பெரு வெள்ளம் தரும் பாடம் – மஞ்சை வசந்தன்

சென்னை உட்பட அய்ந்து மாவட்டங்-களில் கடும் வெள்ளப் பாதிப்பு. ஒட்டுமொத்த சென்னை மாநகரமே மூழ்கி நின்ற அவலம். பல இடங்களில் பத்து அடி உயரத்திற்குத் தண்ணீர் நின்றதால் தரைத்தளம், முதல் தளம் மூழ்கிய பாதிப்பு.

மனிதர், விலங்கு, பணம், நகை, பொருட்கள், வாகனங்கள், குடிசை, ஆவணங்கள் வெள்ளத்தில் அடித்துச் சென்ற இழப்பு. தப்பி வீட்டில் நின்றவையும் நனைந்து, குலைந்து, பயன்படா நிலைக்குள்ளான நிலை.

மேலும்....

வந்தவர் மொழியா? செந்தமிழ்ச் செல்வமா?

ஓரை இது தூய தமிழ்ச் சொல். இராசிகளின் பொதுப் பெயர். ஆனால், வடமொழி நூலுள்ளும், கிரேக்க மொழியுள்ளும் காணப்படுதலின், வடமொழியே என்று புகலுவர். அதற்குக் காரணம் இரண்டு. தமிழரை ஏமாற்றி விடலாம் என்று அவர்கள் நினைப்பதொன்று. ஆராய்ச்சியில்லாமை மற்றொன்று. தொல்காப்பியத்துக் களவியல் 44_ஆம் நூற்பாவாகியமறைந்த ஒழுக்கத்து ஓரையும் நாளும் என்பதன் கண் காணப்படும் ஓரை என்னும் சொல்லைக் கிரேக்க மொழி எனக் கொண்டு, அவ்வாற்றால் தொல்காப்பிய காலத்தையே கி.மு. மூன்றாம் நூற்றாண்டென்று கூறி மகிழ்ந்து கொள்ளும் பகைவரும் […]

மேலும்....

செய்யக் கூடாதவை

வலிப்பு வந்தவரின் வாயில் கட்டை வைக்கக் கூடாது: வலிப்பு நோய் உள்ளவர்கள் வாகனம் ஓட்டக் கூடாது; நீச்சல் அடிக்கக் கூடாது; உயரமான இடத்தில் நிற்கக் கூடாது; மரம் ஏறக் கூடாது; அதிகம் கவலைப்படக் கூடாது; பதற்றம் அடையக்கூடாது.  வலிப்பு நோய் வந்தவர்கள் கையில் இரும்புச் சாவியைக் கொடுக்கக்கூடாது. அதனால் எப்பயனும் இல்லை. வலிப்பு நோய் வந்தவர்களை இடப்பக்கம் திருப்பிப் படுக்க வைத்துப் பற்கள் கிட்டிக் கொள்ளாமாலிருக்க இரப்பர் பந்து, அல்லது ரப்பர் பொருளை வைக்க வேண்டும். கட்டையைப் […]

மேலும்....

விளம்பரமில்லா வியக்கத்தகு பெரியார் தொண்டர் மூலக்காரப்பட்டி (மும்பை) திராவிடன்

– கி.வீரமணி விளம்பரத்தை நாடாது வினையாற்றும் தோழர்கள், தொண்டர்களின் பாசறைதான் தந்தை பெரியாரின் திராவிடர் கழகம். நெல்லை மாவட்டம் மூலக்காரப்பட்டி என்ற சிற்றூரிலிருந்து (பழைய பம்பாய்) இன்றைய மும்பைக்குச் சென்று ஒரு தொழிலாளியாகப் பணியாற்றிய மானமிகு தோழர் திராவிடன் ஒரு அற்புதமான ஒப்புவமையற்ற முதுபெரும் லட்சிய பெரியார் பெருந்தொண்டர். சுயமரியாதைச் சுடரொளியான சொக்கத்தங்கம். எளிமை, ஏழ்மை, இவைகளைப் பற்றிச் சிறிதும் கவலைப்படாத கறுப்புடைச் சிப்பாய். பம்பாய் திராவிடர் கழகத்தின் முன்னோடி-களில் ஒருவர். தொல்காப்பியனார், மந்திரமூர்த்தி, எஸ்.எஸ்.அன்பழகன், ஆர்.ஜெ.சுப்பையா, […]

மேலும்....

தன் மதிப்பு இயக்கத்தின் செம்மல்

– ஆ.திராவிடமணி(தமிழர் தலைவரின் ஆரம்பகால ஆசிரியர் 1940-இல் நான் தென்ஆற்காடு மாவட்டம் கடலூர் பழைய நகரில் ஒரு முஸ்லீம் ஆரம்பப் பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்தேன். அப்போதிருந்து திரு.கி.வீரமணி அவர்களைத் தெரியும். அப்போது வீரமணி அவர்களுக்கு வயது பத்துக்குள்தான் இருக்கும். பகுத்தறிவு போதனை பள்ளி ஆசிரியராக பணியாற்றியதோடு, மாலை வேளையில் நூல்நிலையக் கட்டிடத்தில் சில மாணவர்களுக்கு தனிப் பயிற்சி (ஜிவீவீஷீஸீ) அளித்து வந்தேன். திரு.வீரமணி அவர்களின் தந்தையார் திரு.கிருஷ்ணசாமி அவர்கள் சிறு தையலகம் வைத்து நடத்தி […]

மேலும்....