வந்தவர் மொழியா? செந்தமிழ்ச் செல்வமா? -புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்
கன்னி இதை வடசொல் என்று பார்ப்பனரும் அவர் அடிவருடிகளும் சொல்லுவார்கள். இது தூய தமிழ்ச் சொல்லென்றே அறியவேண்டும். கன்னி-இளமை. கன்னித்தமிழ் என்றால், இன்றும் இளமையோடு திகழும் தமிழ் என்பது பொருள். இது தூய தமிழ்ச்சொல் என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டு வருமாறு: தொல்காப்பியம் நூன் மரபு 30-ஆம் பாட்டு.மெய்ந்நிலை சுட்டின் எல்லா எழுத்தும்தம்முற் றாம்வருஉம் ரழஅலங் கடையே என்பது. இஃது என்ன சொல்லிற்றெனின் ர், ழ் என்னும் இரண்டு எழுத்துகள் தம்முன் தாம் வரும் என்றது. இதில் ன் […]
மேலும்....