறிகுறிகள்:                ஆண்களுக்கு ஏற்படும் தனித்துவ அறிகுறிகள் போன்றே, சில தனித்துவ அறிகுறிகள் பெண்களுக்கும் நீரிழிவு நோயில் உண்டாகும். தோலில் எண்ணெய்ப் பசை குறைந்து, தோல் வறண்டு காணப்படும். அடிக்கடி சிறுநீர்க் குழாய் நோய்த் தொற்று (urinary tract infection) ஏற்படும். சிறுநீர்ப் புறவழி (Urethra), பிறப்புறுப்பு (Vagina) ஆகியவற்றில் பூஞ்சை நோய்த் தொற்று (Fungal Infection) ஏற்படும். அதன் பின் விளைவாக பிறப்புறுப்பில் அரிப்பு, வெள்ளைப் படுதல் போன்றவை […]

மேலும்....

எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (80) : தாழ்த்தப்பட்டவருக்கு பாரதி பூணூல் மாட்டியது ஏன்?

நேயன் பாரதி வீட்டில் ஒரே குழப்பம்; கலக்கம். முடிவில் பாரதியையும் அவர் குடும்பத்தையும் சென்னைக்கு அனுப்பத் தீர்மானித்தார்கள். விடியற்காலை நாலு மணிக்கு வரும் திருவனந்தபுரம் எக்ஸ்பிரசுக்குக் கூடக் காத்திராமல், பிற்பகல் 2:30 மணிக்கு வரும் செங்கோட்டை பாசஞ்சரில் அவசர அவசரமாக மூட்டை முடிச்சுகளுடன் அவரை ஏற்றி அனுப்பினார்கள். பாரதி புறப்பட்டு வரும் செய்தி ‘சுதேசமித்திரன்’ ஆசிரியர் ஏ.ரங்கஸ்வாமி அய்யங்காருக்கும், நண்பர் வக்கீல் எஸ்.துரைசாமி அய்யருக்கும் தந்தி மூலம் தெரிவிக்கப்பட்டது. இது 1920 நவம்பர் மாதம் நடைபெற்றது’’ என, […]

மேலும்....

கவிதை : கருப்பு

ஆரியச் சூழ்ச்சியை அடித்து நொறுக்கும் கருப்பு அறிவாசான் அய்யா பெரியார் உடுத்திய கருப்பு காவிகளை கதறடிக்கும் கண்ணியக் கருப்பு கல்விக் கொடியை நம் வீட்டில் ஏற்றிய கருப்பு பார்ப்பனிய தாமரையை கருக்கிய கருப்பு பாஜக ஆதிக்கம் அகற்றிய கருப்பு பெண்ணுரிமை பெற்றிட முழங்கிடும் கருப்பு பெருமையுடன் மணியம்மையார் உடுத்திய கருப்பு மொட்டைப் பாப்பாத்தி இழிநிலை ஒழித்திட்ட கருப்பு மொத்தமாக தேவதாசி முறையை நீக்கிட்ட கருப்பு கருவறை நுழைவுக்கு களம் கண்ட கருப்பு அனைத்து ஜாதியினரை அர்ச்சகராக்கிய கருப்பு […]

மேலும்....