காப்பீடு செய்ய கருத்தில் கொள்ள வேண்டியவை

– ஒளிமதி

“ஆயுள் காப்பீடு மற்றும் மருத்துவக் காப்பீடு, எதிர்பாராத இழப்பு ஏற்படும்போது கைகொடுக்கும் என்பதுடன், அது தரும் பாதுகாப்பு உணர்வு, வாழ்வின் நிச்சயமின்மை குறித்த உங்களின் நிகழ்காலப் பதற்றத்தையும் குறைக்கும். குறைந்த கட்டணத்தில் வாழ்வின் பெரிய நிம்மதி தரும் காப்பீடுகளைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்’’ என்று முடித்தார் நிதி ஆலோசகர் ஸ்ரீதர்.

மேலும்....

நான் கண்ட – கொண்ட ஒரே தலைவர் பெரியார்தான்! – அண்ணா

அய்யாவின் அடிச்சுவட்டில்….144 – கி.வீரமணி

தந்தை பெரியார் நூற்றாண்டு விழா திராவிடர் கழகத்தின் சார்பில் சென்னையில் நடைபெற்ற பிறகு, மாவட்டங்களில் விழா நடத்த வேண்டும் என்ற திட்டப்படி திருச்சியிலே 18.02.1979 அன்று நடைபெற்ற அய்யா நூற்றாண்டு விழா ஊர்வலம் ஒரு புதிய வரலாற்றை அன்றைக்கு படைத்தது என்றால் அது மிகையாகாது.

மேலும்....

வீட்டிலே மின்சாரம் தயாரித்து விற்பனையும் செய்கிறார்!

கோவை, மருதமலை சாலையில் சாய்பாபா காலனியில் வசிக்கும் சிறீதர் என்ற சாதனையாளர்தான் இவர். தன் வீட்டில் மழை நீரை முழுமையாக சேகரிக்கிறார்.  காய்கறி கழிவில் பயோ கேஸ் உருவாக்குகிறார். இப்படிப்பட்ட அற்புத மனிதர் வீட்டிலே மின்சாரம் தயாரிப்பது பற்றி விளக்கினார்.

அடிக்கடி மின்தடை… எல்லா வேலையும் முடங்கி நின்னுச்சு மத்தவங்க மாதிரி அரசாங்கத்தைத் திட்டிக்கிட்டே விசிறியெடுத்து வீசிக்கிட்டு உக்காந்திருக்க முடியலே. ஏதாவது மாற்று ஏற்பாடு செய்யனும்னு திட்டமிட்டேன்.

மேலும்....

சிறுகதை : சங்கிலிச் சாமி

– கலைஞர் மு.கருணாநிதி

“சங்கிலியானந்த சாமிக்கு ஜே!’’
“சங்கிலியானந்த சாமிக்கு ஜே! ஜே! ஜே!’’

பக்தர்கள் குதித்தார்கள்; பரவசத்தால் நர்த்தனமாடினார்கள்; பரமானந்த கீதம் பாடினார்கள்.
“அஷ்டமா சித்துபுரி ஐயனே போற்றி! துஷ்டர் தம் துடுக்கடக்கும் தூயனே போற்றி! கஷ்டங்கள் தீர்த்திடும் எங்கள் கண்கண்ட தெய்வமே போற்றி! போற்றி!!’’

மேலும்....

மார்கழி மடமைகள்! சொர்க்கவாசல் மகிமை? – தந்தை பெரியார்

மார்கழி மாதம் வந்தால், வைகுண்ட ஏகாதசி என்று கூட்டம் கூட்டமாய் சீரங்கம் முதலிய ஊர்களுக்குப் பணச் செலவு செய்து கொண்டு போவதும், பொய்யையும் புளுகையும் காவடிக் கதையாய்ச் சொல்வதும், அறுத்துச் சமைத்த பாம்பும், கோழியும், மீனும் உயிர் பெற்று விட்டது என்பதும், மண் சர்க்கரை ஆகிவிட்டது என்பதும், வெட்டித் துண்டாக்கப்பட்ட குழந்தை உயிர் பெற்று விட்டது என்பதும் இதுபோல் இன்னும் பல பொய்களை வெட்கமில்லாமல் சொல்வதும், அழுக்குக் குட்டைகளில் குளித்தும், குடித்தும் பஞ்சாமிர்தம் எனும் அசிங்கத்தை உண்டும், அதனால் காலரா போன்ற கொடிய நோய்க்கு இரையாவதும் நாம் கண்டதுதானே! அசிங்கம், ஆபாசம், அறியாமை இவைதானே நமது பண்டிகைகளாக இருந்து வருகின்றன!

மேலும்....