உற்சாக சுற்றுலாத் தொடர் – 16

நடுக்கடலில் ஒரு நகரம்!   – மருத்துவர்கள் சோம&சரோ இளங்கோவன் கேமென் தீவுகள்! உலகத்தில் கேமென் தீவு அறியப் பட்டுள்ளது பணம் பதுக்கும் நாடு என்று! ஆம்! அங்கு அனைத்து வங்கிகளின் கிளைகளும் உலகச் செல்வந்தர்களின் பணமும் சட்டப்பூர்வமாகப் பதுக்கப்பட்டு வருகின்றது என்பது உண்மைதான். ஆனால், அங்கு அதற்காகச் சிறப்பான சட்ட திட்டங்கள் உள்ளன. அதற்கு உட்பட்டுத்தான் பல்லாயிரக்கணக்கான வெறும் காகித நிறுவனங்கள் அங்கே நிறுவப்பட்டுள்ளன. நடக்கும் பண்டமாற்றும் பெரும்பாலும் காகிதமும், இணைய பரிமாற்றமுமேதான்! மூட்டை மூட்டையான […]

மேலும்....

மாற்றுத் திறனாளிகளுக்கான மவுஸ் – கண்டுபிடிப்பு கூகுள் கண்காட்சிக்குத் தேர்வு!

உலகமே வியப்புடன் உற்று நோக்குகிறது.   16 வயதுதான் ஆகிறது, அதற்குள் ஆச்சரியமான ஒரு கண்டுபிடிப்பை நிகழ்த்தி, உலகளவிலான இளம் விஞ்ஞானிகள் பட்டியலில் இடம் பிடித்துவிட்டார் இவர். நிஷாந்த் குமார் கண்டுபிடித்துள்ள, மூச்சுக் காற்றால் இயங்கும் கம்ப்யூட்டர் மவுஸ், கூகுள் அறிவியல் கண்காட்சி 2015_க்கான போட்டியில் இறுதிப் பட்டியலுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

மேலும்....

அய்.ஏ.எஸ் ஆன தள்ளுவண்டித் தொழிலாளி!

அய்.ஏ.எஸ் ஆக வேண்டும் என்ற கனவு விதை, பாலகுருவின்  15 வயதில் முளைத்தது. அந்தக் கனவை மனதிலேயே தண்ணீர் ஊற்றி கொஞ்சம் கொஞ்சமாக வளர்த்தார். ஆனால், ஒன்றிரண்டு வருடங்களிலேயே முதல் தடை, மலை போல் எதிரே வந்து நின்றது. கூரை வீட்டில் வாழ்ந்த பாலகுருவின் படிப்பு பள்ளிக் கல்வியோடு நிறுத்தப்பட்டது. தினக் கூலி வேலை பார்த்த அவரது தந்தையால் அதற்கு மேல் பாலகுருவை படிக்க வைக்க முடியவில்லை. கல்லூரி வாழ்க்கை தொடங்காமலேயே கனவு வாடத் தொடங்கியது.

மேலும்....

சனாதனிகளுக்கு எதிராய் சாட்டை சுழற்றிய சட்டம்பி சாமிகள்!

கேரளத்தில் தன்மான விதை ஊன்றி உரிமைக்குரல் எழுப்பி ஒடுக்கப்பட்ட மக்களுக்காகப் போராடி விழிப்பூட்டியவர் நாராயண குரு என்று பலரும் அறிவர். ஆனால், நாராயண குரு விழிப்பு பெற, சிந்தனை பெற, கருத்துப்பெற காரணமாய் அமைந்தவர் குஞ்சன் பிள்ளை என்றழைக்கப் படும் சட்டம்பி சாமிகள் ஆவர். மக்கள் மத்தியில் இருந்த ஜாதிக் கொடுமைகளைக் கொண்டு வந்த ஆரிய பார்ப்பனர்களைக் கடுமையாகச் சாடினார். ஆரியர்கள் சுயநலத்திற்காக சமுதாயத்தையே பாழடித்து விட்டார்கள்; பொருளா-தாரத்தைச் சீரழித்துவிட்டார்கள் என்று குற்றம் சாட்டினார். இவரது கருத்துக்களை […]

மேலும்....

பெரியார் பற்றி அறிவுமதி

செருப்பெடுத்துஅடிச்ச போதும்சிரிச்சவர்டாபெரியார்!நாம செருப்புப் போட்டுநடக்கும் இந்தசிறப்புக்குஉரியார்! – பாவலர் அறிவுமதி

மேலும்....