அகண்ட பாரதம் – அமையுமா?

– அன்றில்

1922இல் மராட்டிய மாநிலம் புனேவைச் சேர்ந்த சித்பவன் பார்ப்பனரான விநாயக் தாமோதர் சவர்க்கார் என்பவர் எழுதிய நூலின் தலைப்பு இந்துத்வா என்பது. அதற்கு முன் அந்தச் சொல் புழக்கத்தில் இல்லை. இந்தியாவில் இரண்டே தேசிய இனங்கள் உள்ளன. ஒன்று இந்து, மற்றொன்று முசுலிம் என்ற பாகுபாட்டை அந்த நூல் கூறியது.

மேலும்....

திராவிடர் என்ற பெயர் ஏன்?

பிராமணர், பிராமணர் மகாசபை வைத்துக்கொள்கிறார்கள். அதனால் அவர்களுக்குப் பெருமையும் உரிமையும் கிடைக்கின்றன. நாம் நம்மைச் சூத்திரன் என்று கூறிக்கொண்டால் உயர் சாதியானுக்கு அடிமையாயிருக்கும் உரிமைதான் கிடைக்கும். பார்ப்பானின் தாசி மக்கள் என்ற பட்டம் தான் கிடைக்கும். அதனால் தான், நம்மைச் சூத்திரர் என்று கூறிக்கொள்ளாமல் திராவிடர் என்று கூறிக்கொள்கிறோம். சூத்திரர் என்பவர்-களுக்குத் திராவிடர் என்பது தவிர்த்து வேறு பொருத்தமான பெயர் வேறு யாராவது கூறுவார்களானால், அதை நன்றியறிதலுடன் ஏற்றுக்கொண்டு, எனது அறியாமைக்கு வருந்தி மன்னிப்புக் கேட்டுக் கொள்ளவும் […]

மேலும்....

நாட்டைக் காட்டிக்கொடுத்த பார்ப்பனர்கள்

1985 ஆம் ஆண்டில் இந்தியாவின் இராணுவ இரகசியங்கள், பிரான்சு நாட்டிற்கும் அமெரிக்காவின் சி.அய்.-ஏவிற்கும் விற்கப்பட்டன. இவ்விற்பனையில் முக்கியமானவர்களான பிரதம அமைச்சரின் அலுவலகத்தில் பணிபுரிந்த டி.என்.கேர். பி.கோபாலன், கே.மல்ஹோத்ரா, குடியரசுத் தலைவரின் உற்பத்திப் பிரிவைச் சேர்ந்த ஜெகதீஸ் சந்தர், பாதுகாப்பு அமைச்-சகத்தைச் சேர்ந்த ஜே.சி.அரோரா, தொழிலதிபரான உமா. நாராயணன் இவர்கனைவரும் பிராமணச் சாதியைச் சேர்ந்த இந்துக்கள்தானே? இவர்களில் சிலர் அந்நிய நாட்டு மதுபானப் புட்டிகளுக்கு ஆசைப்பட்டு இந்தியாவின் பாதுகாப்புத் தொடர்பான இரகசிய ஆவணங்களை அப்படியே ஒளிநகல் செய்து கொடுத்தது […]

மேலும்....

”அர்த்தமுள்ள” ஹிந்து மதத்தின் இலட்சணம் பாரீர்!

ஸ்ரீரங்கத்தில் உள்ள கோயிலுக்கு கும்பாபிஷேகம் என்ற பெயரில் பார்ப்பனர் கொழுத்து வளர்வதற்கான திருவிழா ஏற்பாடு செய்யப்பட்டு, கோடிக்கணக்கான ரூபாய்கள் – எழுந்திருக்காமல் படுத்தே இருக்கும் ரெங்கநாதர் பெயரில் செலவழிக்கப்படுகிறது. இம்மாதம் 9 நாட்கள் அங்கு விழா நடைபெறுவதைப் பற்றி டைம்ஸ் ஆப் இந்தியா ஆங்கில நாளேடு தந்துள்ள முக்கிய செய்தியில், ஸ்ரீரங்கத்தில் உள்ள (அய்யங்கார்) பார்ப்பனர்களிடையே வைஷ்ணவ முதல் பிரிவினர்களான வடகலை, தென்கலை _ அதாவது  ‘U’ மார்க், ‘Y’ மார்க் இரண்டு நாமதாரிகளிடையே சண்டை மும்முரமாக […]

மேலும்....

உங்களுக்கு தெரியுமா?

திலகர் இறந்தபோது இறுதி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள காந்தியார் சென்றார். பாடைத்தூக்கும் போது, காந்தியாரும் தோள்கொடுக்கச் சென்றார். அப்போது, நீ வைசியன், இந்தப் பாடையைத் தூக்கக் கூடாது என்று கூறி காந்தியாரையே பார்ப்பனர்கள் தள்ளிவிட்டனர் என்பது உங்களுக்கு தெரியுமா?

மேலும்....