மாட்டுக்கறி – எங்கள் வாழ்வு

கவிதை – கோகு ஷியாமளா மாட்டுக்கறி – எங்கள் வாழ்வு (ஆந்திராவின் முக்கியமான தற்கால தலித் பெண் கவிஞர், சிறுகதையாசிரியர், பெண்ணிய ஆய்வாளர், செயற்பாட்டாளர். ஜாதி எதிர்ப்பு, தெலுங்கானா போராட்டங்களில் தொடர்ந்து செயலாற்றி வருபவர். அவரின் மாட்டுக்கறி எங்கள் வாழ்வு தெலுங்குக் கவிதையிலிருந்து சில வரிகள்) மாட்டுக்கறி எங்கள் பண்பாடுமாட்டுக்கறி – எங்களது வாழும் பசுமைவாழ்க்கையின் பன்முகம்எங்கள் உயிரின் மூச்சு!மாட்டுக் கறி உண்ணாதீர்கள் ஆனால் எப்படி?நான் எதை உண்பது அல்லது மறுப்பது என்று கூற நீ யார்? […]

மேலும்....

ஆசிரியர் பதில்கள்

கேள்வி : பி.ஜே.பி.யின் கூட்டணி அரசில் பிரதமராயிருந்த வாஜ்பாய்க்கும் தற்பொழுது அக்கட்சியில் வலுவான நிலையில் ஆட்சி நடத்தும் மோடிக்கும் கொள்கை அடிப்படையில் ஏதேனும் வேறுபாடுகள் உள்ளனவா?– கோ.சுருதி, திருச்சி பதில் : அணுகுமுறையில் _ (அடிப்படையில் அல்ல) _ நிறைய வேறுபாடுகள் உண்டு. அவர் (வாஜ்பாய்) ஆட்சியை முழுக்க ஆர்.எஸ்.எஸ்.சிடமே விட்டுவிடவில்லை; தனது பிடிப்பில் வைத்திருந்தார். ஏன் ஒரு கட்டத்தில் குஜராத் கலவரத்தில் முதல்வர் மோடி அரசு இராஜதர்மத்தைக் கடைப்பிடிக்கவில்லை எனக் கூறி பதவி விலகும்படிச் செய்ய […]

மேலும்....

குட்டிக்கதை : உனக்கு ஆசைதான்!

– புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் கொட்டைப் பாக்கு அளவு தலை. கொய்யாக்காய் உடல் _ இந்தச் சிறிய கோழிக் குஞ்சு குப்பையில் மேய்ந்திருந்தது. அது தனி; தாயுமில்லை, தகப்பனுமில்லை. உடன் பிறந்தாருமில்லை. தன்னந்தனியே மேய்கிறது. குப்பை சீய்க்கவும் தெரியவில்லை; இரை விழுங்கவும் முடியவில்லை. காக்கை ஒன்று அதை அடித்துக் கொண்டுபோக அணுகிற்று; அதன் நிலையைக் கொஞ்சம் ஊன்றி நோக்கியது. காக்கையின் நெஞ்சம் இளகிற்று. காக்கை, கோழிக்குஞ்சை நோக்கி: ஏன் குழந்தாய்! உன் தாய், தந்தை, கூடப் பிறந்தவர் எங்கே? […]

மேலும்....

பாண்டா எனும் அழகுக்கரடி

உற்சாக சுற்றுலாத் தொடர் – 6 பாண்டா எனும் அழகுக்கரடி மருத்துவர்கள் சோம&சரோ இளங்கோவன் அக்டோபர் 18ஆம் தேதி மதியம் 2 மணிக்கு சயாம் ரீப் கம்போடியாவிலிருந்து 3 மணி நேரம் பயணம் செய்து செங்டு சைனா சென்றடைந்தோம். விமானத்தில் திபெத்தைப்பற்றி கலாச்சாரம், அரசியல் நிலைமை ஆகியவை பற்றி பேராசிரியர்கள் சேக் டால்டன், அலெக்சி மர்பி சொற்பொழிவு செய்து விளக்கினார்கள். விமான நிலையத்திலேயே உணவு கொடுத்தார்கள். உணவு சுமாராக இருந்தது. பிறகு விமான நிலையத்திலிருந்து நேராக பாண்டா […]

மேலும்....

தமிழ் வளர்ச்சி : நீங்கள் செய்தது என்ன?

தமிழ் வளர்ச்சி : நீங்கள் செய்தது என்ன? புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் வெண்ணெய் வாழைதான் ஆனால் குலை தள்ள வேண்டும் சட்டாம் பிள்ளைச் சண்முகம் எனது பாடசாலை நண்பர். நான் ஒரு நாள் அவர் வீட்டுக்குப் போனேன். அப்போது அவர் தமது வீட்டுக்குப் புறத்திலிருந்த தோட்டத்தில் இருந்தார். நான் வந்தது அவருக்குத் தெரிந்தது. என்னை அவர் தோட்டத்திற்கு அழைத்துப் போனார். மரம், செடி, கொடிகள் தோட்டத்தில் அடர்ந்திருந்தன. நான் அவைகளைச் சுற்றிப் பார்த்து வரும்போது நண்பர் என்னை ஓர் […]

மேலும்....